தமிழ் செய்திகள்  /  Astrology  /  The Transformative Power Of Shivaraja Yogam In Astrology

Shivaraja Yogam: ‘மேஷம் முதல் மீனம் வரை!’ அடக்கி ஆளும் சிவராஜ யோகம் யாருக்கு?

Kathiravan V HT Tamil
Jan 23, 2024 08:00 AM IST

“Shivaraja Yogam: பெரும்பாலும் ஆளும் அதிகாரவர்கத்தினருக்கு சிவராஜ யோகம் உண்டு”

சிவராஜ யோகம்
சிவராஜ யோகம் (pixabay)

ட்ரெண்டிங் செய்திகள்

ஒருவரது ஜாதகத்தில் சூரிய பகவானை குரு பகவான் பார்ப்பதால் சிவராஜ யோகம் உண்டாவதாக ஜோதிட சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. 

ஒருவரது ஜாதகத்தில் சூரிய பகவானோடு குரு பகவான் சேர்ந்திருந்தாலும் சிவராஜ யோகம் ஏற்படும் என்றும் சில ஜோதிட நூல்கள் கூறுகின்றன. 

சூரிய பகவானும் குரு பகவானும் நேருக்கு நேர் நின்று சமசப்தமாக பார்க்கும் போதும் இந்த சிவராஜ யோகம் உண்டாகிறது. 

குரு அதிவக்ர நிலையில் இருக்கும் போது இந்த யோகம் இன்னும் மேன்மையான யோகங்களை ஜோதிடர்களுக்கு தரும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். 

அனைத்திலும் மேலானதாக ’சிவம்’ உள்ளது என சாஸ்திரங்கள் கூறுகின்றன. அத்தகைய அனைத்திலும் மேலாக செல்லக்கூடிய இடத்தை கொடுப்பதால் இது ’சிவராஜ யோகம்’ எனப்படுகிறது. 

அரசியல் உள்ளிட்ட ஆளும் வர்கத்தில் உள்ள பெரும்பாலானோருக்கு சிவராஜ யோகம் உண்டு என ஜோதிடர்கள் கூறுகின்றனர். 

சூரிய பகவானுக்கு 7ஆம் இடத்தில் அதிவக்கிர நிலையில் குரு இருந்து இருவரும் பரஸ்பர பார்வையை பரிமாறிக் கொள்ளும் போது இந்த சிவராஜயோகம் நிகழ்கிறது

சிவராஜ யோகம் கொண்டவர்கள் ஒரு சிறிய அலுவலகத்தில் சாதாண வேலையில் இருந்தாலும் விரைவில் தலைமை பொறுப்புக்கு வந்துவிடுவர். 

சிவராஜ யோகம் உள்ளவர்கள் பொதுவாக ஆன்மீக ரீதியாகவும், அறிவுசார் ரீதியாகவும் சிறந்து விளங்குவார்கள். அவர்கள் சிறந்த தலைவர்கள், அரசியல்வாதிகள், அறிஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொழிலதிபர்களாக மாறுவார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சிறந்த புகழ், செல்வம் மற்றும் செல்வாக்கை அடைகிறார்கள்.

சிவராஜ யோகம் உள்ளவர்களுக்கு சிறந்த அறிவு மற்றும் புரிதல்,  ஆன்மீக மனம், சிறந்த தலைமை திறன்கள், அரசியல் மற்றும் சமூக செல்வாக்கு, பொருளாதார செழிப்பு, நீண்ட ஆயுள் உள்ளிட்டவை கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்