தமிழ் செய்திகள்  /  Astrology  /  The Signs To Be Conquered By The Three Planets That Will Come Together

3 Planets: ஒன்றுசேரப்போகும் 3 கிரகங்கள்.. தூள்கிளப்பப்போகும் ராசிகள்!

Marimuthu M HT Tamil
Feb 26, 2024 02:17 PM IST

ஒன்றுசேரப்போகும் 3 கிரகங்களால் வெல்லப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.

3 Planets: ஒன்றுசேரப்போகும் 3 கிரகங்கள்.. தூள்கிளப்பப்போகும் ராசிகள்!
3 Planets: ஒன்றுசேரப்போகும் 3 கிரகங்கள்.. தூள்கிளப்பப்போகும் ராசிகள்!

ட்ரெண்டிங் செய்திகள்

ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்களின் ராஜா சூரிய பகவான், மாசி மாதத்தில் கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். ஏற்கனவே, கும்பத்தில் சனி பகவான் மார்ச் 18ஆம் தேதி அஸ்தம ஸ்தானத்தில் இருந்து மீண்டும் உதயம் ஆகிறார். மேலும் புதன் பகவானும் கும்பத்தில் இருப்பதால், திரிகிரஹியோகம் உண்டாகி மூன்று ராசிகளுக்கு வருவாயைப் பெருக்கப்போகிறது.

மேஷம்: இந்த ராசியினருக்கு, சனி மற்றும் புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் பணியிடத்தில் நீடித்து வந்த அலுவலக அரசியல் குறையும். எதிரிகள் நிலைகுலைவர். புதிய நண்பர்கள் உருவாகுவர். பணியிடத்தில் தொழில்புரியும் இடத்தில் சக நண்பர்களின் ஆதரவு பெருகும். இந்த காலத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.

கடகம்: இந்த ராசியினருக்கு மூன்று கிரக சேர்க்கையால், உடல் நலம் மேம்படும். முன்பே செய்த முதலீடுகளால் வருவாய் அதிகரிக்கும். நல்ல தகவல் வரும்.

சிம்மம்: இந்த ராசியினருக்கு மூன்று கிரக சேர்க்கையால் உத்வேகம் பிறக்கும். சனிபகவானின் ஆசீர்வாதத்தால் வெற்றி தான். இத்தனை நாட்களாக இருந்துவந்த அவப்பெயர் நீங்கும். தடைபட்ட காரியங்கள் நல்ல முறையில் நடந்துமுடியும். தொழிலில் இருந்த சுணக்கம் மாறி பணவரவு கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்