Tamil News  /  Astrology  /  The Deviating Luck And Yoga Of The Two Planets Belong To These Zodiac Signs

இரண்டு கிரகங்களின் வக்கிர நிவர்த்தி.. அதிர்ஷ்டமும், யோகமும் இந்த ராசிக்காரர்களுக்கு தான்!

Divya Sekar HT Tamil
Nov 20, 2023 12:19 PM IST

இந்த இரண்டு கிரகங்களின் வக்கிர நிவர்த்தி காரணமாக 12 ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டமும், யோகமும் பெறப்போகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

 சனி பகவான்
சனி பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

சனிபகவான் கடந்த நவம்பர் நான்காம் தேதி என்று வக்கிர நிவர்த்தி அடைந்தார். நவகிரகங்களின் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர் சனி பகவான். ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

குருபகவான் வரும் டிசம்பர் 31ம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார். இந்த இரண்டு கிரகங்களின் வக்கிர நிவர்த்தி காரணமாக 12 ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டமும், யோகமும் பெறப்போகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

மேஷ ராசி

 2024 ஆம் ஆண்டு உங்களுக்கு யோக காலமாக அமையப் போகின்றது. உங்கள் ராசியில் இருந்து குருபகவான் வெளியே செல்கின்ற காரணத்தினால் உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நிதி நிலைமையில் நல்ல பலன் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி காண்பீர்கள்.

கடக ராசி

செல்வ செழிப்பிற்கு எந்த குறையும் இருக்காது வருமானம் அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை உங்களுக்கு அதிகரிக்கும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்பு உள்ளது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

விருச்சிக ராசி

2024 ஆம் ஆண்டு உங்களுக்கு அதிர்ஷ்டமான ஆண்டாக அமையப்போகின்றது குரு மற்றும் சனி உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்க போகின்றனர். பண வரவில்லை இந்த குறையும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களது தன்னம்பிக்கை அதிகரித்து புதிய முயற்சிகள் வெற்றியாக அமையும்.

கும்ப ராசி

குரு பகவான் உங்களுக்கு 2024 ஆம் ஆண்டு முதல் அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றார். சனி பகவான் உங்களுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றார். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் இருந்த சிக்கல்கள் விலகும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews 

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்