Money Rain: புதிதாக உருவாகும் லட்சுமி நாராயண யோகம்.. பணமழையில் நனையப்போகும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Rain: புதிதாக உருவாகும் லட்சுமி நாராயண யோகம்.. பணமழையில் நனையப்போகும் ராசிகள்

Money Rain: புதிதாக உருவாகும் லட்சுமி நாராயண யோகம்.. பணமழையில் நனையப்போகும் ராசிகள்

Marimuthu M HT Tamil
Jan 23, 2024 05:01 PM IST

புதிதாக உருவாகும் லட்சுமி நாராயண யோகத்தால் பணமழையில் நனையப்போகும் ராசிகள் குறித்துப் பார்ப்போம்.

புதிதாக உருவாகும் லட்சுமி நாராயண யோகத்தால் பணமழையில் நனையப்போகும் ராசிகள்
புதிதாக உருவாகும் லட்சுமி நாராயண யோகத்தால் பணமழையில் நனையப்போகும் ராசிகள்

இந்நிலையில் நவகிரகங்களில் புதனும் சுக்கிரனும் ஒரு ராசியில் சஞ்சரித்தால் சுப மங்கலமான லட்சுமி நாராயண ராஜயோகம் உண்டாகும். அது வரும் பிப்ரவரி 12ஆம் தேதி மகர ராசியில் நடக்கிறது.

இதனால் அதிர்ஷ்டம்பெறும் மூன்று ராசிகள் குறித்துப் பார்ப்போம்.

மேஷம்: லட்சுமி நாராயண யோகத்தால் நிதி நிலை மேம்படும். தொழில் செய்யக்கூடியவர்களுக்கு வருமான ஆதாரம் பெருகும். வெகுநாட்களாக புதிய முதலீடு செய்ய நேரம் பார்த்து இருந்த மேஷ ராசியினர், இந்த காலத்தில் லாபம் பெறுவீர்கள். சுக்கிரனின் கருணையால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கும். பிரிந்த சென்ற கணவன் - மனைவி ஒன்று சேர்வர். உடல் நலம்மேம்படும்.

கன்னி: இந்த ராசியினருக்கு கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். இந்த காலத்தில் தொழில் விருத்தியாகி பணவரவு அதிகமாகும். எனவே,அதைப் பயன்படுத்தி வீட்டடி மனை மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யலாம்.

பணியிடத்தில் பணிபுரிபவர்களுக்கு இன்சென்டிவ் கிடைக்கும். குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். இக்காலத்தில் வாழ்க்கை செழிப்பாகும்.

மகரம்: இந்த ராசியினருக்கு லட்சுமி நாராயண யோகத்தால் எதிர்பாராத நற்பலன்கள் கிடைக்கப்போகின்றன. தொழிலில் வெற்றியும், பணியிடத்திலும் பாராட்டும் கிடைக்கும். லட்சுமி தேவியின் அருளால் பணவரவு அதிகரிக்கும். இல்லறத்துணையுடன் இருந்த பிரச்னை நீங்கும். ஒற்றுமை அதிகரிக்கும். அபரிவிதமான நன்மைகள் நடக்கும் காலகட்டம்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்