அடுத்த இரண்டு மாதங்கள்.. பொன்னான நேரத்தைப் பெற்று சம்பாத்தியத்தில் முன்னுக்குப் போகும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  அடுத்த இரண்டு மாதங்கள்.. பொன்னான நேரத்தைப் பெற்று சம்பாத்தியத்தில் முன்னுக்குப் போகும் ராசிகள்

அடுத்த இரண்டு மாதங்கள்.. பொன்னான நேரத்தைப் பெற்று சம்பாத்தியத்தில் முன்னுக்குப் போகும் ராசிகள்

Marimuthu M HT Tamil
Oct 27, 2024 05:40 PM IST

அடுத்த இரண்டு மாதங்கள் பொன்னான நேரத்தைப் பெற்று சம்பாத்தியத்தில் முன்னுக்குப் போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.

அடுத்த இரண்டு மாதங்கள் பொன்னான நேரத்தைப் பெற்று சம்பாத்தியத்தில் முன்னுக்குப் போகும் ராசிகள்
அடுத்த இரண்டு மாதங்கள் பொன்னான நேரத்தைப் பெற்று சம்பாத்தியத்தில் முன்னுக்குப் போகும் ராசிகள்

சில நேரங்களில் நவக்கிரகங்கள் பிற்போக்கு இயக்கத்திலும் நகரும். இது அனைத்து நிலைகளிலும் சிறப்பு விளைவுகளை ஏற்படுத்துகிறது.

தற்போது சுக்கிரன் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். நவம்பர் முதல் வாரத்தில் தனுசு ராசியில் நுழைகிறார். அதன் பிறகு, சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் நவம்பர் 15ஆம் தேதி நேர் பாதையில் செல்வார். அதேபோல், நவம்பர் 16ஆம் தேதி, சூரியன் விருச்சிக ராசிக்குள் நுழைவார். டிசம்பர் 16ஆம் தேதி வரை அவர் அதே ராசியில் இருப்பார். பின்னர் நவம்பர் 26ஆம் தேதி புதனின் பெயர்ச்சி இருக்கும். இந்த கிரகங்களின் இயக்கம் ஐந்து ராசிகளுக்கு மங்களகரமானதாக இருக்கும். இந்த ஆண்டின் அடுத்த இரண்டு மாதங்கள் மங்களம் பெறும் அந்த ராசிகள் குறித்துப் பார்ப்போம்.

அடுத்த இரண்டு மாதங்களில் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்:

ரிஷபம்: ரிஷப ராசியில், குரு பகவான் தற்போது பிற்போக்கு கட்டத்தில் உள்ளார். எனவே, வரக்கூடிய நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள் உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். குறிப்பாக வியாபாரத்தில் கிடைக்காமல் இழுபறியாக இருந்த பணம் கிடைக்கும். வெகுநாட்களாக நிரந்தரமாகப் புதிய வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திட்டமிட்டுப் பணியாற்றினால் எதில் வேண்டுமானாலும் உங்கள் இலக்கை எளிதாக அடைவீர்கள்.

கடகம் :

கடக ராசியினருக்கு அடுத்த இரண்டு மாதங்கள் நல்ல காலமாக இருக்கும். தீபாவளி முதல் கிறிஸ்துமஸ் வரை இவர்களுக்கு நல்ல ஒரு பொழுதுபோக்கான சூழலே நிலவும். உத்தியோகத்தில் பதவி உயர்வுடன், திடீர் பணமும் கிடைக்கும். தடைபட்ட பணிகள் அனைத்தும் முடிந்து பெரிய வெற்றிகளை அடைவீர்கள். இத்தனை நாட்களாக உங்களைக் குறை சொல்லிக்கொண்டு இருந்தவர்கள் உங்களின் திறன்கண்டு பாராட்டுவார்கள். 

துலாம்:

அடுத்த இரண்டு மாதங்கள் துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல உத்தியோகம் கிடைக்கும். புதிய வேலை கிடைக்கும் என்ற கனவு நிறைவேறும். பல புதிய வாய்ப்புகளும் தேடி வரும். திருமணமாகாதவர்களுக்கு இவ்வருட இறுதியில் நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கும். திருமணம் நிச்சயிக்கப்பட வாய்ப்புள்ளது.

விருச்சிகம்:

ஆண்டின் கடைசி இரண்டு மாதங்கள் அற்புதமாக இருக்கும். எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். இந்த நேரத்தில் நீங்கள் நிறைய பணம் சம்பாதிப்பீர்கள். அதிர்ஷ்டத்திற்கு முழு ஆதரவு கிடைக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். அனைவருடனும் எங்கும் பயணம் மேற்கொள்ள முடியும். உத்தியோகத்தில் புதிய உயரங்களை அடைவீர்கள்.

கும்பம்:

கும்ப ராசியில் நேர் பாதையில் சஞ்சரிப்பவர் சனி. எனவே, அடுத்த இரண்டு மாதங்கள் இந்த ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக மாறும். உங்கள் வாழ்க்கையில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மாற்றம் இந்த நேரத்தில் நிகழும். நீங்கள் வலுவான முடிவுகளை எடுப்பீர்கள், வாழ்க்கையில் முன்னேறுவீர்கள், புதிய வெற்றிகளை அடைவீர்கள். வியாபாரத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். புத்தாண்டு முதல், கும்பத்தில் சனியின் பெயர்ச்சி முடிவடையும். எனவே, இந்த ராசியும் சனியின் ஆளுகையில் இருந்து விடுபடும். இதனால் பலருக்கு நற்செயல்கள் நடைபெறும்.

பொறுப்பு துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்