Suitable Murugan Temple: முருக வழிபாட்டின் மகத்துவம்; எந்தெந்த ராசியினருக்கு எந்த கோயில் முருகனை வழிபடவேண்டும்?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Suitable Murugan Temple: முருக வழிபாட்டின் மகத்துவம்; எந்தெந்த ராசியினருக்கு எந்த கோயில் முருகனை வழிபடவேண்டும்?

Suitable Murugan Temple: முருக வழிபாட்டின் மகத்துவம்; எந்தெந்த ராசியினருக்கு எந்த கோயில் முருகனை வழிபடவேண்டும்?

Marimuthu M HT Tamil Published May 21, 2024 03:23 PM IST
Marimuthu M HT Tamil
Published May 21, 2024 03:23 PM IST

Suitable Murugan Temple: எந்ததெந்த ராசிக்காரர்கள் எந்தெந்த திருத்தலத்து முருகப்பெருமானை வழிபட்டால் வாழ்வில் ஏற்றம் பெறலாம் என்பது குறித்து அறிந்துகொள்வோம். முருக வழிபாட்டின் மகத்துவத்தை அறிவோம்.

Suitable Murugan Temple:முருக வழிபாட்டில் இருக்கும் மகத்துவம்; எந்தெந்த ராசியினருக்கு எந்த கோயில் முருகனை வழிபடவேண்டும்?
Suitable Murugan Temple:முருக வழிபாட்டில் இருக்கும் மகத்துவம்; எந்தெந்த ராசியினருக்கு எந்த கோயில் முருகனை வழிபடவேண்டும்?

இது போன்ற போட்டோக்கள்

முருகனை வழிபட ஏற்ற நாள்கள்:

முருகனை வழிபட வைகாசி மாதம், விசாக நாள் ஏற்றது. அன்று முருகன் பிறந்ததாக கூறப்படுகிறது. முருகப் பெருமான் சூரபதுமன் என்னும் அரக்கனை அழித்ததை ஒட்டி, கந்த சஷ்டி நாள் கொண்டாடப்படுகிறது. தைப்பூச திருநாளில் முருகனை வழிபட வேண்டும். பங்குனி உத்திர நாள், முருகன் தெய்வானையை மணமுடித்த நாள் எனப்படுகிறது.  கார்த்திகை தீப நாள் மற்றும் பிரதி செவ்வாய்க் கிழமைகளில் முருகனை வழிபடலாம்.

உங்கள் ராசிக்குரிய முருகன் கோயில் எது?:

எந்ததெந்த ராசிக்காரர்கள் எந்தெந்த திருத்தலத்து முருகனை வழிபடுவது முக்கியம் என்பது குறித்து அறிவோம்.

இதுதொடர்பாக குமுதம் பக்தி சேனலுக்கு யதார்த்த ஜோதிடர் ஷெல்வி அளித்த பேட்டியினைப் பார்க்கலாம். 

அதில் அவர் கூறியதாவது, ‘’மேஷம் மற்றும் விருச்சிகம்: மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு, செவ்வாய் அதிபதி. வைத்தீஸ்வரன் கோயிலில் இருக்கும் முத்துக்குமார சுவாமி மற்றும் குன்றக்குடியில் இருக்கும் சண்முகநாதனை வழிபடுவது விஷேசமான பலன்களைத் தரும் என நூல்கள் கூறுகின்றன. எனவே, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது இந்த கோயில்களில் ஏதாவது ஒரு கோயிலுக்குச் சென்று வழிபடுவது நல்ல வளர்ச்சியைத் தரும்.

ரிஷபம் மற்றும் துலாம் ராசியினர்: 

ரிஷபம் மற்றும் துலாம் ஆகிய ராசியினர்களுக்கு அதிபதி, சுக்கிரன். மதுரை அருகில் இருக்கும் பழமுதிர்ச்சோலை சோலை முருகன் மற்றும் விராலிமலை முருகன் கோயிலுக்குச் சென்று சுப்ரமணியரை வழிபட்டால் சிறப்பான பலன்களைப் பெறலாம் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. வாழ்வில் மிகப்பெரிய ஏற்றத்தைப் பெறலாம்.

மிதுனம் - கன்னி:  

மிதுனம் மற்றும் கன்னி ராசியினர்களுக்கு அதிபதி, புதன் தான். மிதுனம் மற்றும் கன்னி ராசியினர், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி மற்றும் மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆகியவற்றில் உள்ள முருகனை வழிபட்டால் தாங்கள் சந்திக்கும் இடர்பாடுகளில் இருந்து தப்பலாம்.

தனுசு மற்றும் மீனம்:  

தனுசு மற்றும் மீன ராசியினர்களுக்கு அதிபதி, குரு பகவான். எனவே, திருச்செந்தூர் முருகன் மற்றும் தந்தைக்கு குருவாக இருந்து உபதேசம் தந்த சுவாமி  மலையில், இருக்கும் முருகனை தனுசு மற்றும் மீன ராசியினர் வழிபடுவது சிறப்பு வாய்ந்தது. 

மகரம் மற்றும் கும்பம்: மகரம் மற்றும் கும்பத்துக்கு அதிபதி சனி பகவான். பழனியில் இருக்கும் முருகனை ராஜ அலங்காரத்திலும் மற்றும் சென்னிமலை சிரகிரி வேலவனையும் தரிசித்தால் மகரம் மற்றும் கும்ப ராசியினருக்கு ஏற்றம் உண்டாகும். 

கடகம்: 

கடக ராசிக்கு அதிபதி, சந்திரன்.  திருத்தணி சுப்ரமணியரையும் குன்றத்தூர் குமரனையும் கடக ராசியினர் வழிபட்டால் நிச்சயம் சந்தித்த சொல்லொண்ணா துயரங்களில் இருந்து தப்பிக்கலாம். 

சிம்மம்:

சிம்ம ராசிக்கு அதிபதி, சூரியன். சிம்ம ராசியினர், வியர்த்து வியர்வையில் இருக்கும் சிக்கல் சிங்காரவேலர் மற்றும் சிறுவாபுரி முருகனை வழிபட்டால் நன்மைகள் கிடைக்கும். 

அங்கு சென்று வழிபாடு செய்யமுடியாதவர்கள், அந்த கோயிலின் உற்சவர் மற்றும் மூலவர் படத்தை வைத்து வழிபடுவது விசேஷமான பலன்களைத் தரும்’’ எனக்குறிப்பிட்டார்.

நன்றி: குமுதம் பக்தி 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்