தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Shani: வக்ரமாய் மாறும் சனி பகவான்.. வெறிபிடித்து முன்னேறப்போகும் ராசிகள்.. இந்த ராசிக்காரங்ககிட்ட வச்சுக்காதீங்க!

Lord Shani: வக்ரமாய் மாறும் சனி பகவான்.. வெறிபிடித்து முன்னேறப்போகும் ராசிகள்.. இந்த ராசிக்காரங்ககிட்ட வச்சுக்காதீங்க!

Marimuthu M HT Tamil
Apr 29, 2024 03:57 PM IST

Lord Shani: சனி பகவானின் வக்ரப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.

சனி
சனி

இரண்டரை ஆண்டுகாலம் ஒரு ராசியில் தங்கும் சனிபகவான், ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு தடவை வக்ரம் அடைகிறார். சனி பகவானின் பார்வையில் ஐந்தாம் இல்லத்தில் சூரியபகவான் பயணிக்கும்போது, வக்ரம் அடைந்து, ஒன்பதாம் இல்லத்துக்குச் செல்லும்போது வக்ர நிவர்த்தி ஆகிறார்.

தற்போது சனி பகவான் கும்ப ராசியில் தன் ஆளுகையைச் செலுத்தி வருகிறார். சனி பகவான், ஜூன் 29ஆம் தேதியான இரவு 12:35 மணிக்கு வக்ரமாகப் பெயர்கிறார். இந்த நிலையில் கும்ப ராசியில் நவம்பர் 15ஆம் தேதி வரை நீடிக்கும்.

இதனால் ஜூன் 30ஆம் தேதி முதல் சில ராசியினர், மிக நல்ல வாய்ப்புகளைப் பெறுகின்றனர். குறிப்பாக, சில ராசியினருக்கு நல்ல பெயர், ஊதிய உயர்வு ஆகியவை உண்டாகும்.

அப்படி 12 ராசிகளில் சனியின் வக்ர நிலையினால் அதி அற்புதமான பலன்களைச் சந்திக்கும் ராசிகள் குறித்துக் காண்போம்.

கன்னி: கன்னி ராசியினர், சனியின் வக்ரப்பெயர்ச்சியால் எண்ணற்ற நற்பலன்களை அறுவடை செய்யப்போகின்றனர். பணியில் இருப்பவர்களுக்கு, சனி பகவானின் வக்ரப் பெயர்ச்சியால், பணியிடத்தில் வெகுநாட்களாக முயற்சித்துக் கொண்டிருந்த டிரான்ஸ்ஃபர் கிடைக்கும். அதேபோல், நீண்டநாட்களாக நடக்காமல் இருந்த திருமணம், குழந்தைப்பேறு ஆகியவை இனிமேல் வாய்க்கும். வெகுநாட்களாக இருந்த சண்டை சச்சரவுவுடன் இருந்த குடும்ப உறுப்பினர்கள் பகை நீங்கி, உறவாடுவர். 

இந்த காலகட்டத்தில் வீடு இல்லாத கன்னி ராசியினருக்கு வீடு வாங்கும் யோகமும், வாகனங்கள் இல்லாத கன்னி ராசியினருக்கு வாகனங்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பணியிடத்தில் உங்களைப் பகைவர்களாகப் பார்த்தவர்கள், நண்பர்களாகப் பார்க்கும் நிலையும் ஏற்படும். ஆனாலும் சில பிரச்னைகள் வரும்போது வாயைத் திறக்காமல் இருந்தால் தேவையற்ற பிரச்னைகளில் இருந்து தப்பலாம். திருமணம் ஆகிய மனைவிமார்கள், குழந்தைகளை விட்டுப் பிரிந்து சென்று, மேற்படிப்பு படிக்கும் சூழல் உண்டாகும்.

துலாம்: துலாம் ராசியினருக்கு சனி பகவானின் வக்ரப் பெயர்ச்சியால், தொலைத்த பணத்தைப் பெறுவீர்கள். சனி பகவானால் நீண்ட நாட்களாக தடைபட்ட பணிகள் கைகூடும். துலாம் ராசியினருக்கு இத்தனை நாட்களாக,தொழிலில் இருந்த மந்தத்தன்மை மாறும். தொழில் முனைவோருக்கு, புதிய வாடிக்கையாளர்களால் லாபம் கிடைக்கும். வெகுநாட்களாக இப்படி ஒரு வாழ்க்கை வாழவேண்டும் என்று ஆசைப்பட்டு, முடியாத, துலாம் ராசியினருக்கு, நீங்கள் நினைத்த வீட்டு உபயோகப்பொருட்களை வாங்குவீர்கள்.

மீனம்: சனி பகவானின் வக்ரப் பெயர்ச்சியால் நீண்டநாட்களாக கிடைக்கவேண்டிய பணம் கைவந்து சேரும். இந்த காலகட்டத்தில் இருந்த நிதிச்சுமை பிரச்னைகள் குறையும். வியாபாரம் செய்பவர்களுக்கு உங்களின் இனிமையான பேச்சினால் நன்மை கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்களது பணியிடத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel

டாபிக்ஸ்