புதன்கிழமை யாரையெல்லாம் வழிபட்டால் சிறப்பு.. இன்று ஏப்ரல் 23 நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் எப்போது?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  புதன்கிழமை யாரையெல்லாம் வழிபட்டால் சிறப்பு.. இன்று ஏப்ரல் 23 நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் எப்போது?

புதன்கிழமை யாரையெல்லாம் வழிபட்டால் சிறப்பு.. இன்று ஏப்ரல் 23 நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் எப்போது?

Karthikeyan S HT Tamil
Published Apr 23, 2025 06:24 AM IST

தமிழ் நாள்காட்டியின் படி, 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதியான இன்று முக்கிய விஷேசங்கள், பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் உள்ளிட்ட முக்கிய விவரங்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

புதன்கிழமை யாரையெல்லாம் வழிபட்டால் சிறப்பு.. இன்று ஏப்ரல் 23 நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் எப்போது?
புதன்கிழமை யாரையெல்லாம் வழிபட்டால் சிறப்பு.. இன்று ஏப்ரல் 23 நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் எப்போது?

இது போன்ற போட்டோக்கள்

அதேபோன்று புதன்கிழமை விநாயகரை வழிபடும் வழக்கமும் உள்ளது. மத நம்பிக்கைகளின் படி, விநாயகர் வழிபாடு என்பது மகிழ்ச்சியையும் செழிப்பையும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. இத்தகைய சிறப்புக்குரிய நாளான இன்று (ஏப்ரல் 23) பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் குறித்த முக்கிய தகவல்களை தமிழ் நாள்காட்டியின் மூலம் இங்கு அறிவோம்.

இன்றைய பஞ்சாங்கம்

தமிழ் ஆண்டு : விசுவாவசு வருடம்

தமிழ் மாதம் : சித்திரை 10

தேதி: 23.04.2025

கிழமை - புதன்கிழமை

சூரிய உதயம்

இன்றைய சூரிய உதயமானது காலை 6:00 மணிக்கு நடைபெறுகிறது.

நல்ல நேரம்

காலை 09:30 மணி முதல் 10:30 மணி வரை நல்ல நேரம்

மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை நல்ல நேரம்

கௌரி நல்ல நேரம்

பகல் 10:30 மணி முதல் 11:30 மணி வரை கெளரி நல்ல நேரம்

மாலை 06:30 மணி முதல் 07:30 மணி வரை கெளரி நல்ல நேரம்

ராகு காலம்

பிற்பகல் 12:00 மணி முதல் 01:30 மணி வரை ராகு காலம்

௭மகண்டம்

காலை 07:30 மணி முதல் 09:00 மணி வரை எமகண்டம்

குளிகை

காலை 10:30 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை குளிகை

(குளிகை காலத்தில் ஒரு காரியம் செய்தால் மீண்டும் அதேபோன்று நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்)

கரணம்

கரணம்: 06 - 07.30.

பிற்பகல்: 12.14 வரை பத்திரை, பின்பு இரவு 11.20 வரை பவம், பின்பு பாலவம்.

சூரிய அஸ்தமனம்

மாலை 6:20 மணிக்கு சூரிய அஸ்தமனம் நடைபெறும்.

சந்திராஷ்டம நட்சத்திரம்

புனர்பூசம், பூசம்

சந்திராஷ்டம ராசி

இன்றைய நாள் முழுவதும் கடகம் ராசிக்கு சந்திராஷ்டமம்.

சூலம்

இன்று வடக்கே சூலம்

பரிகாரம்

இன்றைய பரிகாரமாக பால் பயன்படுத்தலாம்

நாள்

மேல் நோக்கு நாள்

இன்றைய கோயில் விசேஷங்கள்

திருச்செங்காட்டங்குடி ஸ்ரீஉத்திராபதீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை உற்சவ விழா தொடக்கம்.

திருநாவுக்கரசர் நாயனார் குருபூஜை.

திருவெற்றியூர் ஸ்ரீவாழவந்த நாயகி அம்மன் - கருப்பணசாமி ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு.

இன்றைய வழிபாடு

விநாயகரை வழிபட்டால் செழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை.

புதன்கிழமையான இன்று புதன் பகவானுக்கு உரிய நாளாக கருதப்படுகிறது.

ஸ்ரீ ராமரை வழிபட தொழில் விருத்தி உண்டாகும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் மற்றும் தமிழ் நாள்காட்டியின் தகவல்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட செய்தியாகும். இதில் உள்ள கருத்துக்கள் மற்றும் தகவல்களுக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பொறுப்பாகாது.

Karthikeyan S

TwittereMail
சு.கார்த்திகேயன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். வானொலி, டிஜிட்டல் ஊடகங்களில் 13+ ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், பொழுதுபோக்கு, ஆன்மிகம், லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் இளங்கலை தகவல் தொழில்நுட்பம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மின்னணு ஊடகம் மற்றும் தொடர்பியல் துறையில் பட்டம் பெற்றுள்ள இவர், கல்வி வானொலி ஞானவாணி, ஈ நாடு டிஜிட்டல், ஒன் இந்தியா தமிழ், டாப் தமிழ் நியூஸ், டைம்ஸ் நவ் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2022 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner