’மேஷம் முதல் மீனம் வரை! எலான் மஸ்க் முதல் அம்பானி வரை!’ உலக பணக்காரர்கள் இந்த ராசிக்காரர்கள்தான் அதிகம்!
UK Cashfloat அமைப்பின் புள்ளி விவரத்தின் படி, உலகெங்கிலும் உள்ள கோட்டீஸ்வரர்களின் ராசிகளை ஆய்வு செய்து ஆய்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
நம்மில் பலர் ஜோதிடம் மற்றும் ஜாதகத்தை நம்புவதில்லை. அப்படி இருக்கையில் அதை முற்றிலும் பொய் என்று ஒதுக்கிவிட முடியாது. ஜோதிடம், ராசி பலன்கள், கைரேகை போன்ற விஷயங்கள் பல ஆண்டுகளாக அறிவியலுக்கு சவாலாக உள்ளது. ஆனால் இதில் உண்மை இருப்பதாக பொதுமக்கள் நம்புகிறார்கள்.
இன்றும் மக்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகள், திருமண உறவு, நிதி, சொத்து தகராறு போன்ற பிரச்சனைகளுக்கு ஜோதிடத்தை தீர்வாக நம்புகிறார்கள்.
UK Cashfloat அமைப்பின் புள்ளி விவரத்தின் படி, உலகெங்கிலும் உள்ள கோட்டீஸ்வரர்களின் ராசிகளை ஆய்வு செய்து ஆய்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான ஃபோர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலில் உள்ள முதல் 300 பில்லியனர்களின் பிறந்த தேதித் தகவலைப் பயன்படுத்தி அவர்களது ராசி குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு உள்ளனர்.
இந்த ஆய்வில் சுக்கிரனை அதிபதியாக கொண்ட துலாம் ராசிக்காரர்கள் அதிக செல்வந்தர்களாக இருப்பது தெரிய வந்து உள்ளது.
எந்த ராசியில் பணக்காரர்கள் அதிகம்?
ஃபோர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் உள்ள ராசிகளின் அடிப்படையில் பணக்காரர்களின் சதவீதம் இதோ!
- துலாம் - 12 சதவீதம்
- மீனம் - 11 சதவீதம்
- ரிஷபம் - 10 சதவீதம்
- சிம்மம் - 9 சதவீதம்
- மேஷம் - 8 சதவீதம்
- கன்னி - 8 சதவீதம்
- மிதுனம் - 8 சதவீதம்
- கும்பம் - 7.5 சதவீதம்
- கடகம் - 7.5 சதவீதம்
- தனுசு - 7.5 சதவீதம்
- விருச்சிகம் - 6 சதவீதம்
- மகரம் - 5.5 சதவீதம்
உலக பணக்காரர்களின் ராசி விவரங்கள்
இந்த பட்டியலின் படி சுக்கிர பகவானை அதிபதியாக கொண்ட துலாம் ராசிக்காரர்கள் முதலிடத்தில் உள்ளது. அதை தொடர்ந்து குரு பகவானை அதிபதியாக கொண்ட மீனம் ராசி உள்ளது. உலகின் முதல் 10 பணக்காரர்கள் மீன ராசிக்காரர்கள்.
- பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் குடும்பம் (நிகர மதிப்பு: $214.9 பில்லியன்) - ராசி: மீனம்
- எலோன் மஸ்க் (நிகர மதிப்பு: $198.2 பில்லியன்) - இராசி: விருச்சிகம்
- ஜெஃப் பெசோஸ் (நிகர மதிப்பு: $120.4 பில்லியன்) - ராசி: மகரம்
- லாரி எலிசன் (நிகர மதிப்பு: $112.3 பில்லியன்) - ராசி: சிம்மம்
- வாரன் பஃபெட் (நிகர மதிப்பு: $107.3 பில்லியன்) - ராசி: கன்னி
- பில் கேட்ஸ் (நிகர மதிப்பு: $107.0 பில்லியன்) - ராசி: விருச்சிகம்
- கார்லோஸ் ஸ்லிம் ஹெலு மற்றும் குடும்பம் (நிகர மதிப்பு: $90.7 பில்லியன்) -ராசி: கும்பம்
- முகேஷ் அம்பானி (நிகர சொத்து: $86.0 பில்லியன்) - ராசி: மேஷம்
- ஸ்டீவ் பால்மர் (நிகர மதிப்பு: $83.1 பில்லியன்) - ராசி: மேஷம்
- லாரி பேஜ் (நிகர மதிப்பு: $82.0 பில்லியன்) - ராசி: மேஷம்
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.