Lord Sani: விரட்டி விரட்டி அடிக்கப்போகும் சனி.. சிக்கி சின்னாபின்னமாகப்போகும் ராசிகள்.. எச்சரிக்கையா இருங்க பாஸ்!
Lord Sani: சனி பகவான் கும்ப ராசியில் இருந்துகொண்டு, தனது மூன்றாம் இல்ல ஸ்தானமான மேஷ ராசியைப் பார்ப்பதாலும், சனி மற்றும் செவ்வாயின் பார்வை ஒன்றுடன் ஒன்று மோதுவதாலும் கெடு பலன்களைச் சந்திக்கப் போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.

Lord Sani: ஜோதிட சாஸ்திரத்தின்படி, நவகிரகங்களின் நகர்வு, பெயர்ச்சி, கிரகங்கள் 12 ராசிகள் மீது பார்க்கும் பார்வை, மறைந்து இருந்து பார்க்கும் திறன் போன்ற பல்வேறு காரணிகளால், சில ராசியினருக்கு நன்மையும் சில ராசியினருக்கு தீமையும் நடக்கிறது.
அப்படி கிரகங்களில் மெதுவாக நகரக் கூடிய சனி பகவான், பார்க்கும் ராசியில் அவர்களுக்கு கஷ்டங்கள் அதிகமாக இருக்கும். சனி பகவான் தான் சஞ்சரித்த இடத்தில் இருந்து ஏழாம் மற்றும் பத்தாம் இடத்தில் பார்க்கும் பார்வை சிறப்புமிக்கது. இப்படி பார்க்கையில் மூன்றாம் ஸ்தானத்தில் பார்க்கும் பார்வையானது, பலருக்குச் சிரமங்களைத் தருகிறது. தற்போது கும்ப ராசியில் சஞ்சரித்து வருகிறார், சனி பகவான். அதேபோல், மேஷ ராசியில் ஜூன் 1ஆம் தேதி முதல் செவ்வாய் பெயர்ச்சி அடைந்துள்ளது. தற்போது, சனியின் மூன்றாம் இல்லப் பார்வை மேஷ ராசியில் இருப்பதாலும், செவ்வாய் மீது சனியின் பார்வையின் தாக்கத்தாலும் சில ராசியினர் கடுமையான பலன்களைச் சந்திக்கப்போகிறார்கள். அதேபோல், அவர்களின் உடல்நலத்தில் பிரச்னை, பண இழப்பு ஆகியப் பிரச்னைகளும் ஏற்படக் கூடும்.
சனியின் மூன்றாம் பார்வையால் சிரமத்தைச் சந்திக்கப்போகும் ராசிகள் குறித்துப் பார்ப்போம்.
கடகம்:
சனி பகவான் கும்ப ராசியில் இருந்துகொண்டு, தனது மூன்றாம் இல்ல ஸ்தானமான மேஷ ராசியைப் பார்ப்பதாலும், சனி மற்றும் செவ்வாயின் பார்வை ஒன்றுடன் ஒன்று மோதுவதாலும், கடக ராசியினருக்கு சிக்கல்கள் உருவாகும். இதனால், பண இழப்பு ஏற்படும். தொழில் செய்யும் நபர்களுக்கு வருவாயில் மந்த நிலை நீடிக்கும். முன்பு சம்பாதித்ததுபோல், சம்பாதிக்கமுடியாத சூழல் தற்போது உண்டாகும். பணியிடத்தில் தேவையற்ற பணி அழுத்தங்களைப் பெறலாம். இல்வாழ்க்கைத் துணையுடன், தேவையற்ற சண்டை சச்சரவுகளை வளர்க்காதீர்கள். பொறுமை காக்கவும். உடல் நலன் இக்காலத்தில் பாதிக்கப்படலாம் என்பதால், தினமும் சுவாசப்பயிற்சி, யோகா மற்றும் நடைப்பயிற்சியினை பின்பற்றுங்கள். எங்கும் பணத்தினை முதலீடை செய்வதைத் தவிருங்கள். முடிந்தவரை, பொறுமையாக இருங்கள்.
கன்னி:
சனி பகவான் கும்ப ராசியில் இருந்துகொண்டு, தனது மூன்றாம் இல்ல ஸ்தானமான மேஷ ராசியைப் பார்ப்பதாலும், சனி மற்றும் செவ்வாயின் பார்வை ஒன்றுடன் ஒன்று மோதுவதாலும், கன்னி ராசியினர் வாழ்வில் மோசமான பின்விளைவுகளைச் சந்திப்பீர்கள். விபத்து அபாயம் இருக்கிறது. இரவில் பயணிக்கும்போது கவனமாகவும், பொறுமையாகவும் வாகனத்தை ஓட்டக் கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் எதிரிகளின் கை ஓங்கி உள்ளதால், பணியிடத்திலோ, தொழில் செய்யுமிடத்திலோ யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். மன அழுத்தம் உண்டாக வாய்ப்புள்ளதால், தினமும் யோகா செய்வது நன்மையைத் தரும். பணிபுரிபவர்கள், அலுவலகத்தில் எச்சரிக்கையுடன் தேவையற்ற நபர்களுடன் பேசுவதையும் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.
துலாம்:
சனி பகவான் கும்ப ராசியில் இருந்துகொண்டு, தனது மூன்றாம் இல்ல ஸ்தானமான மேஷ ராசியைப் பார்ப்பதாலும், சனி மற்றும் செவ்வாயின் பார்வை ஒன்றுடன் ஒன்று மோதுவதாலும், துலாம் ராசியினருக்கு தீங்கினை விளைவிக்கும். யாருக்கும் பணம் கொடுக்காதீர்கள். யாரை நம்பியும் கடன் கொடுக்க, ஜாமீன் கையெழுத்துப் போடாதீர்கள். இந்த காலத்தில் வரன் பார்க்காதீர்கள். பார்த்தால் திருமணத்திற்குப் பின் பிரிவு ஏற்படலாம். சில காலம் பொறுமை காத்திருக்கவும். பணியிடத்தில் அதிகமான பணியை உங்கள் மீது திணிப்பார்கள். குடும்பத்தில் சொத்துக்களால் பிரச்னை உண்டாகலாம். எனவே, பொறுமை காக்கவும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்