Transit of Lord Venus in Taurus: ரிஷப ராசியில் ஏறி அமரும் சுக்கிர பகவான்.. பெட்டி பெட்டியாக பணத்தை அள்ளப்போகும் ராசிகள்!
Transit of Lord Venus in Taurus: ரிஷப ராசியில் சுக்கிர பகவான் பெயர்ச்சி ஆவதால், துன்பத்தில் இருந்த ராசிகள் இன்பம் காணப்போகின்றன. அவை எந்த ராசிகள் என்பது குறித்துப் பார்க்கலாம்.
Transit Of Venus 2024: இந்து நாட்காட்டியின்படி, சுக்கிர பகவான், மே 19அன்று ரிஷப ராசியில் இரவு 8:29 மணிக்கு நுழைகிறார். இந்த மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். சுக்கிரன் ரிஷப ராசியில் நுழையும் போது, ஒரே நேரத்தில் குரு மற்றும் சுக்கிரனின் சேர்க்கையும் நடக்கும். ஏனெனில், ரிஷப ராசியில் முன்பே குருவின் பார்வை வீசிவருகிறது.
திருமணத்துக்கு ஜாதகப்பொருத்தம் பார்க்கும்போது களத்திரகார சுக்கிரனின் நிலை, புத்திரகார குருவின் நிலை அதனையும் சேர்த்து பார்த்துக்கொள்வது நல்லது.
சுக்கிரன் ஒருவரின் வாழ்க்கையில் தேவைப்படும் மனநிறைவு, நல்ல உடல்நலம் மற்றும் திடகாத்திரமான மனதைத் தரலாம். ராசியில் சுக்கிரன் வலுவான,அவை வலுவான ராசியினருக்கு மகிழ்ச்சி மற்றும் நிம்மதியை அடைவதில் உயர் வெற்றியுடன் அனைத்து சாதகமான முடிவுகளையும் பெறலாம்.
ரிஷப ராசிக்கு சுக்கிரன் மாறி சிலருக்கு நிதிப் பலன்களை வழங்குகிறார். இந்த 3 ராசிக்காரர்கள் முதலீடு மற்றும் வேலைகள் மூலம் நிதி நன்மைகளைப் பெறுவார்கள். அவை எந்தெந்த ராசியினர் என்பது குறித்துப் பார்ப்போம்.
ரிஷபம்:
சுக்கிரனின் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயம், முதலீடுகள் ஆகியவற்றைத் தரக்கூடும். பணியிடத்தில் ஊதிய உயர்வு, புதிய வருமான ஆதாரங்கள் ஆகியவற்றுக்கான வழிகள் பிறக்கும். திருமண வாழ்க்கையில் அமைதி நிலவும். காதல் திருமணங்களும் வெற்றியடையும். முன்பின் தெரியாதவர்களின் வார்த்தைகளால் பிரச்னைகள் வரலாம். அதனை நம்பினால் மனநலன் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, தவறான காரியங்களைச் செய்யாதீர்கள். இல்லையெனில் நிதி இழப்பு ஏற்படும். நிதானத்துடன் வேலைசெய்தால் நிச்சயம் வெற்றியுண்டு.
கடகம்:
சுக்கிர பகவான் மற்றும் குருவின் சேர்க்கையால் கடக ராசிக்காரர்களுக்கு அதீத நன்மைகள் கிடைக்கும், உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும், வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இந்த ராசி ராசியினருக்கு திருமண உறவில் இருந்த பிரச்னைகள் நீங்கி கணவன் - மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு ஆசீர்வாதம் கிடைக்கும் மற்றும் அதிகாரிகளின் உதவி கிட்டும். இந்த காலத்தில் பணத்தை கொஞ்சம் கூடுதலாகச் சம்பாதிக்க வாய்ப்பு உருவாகும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி நன்றாக இருக்கும். வேலையில் வெற்றியும், வீட்டில் அமைதியும் நிலவத் தொடங்கும், கணவன் - மனைவியுடனான சச்சரவுகள் தீரும், ஆரோக்கியம் மேம்படும், பழைய நோய்கள் நீங்கும், சில வேலைகளுக்காக வெளிநாடு செல்ல நேரிடும். விருச்சிக ராசியினர் இடையே இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவு பிறக்கும். இழந்த உறவின் மகத்துவத்தை உணர்வீர்கள்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்
டாபிக்ஸ்