பிறந்தது விசுவாவசு தமிழ் புத்தாண்டு.. மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?
தமிழ் புத்தாண்டு பலன்கள்: இந்த ஆண்டு (2025) தமிழ் புத்தாண்டானது குரோதி ஆண்டில் இருந்து விசுவாவசுக்கு மாறுவது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது பற்றி பார்ப்போம்.

வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. ஜோதிட கணக்குப்படி, இந்த தமிழ் புத்தாண்டு சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களையும் தரப்போகிறது. அந்தவகையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு விசுவாவசு ஆண்டு எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 28, 2025 02:30 PMஇந்த ராசிக்காரர்களுக்கு விரைவில் அதிர்ஷ்ட யோகம்.. நிதி ஆதாயங்கள், மன அமைதி கிடைக்கும்!
Apr 28, 2025 05:00 AMவெற்றி சாத்தியம்.. பணத்தை பத்திரம்.. கவனமா இருக்க வேண்டியது யார்.. இன்று ஏப்.28 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 27, 2025 02:57 PMகௌரி யோகம் 5 ராசிகளின் செல்வத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும்.. வாராந்திர டாரட் பலன் என்ன?
Apr 27, 2025 02:11 PMமே மாதத்தில் அரிய புதாதித்ய ராஜயோகம்.. அதிர்ஷடம் காத்திருக்கும் இந்த 3 ராசிக்காரர்கள்
Apr 27, 2025 07:30 AMராகு குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி பொங்கப் போகும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?
Apr 27, 2025 05:00 AMலாபமும் மகிழ்ச்சியும் தேடி வரும் யோகம் யாருக்கு.. கவனமாக இருக்க வேண்டியது யார்.. இன்று உங்க நாள் எப்படி இருக்கு பாருங்க!
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு வளர்ச்சிக்கான ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சனி மற்றும் ராகு பெயர்ச்சிகள் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. வேலையில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இந்த தமிழ் புத்தாண்டில் இருந்து வெற்றி மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை பெறுவார்கள். தொழில் வளர்ச்சி சாதகமாக அமையும். சுப காரிய நிகழ்ச்சிகள் கைகூடி வரும். முன்னேற்றம் உண்டு. புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.
மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே தொழில், கல்வி, நிதி, உறவுகள் மற்றும் ஆரோக்கியத்தில் வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கு வழிவகுக்கும். வெற்றிக்கான ஆண்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வியாபாரத்தில் முடிவு எடுக்கும் போது சற்று நிதானம் தேவை. முதலீடு விஷயங்களில் கவனமாக செயல்படவும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு தொழில், நிதி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியில் நேர்மறையான மாற்றத்தைக் குறிக்கிறது. ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்படலாம். வியாபாரத்திலும் வேலையிலும் கூடுதல் கவனம் இருக்க வேண்டும்.
சிம்மம்
தமிழ் புத்தாண்டில் சிம்ம ராசிக்காரர்கள் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கொண்டுவரும். நிதி ஆதாயங்கள் சாதகமாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பாராட்டுகளும், சுயமரியாதையும் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு தமிழ் புத்தாண்டு சவால்கள் மற்றும் வாய்ப்புகளின் நிறைந்த வருடமாக இருக்கப்போகிறது. பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் மற்றும் குடும்ப உறவுகள் மகிழ்ச்சியாக இருக்கும். நிதி வாய்ப்புகள் சாதகமாக இருக்கும். மன அழுத்தம் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. சிலர் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். இதனால் அலைச்சல் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு கலவையான ஆண்டாக இருக்கும். தனிப்பட்ட உறவுகளில் ஏற்ற தாழ்வுகள் காணப்படும். எதிர்பாராத பலன்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. புதிய பொறுப்புகள் உங்களை தேடிவரும்.
தனுசு
நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் நிலையானதாக இருக்கும். தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் இந்த புத்தாண்டு முதல் உருவாகும். வெளிநாட்டில் வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு நிதானமும், பொறுமையும் தேவை. இந்த புத்தாண்டு வெற்றிகரமான ஆண்டாக இருக்கும். தொழில் வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும்.
கும்பம்
இந்த தமிழ் புத்தாண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சியை ஆதரவான உறவுகள் மூலம் ஊக்குவிக்கும். மாணவர்கள் இந்த ஆண்டு கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மீனம்
தமிழ் புத்தாண்டு மீன ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களை கொடுக்கப்போகிறது. சனி பகவானின் ஆதிக்கத்தால் நிதி சவால்கள் ஏற்படலாம்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
