Saturn Deviant Transit: சனி பகவானின் வக்ரப் பெயர்ச்சி.. கொடுமைகளில் இருந்து தப்பிக்கப்போகும் ராசிகள்!
Saturn Deviant Transit: சனி பகவான் வக்ரப் பெயர்ச்சி அடைவதால் நன்மை பெறும் ராசிகள் குறித்துப் பார்ப்போம்.

Saturn Transit: ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்கள், வக்ரம் அடைவது மட்டுமில்லாமல், அவ்வப்போது வக்ர நிவர்த்தியும் அடையும். வரும் ஜூன் 29ல், சனி பகவான், கும்ப ராசியில் வக்ரப் பெயர்ச்சி ஆகிறார். கும்பத்தில் சனி வக்ரப் பெயர்ச்சி ஆகி, வரும் நவம்பர் 15ஆம் தேதி வரை சஞ்சரிப்பார். இந்த காலகட்டத்தில் சில ராசியினருக்கு போதுமான சம்பளம், வசதி ஆகியவை கிடைக்கும். கும்பராசியில், சனி வக்ரப் பெயர்ச்சி அடைவதால் உண்டாகும் நன்மைகள் என்ன என்பது குறித்துப் பார்ப்போம்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 18, 2025 09:56 AMபணப் பிரச்சனைகள் நீங்க வேண்டுமா.. வியாழக்கிழமை வாழை மரத்தை வைத்து இந்த பரிகாரத்தை மட்டும் ட்ரை பண்ணுங்க..
Jun 18, 2025 09:49 AMகனவில் மழையைப் பார்ப்பது நல்லதா கெட்டதா?
Jun 18, 2025 09:39 AMதொழிலில் தடைகள் நீங்கி, வெற்றி தேடி வர என்ன செய்யணும் தெரியுமா.. புதன் கிழமை செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதோ!
Jun 16, 2025 02:00 PMஉங்கள் கனவில் இந்த பூவை கண்டால்.. வாழ்வில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பெறலாம்! கனவு சாஸ்திரம் சொல்லும் விஷயம்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
Jun 15, 2025 08:37 AMலட்சுமி தேவி மிகவும் பிடித்த 3 ராசிகள் இதோ.. செல்வம், கௌரவம், புகழ் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும் பாருங்க!
மேஷம்: இந்த ராசியினருக்கு, சனி பகவானின் வக்ரப் பெயர்ச்சியினால் கூடுதலான நல்ல பலன் கிடைக்கப்போகிறது. சனி பகவான், மேஷ ராசியில் கூடுதலான வருவாய்க்கு இந்த காலகட்டத்தில் வாய்ப்பினை ஏற்படுத்தி தருகிறார். பணிபுரியும் காலத்தில் உண்டான பகைவர்களின் தொல்லை நீங்கும். இத்தனை நாட்களாக எந்த தொழில் செய்தாலும் ஒட்டவில்லை என வருத்தப்படும் மேஷ ராசியினர், சனியின் வக்ரப் பெயர்ச்சி காலத்தில் செய்யும் தொழிலால் நன்மைகளைப் பெறுவீர்கள். தம்பதிகள் இடையே இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். அலுவலக அரசியல் ஓய்ந்து பணியிடத்தில் உங்களது வேலைக்கு மரியாதை கிடைக்கும். தனியார் மற்றும் எம்.என்.சி நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு சம்பளம் கணிசமாக உயரும். நீண்ட நாட்களாக நல்ல ஒரு ஒப்பந்தம் கிடைக்காத தொழில் முனைவோர், இக்காலகட்டத்தில் நல்ல ஒப்பந்தங்களைப் பெறுவர்.
மிதுனம்: சனி பகவானின் வக்ரப் பெயர்ச்சியால், வெகுநாட்களாக பிரச்னையைச் சந்தித்து வந்த மிதுன ராசியினர் சற்று ஆசுவாசம் அடைவார்கள். இந்த காலத்தில் வராத கடன்கள் வந்து சேரும். வெகுநாட்களாகப் பார்த்து தட்டிப்போன வரன்கள், இனிமேல் நல்ல செய்தியை சொல்லிவிடுவார்கள். திருமணம் கை கூடும். குழந்தையில்லாத மிதுனராசியினருக்கு கரு நிற்கும். இந்த காலகட்டத்தில் வெகுநாட்களாக இம்மியளவு கூட நகராத பணிகள், படிப்படியாக நடப்பதை கண்கூடாகப் பார்ப்பீர்கள். அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பிரகாசமான வெற்றி கிடைக்கும். உங்கள் மன உறுதி வலுவாக இருக்கும். மேலும் உங்கள் மூத்த அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளின் ஆதரவுடன் நீங்கள் முன்னேற முடியும்.