தொழிலில் லாபம் பெற வியாழக்கிழமை என்ன செய்ய வேண்டும்?.. ஏகாதசி தினமான இன்று நல்ல நேரம், ராகு காலம் எப்போது?.. விபரம் இதோ
தமிழ் காலண்டர் தகவல்கள்: தமிழ் நாள்காட்டியின் படி, 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதியான இன்று முக்கிய விஷேசங்கள், பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் உள்ளிட்ட முக்கிய விவரங்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

தமிழ் காலண்டர் 24.04.2025: இந்து சாஸ்திரத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அந்த வகையில், வியாழக்கிழமையான இன்று பொதுவாக குரு பகவானுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் திருச்செந்தூர் முருகனை குருவாக நினைத்து வீட்டில் இருந்தபடியே வழிபாடை மேற்கொண்டால் உங்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார தடைகள் நீங்க, சுப நிகழ்ச்சிகள் கைகூட, தொழிலில் அதிக லாபம் பெற இன்றைய தினம் முருகன் வழிபாடு செய்வது சிறப்பு.
இது போன்ற போட்டோக்கள்
May 13, 2025 05:27 PMசனி கொட்டிக் கொடுக்க வருவார்.. பண மழை கொட்டி தீர்க்கும் ராசிகள்.. முன்னேற்றம் வருவது யாருக்கு?
May 13, 2025 02:08 PMகுரு பெயர்ச்சி.. நாளை முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் தொடங்கும்.. அதிர்ஷ்டம் அதிகம்.. பணவரவு!
May 13, 2025 06:29 AM'வெற்றியில் மிதக்கும் யோகம் உங்களுக்கா.. கவனமாக இருக்க வேண்டியது யார்' மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே இன்று சாதகமா!
May 12, 2025 12:18 PMபுத்த பூர்ணிமா நாளான இன்று உருவாகும் யோகம்.. எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும்?
May 12, 2025 05:00 AM"லாபத்தில் மிதக்கும் யோகம் யாருக்கு.. மகிழ்ச்சியில் சாத்தியமா" இன்று மே 12 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க
May 11, 2025 02:57 PMநவ பஞ்சம ராஜ யோகம்.. இந்த 3 ராசிகளும் அதிர்ஷ்டத்தின் முகவரி.. பண ஆதாயம், வாழ்க்கையில் வெற்றி
இத்தகைய சிறப்பு வாய்ந்த நாளான இன்று (ஏப்ரல் 24) பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகுகாலம், எமகண்டம் குறித்த முக்கிய தகவல்களை தமிழ் நாள்காட்டியின் மூலம் இங்கு தெரிந்துகொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம்
தமிழ் ஆண்டு : விசுவாவசு வருடம்
தமிழ் மாதம் : சித்திரை 11
தேதி: 24.04.2025
கிழமை - வியாழக்கிழமை
சூரிய உதயம்
இன்றைய சூரிய உதயமானது காலை 6:00 மணிக்கு நடைபெறுகிறது.
நல்ல நேரம்
காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை நல்ல நேரம்
மாலை ..............
கௌரி நல்ல நேரம்
மதியம் 12:30 மணி முதல் 01:30 மணி வரை கெளரி நல்ல நேரம்
மாலை 06:30 மணி முதல் 07:30 மணி வரை கெளரி நல்ல நேரம்
ராகு காலம்
பிற்பகல் 01:30 மணி முதல் 03:00 மணி வரை ராகு காலம்
௭மகண்டம்
காலை 06:00 மணி முதல் 07:30 மணி வரை எமகண்டம்
கரணம்
கரணம்: 03.00 - 04.30
காலை: 10.26 வரை பாலவம், பின்பு இரவு: 09.23 வரை கௌலவம், பின்பு தைதுலம்.
குளிகை
காலை: 09.00 மணி முதல் 10.30 மணி வரை குளிகை
(குளிகை காலத்தில் ஒரு காரியம் செய்தால் மீண்டும் அதேபோன்று நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்)
சூரிய அஸ்தமனம்
மாலை 6:20 மணிக்கு இன்று சூரிய அஸ்தமனம் நடைபெறும்.
சந்திராஷ்டம நட்சத்திரம்
பூசம் , ஆயில்யம்
சந்திராஷ்டம ராசி
பின்னிரவு 03.14 வரை கடகம் பின்பு சிம்மம் ராசிக்கு சந்திராஷ்டமம்.
சூலம்
இன்று தெற்கே சூலம்
பரிகாரம்
இன்றைய பரிகாரமாக தைலம் பயன்படுத்தலாம்.
நாள்
கீழ் நோக்கு நாள்
ஏகாதசி விரதம்
இன்றைய கோயில் விசேஷங்கள்
திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோயிலில் காலை தெட்சிணாமூர்த்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் மற்றும் ஸ்ரீரெங்க மன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் ஆலயத்தில் அம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடு.
ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி, திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் வாகனத்தில் புறப்பாடு.
இன்றைய வழிபாடு
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி பகவானை வழிபட மன அமைதி ஏற்படும்.
ஸ்ரீ முருகப்பெருமானை வழிபட செல்வ சேர்க்கை உண்டாகும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் மற்றும் தமிழ் நாள்காட்டியின் தகவல்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட செய்தியாகும். இதில் உள்ள கருத்துக்கள் மற்றும் தகவல்களுக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பொறுப்பாகாது.
