தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Tamil New Year Virgo Horoscope : பெரிய முன்னேற்றம்! குரு பார்வை கிட்டும்! தொழிலில் லாபம்! கன்னி ராசிக்கு சிறந்த ஆண்டு

Tamil New year Virgo Horoscope : பெரிய முன்னேற்றம்! குரு பார்வை கிட்டும்! தொழிலில் லாபம்! கன்னி ராசிக்கு சிறந்த ஆண்டு

Priyadarshini R HT Tamil
Apr 08, 2024 12:58 PM IST

Tamil New Year : மனதில் ஏற்பட்ட குழப்பமான நிலைமைகள் போகும். தேவையில்லாத விஷயங்களில் ஈடுபட்டது. செய்யாத குற்றத்திற்கு அனுபவித்த தண்டனைகள் என அனைத்தும் மாறப்போகிறது.

Tamil New year Virgo Horoscope : பெரிய முன்னேற்றம்! குரு பார்வை கிட்டும்! தொழிலில் லாபம்! கன்னி ராசிக்கு சிறந்த ஆண்டு
Tamil New year Virgo Horoscope : பெரிய முன்னேற்றம்! குரு பார்வை கிட்டும்! தொழிலில் லாபம்! கன்னி ராசிக்கு சிறந்த ஆண்டு

மனதில் ஏற்பட்ட குழப்பமான நிலைமைகள் போகும். தேவையில்லாத விஷயங்களில் ஈடுபட்டது. செய்யாத குற்றத்திற்கு அனுபவித்த தண்டனைகள் என அனைத்தும் மாறப்போகிறது.

தமிழ் புத்தாண்டில் உங்களுக்கு பெரிய முன்னேற்றம் இருக்கும். ஜென்மத்தில் கேதுவும், 7ம் இடத்தில் ராகுவும் இருப்பது விநாயகரால் தீரும். சங்கடங்களில் இருந்து தீர்க்கும் விநாயகரை வழிபட துன்பங்கள் விலகும். சிவன், முருகன், ராம நாமங்களை கைகொள்ள வேண்டும்.

கன்னி ராசிக்கு இந்த தமிழ் புத்தாண்டு முதல் பெரிய முன்னேற்றம் கிடைக்கும். குரு பார்வை கிட்டும். கண்ணீர் நிறைந்த சோகங்கள் தீரும். இரும்பு இதயத்தினராக இருப்பார்கள். எண்ணங்கள் நல்லனவையாக இருக்கும். துன்பங்கள் அனைத்தும் விலகுவதற்கு முதல் படி. ஒவ்வொரு நாளிலும் முன்னேற்றம் கிடைக்கும்.

இறைவன் அருள் அந்தளவுக்கு உள்ளது. தோஷங்கள் நிவர்த்தி பெறுகிறது. கடன் குறையும், பொருளாதாரம் மேம்படும். தொழில் முன்னேற்றம் கிட்டும். தொழிலில் லாபம். தொழிலில் வளர்ச்சியில் வென்று காட்டுவீர்கள். கல்வி, உயர்கல்வியில் முன்னேற்றம் கிட்டும்.

புத்துணர்ச்சியைத்தரும், புதுமையைத்தரும் சுவையான ஆண்டு. வேலை கிடைக்கும். வேலைவாய்ப்புகளில் உயர்வு கிடைக்கும். சம்பள உயர்வு, ப்ரமோஷன் என தொழிலில் உயர்வு. தொழிலில் வளர்ச்சி, லாபம், போட்டிகளை வெல்வீர்கள். வெற்றி கிட்டும். கடன் மடமடவென குறையும், உங்கள் ஜாதகமும் ஒத்துழைத்தால் கடன் நீங்கும். பொருளாதார முன்னேற்றம் கிட்டும்.

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்துகொண்டே இருக்கும். திருமண அமைப்புகள் கைகூடி வரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம். திருமணத்தடை விலகும். குழந்தைகளை நினைத்து நீங்கள் கவலைப்படவேண்டிய தேவையில்லை அவர்கள் வழியில் இருந்து மகிழ்ச்சிக்கிட்டும்.

கல்வியில் சிறப்படைவீர்கள், உயர் கல்வியில் ஏற்றம் கிட்டும். உத்யோக இடமாற்றம் கிட்டும். பூர்வீக சொத்துக்கள் மீதான வழக்குகளில் வெற்றி கிட்டும். சாதகமான அமைப்புகளை பெறும் ஆண்டு. இடமாற்றங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். அது ஏற்றம் மிகுந்ததாகும். பொருளாதாரத்துக்கு குறைவிருக்காது. குழப்பம் தீரும். மனஅழுத்தம் குறையும். உடல் நிலை சீரடையும். சிந்தனை தெளிவடையும்.

சேமிப்பு ஏற்படும். அற்புமான காலம். ஊர் பொது விஷயங்களில் முன்னின்று செய்து, பெயர், புகழ் கிடைக்கும். அந்தஸ்துமிக்க இடங்களில் மதிக்கப்படுவீர்கள். அனைத்திலும் ஏற்றம் கிடைக்கும் ஆண்டாக இந்தாண்டு இருக்கும். வாழ்வில் வசந்தத்தை ஊட்டும்.

குருபார்வையால் மனஅழுத்தம் குறையும், முடிவெடுத்து செயல்படுவதில் தயக்கம் இருக்கும். தயக்கத்தை விடுத்து, சோம்பலை விலக்கி செயல்படுங்கள். மணவாழ்க்கையில் கசப்புகள் ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் பிரச்னை ஏற்படும்.

எனவே நிதானம் கொள்ளுங்கள். ஆண்-பெண் இருவருக்கும் எதிர்பாலினத்தவர் விஷயங்களில் மனத்தடுமாற்றம் ஏற்படும். எனவே கவனம் தேவை. குரு, சுக்கிரன், புதன், சனி ஆகிய இந்த 4 பேரும் உங்கள் ஜாதகத்தில் எங்கு இருக்கிறார்கள் என்பதை பொருத்தும் பலன்களின் அளவு அமையும். அதன் மூலம் சொத்து, வண்டி, வாகன சேர்க்கை கிடைக்கும்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள பலன்கள் அனைத்தும் பொதுவான பலன்கள். எனவே துல்லிய தகவல்களுக்கு குறிப்பிட்ட வல்லுனர்களை அணுவதுதான் சிறந்தது. 

WhatsApp channel