Mercury: கும்பராசியில் புதன் சேர்க்கையால் உண்டான யோகம்.. அடிதூளாக நன்மைபெறும் ராசிகள்!
கும்பராசியில் சஞ்சரிக்கும் புதனால் நன்மைபெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.
இந்த பிப்ரவரி மாதத்தின் இறுதியில் சனி பகவான் ஆளுகை செலுத்தும் கும்பராசியில் புதன், சஞ்சரிக்கிறார். இதனால் விபரீத ராஜயோகம் உண்டாகிறது.
புதனால் உண்டான விபரீத ராஜயோகத்தால் சில ராசியினர் அடுத்த ஒருவாரத்துக்கு எதிர்பாராத நன்மைகளைப் பெறப்போகின்றனர். அத்தகைய நன்மை தரும் ராசிகள் குறித்துக் காண்போம்.
கடகம்: இந்த ராசியின் 8ஆவது இல்லத்தில் புதன் இந்த விபரீத ராஜயோகத்தை ஏற்படுத்தியிருப்பதால், சிலர் பயணங்கள் மேற்கோள்வர். மேலும், மூளையை மூலதனமாக வைத்து செய்யும் தொழில்களில் லாபத்தைப் பெறுவர். இதனால் வங்கியில் சேமிப்புத்தொகை அதிகரிக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும் என்பதால் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற வாய்ப்புண்டு.
கன்னி: இந்த ராசியின் 6ஆம் இல்லத்தில் புதன், விபரீத ராஜயோகத்தை உண்டாக்கியுள்ளார். இக்கால கட்டத்தில் உங்கள் கடுமையான உழைப்பு, எளிதாகப் பணமாக மாறும். வம்பு, வழக்குகள் தீர்ந்து சாதகமான தீர்ப்புகள் வரும். பணியிடத்திலும் தொழில் புரியும் இடத்திலும் சாதகமான சூழல் தொழில் வளர்ச்சி உண்டாகும்.
தனுசு: இந்த ராசியின் 3ஆம் இல்லத்தில் விபரீத ராஜயோகத்தை உண்டாக்கியுள்ளார். இக்காலகட்டத்தில் தனுசு ராசியின் தன்னம்பிக்கை கூடும். தொழில் முனைவோர், வெளிநாட்டுக் கம்பெனியின் ஆர்டரைப் பிடிக்க இக்கால கட்டத்தில் முயன்றால் சாதகமான பலன்கள் கிடைக்கும். இத்தனை நாட்களாக வாங்கி வைத்து இருந்த ரியல் எஸ்டேட் பிராப்பர்டிகள் நல்ல விலைக்கு விற்பனையாகும்.
பொறுப்பு துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்