தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Tirupati One Day Tour: திருப்பதிக்கு ஒரு நாள் சுற்றுலா..சிறப்பு தரிசனத்தோடு அசத்தலான டூர் பேக்கேஜ் - முழு விபரம் இதோ!

Tirupati One Day Tour: திருப்பதிக்கு ஒரு நாள் சுற்றுலா..சிறப்பு தரிசனத்தோடு அசத்தலான டூர் பேக்கேஜ் - முழு விபரம் இதோ!

Karthikeyan S HT Tamil
Jun 16, 2024 09:26 PM IST

Tirupati One Day Tour: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஒரு நாள் சுற்றுலா திட்டமான, திருப்பதி தொகுப்புச் சுற்றுலா திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 400 நபர்கள் வரை சுற்றுலா செல்லலாம் என சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

Tirupati One Day Tour: திருப்பதிக்கு ஒரு நாள் சுற்றுலா..சிறப்பு தரிசனத்தோடு அசத்தலான டூர் பேக்கேஜ் - முழு விபரம் இதோ!
Tirupati One Day Tour: திருப்பதிக்கு ஒரு நாள் சுற்றுலா..சிறப்பு தரிசனத்தோடு அசத்தலான டூர் பேக்கேஜ் - முழு விபரம் இதோ!

உலக பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் பக்தர்கள் வெள்ளத்தால் திருப்பதி கோயில் எப்போதும் நிரம்பி வழிந்தபடியே காட்சியளிக்கிறது.

நீண்ட வரிசை

குறிப்பாக சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். திருமலைக்கு வரும் பக்தர்கள் முன்கூட்டியே ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. குறைந்தது 2 முதல் 3 மாதங்கள் முன்பே டிக்கெட் புக்கிங் செய்து தான் தயாராக இருக்க வேண்டும் என்கிற நிலை இருக்கிறது.

400 நபர்கள்

இந்நிலையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஒரு நாள் சுற்றுலா திட்டமான, திருப்பதி தொகுப்பு சுற்றுலா திட்டத்தின் மூலம் சிறப்பு தரிசன அனுமதி சீட்டின் மூலமாக நாளொன்றுக்கு 400 நபர்கள் வரை சுற்றுலா செல்லலாம் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தினால் இயக்கப்பட்டு வரும் சுற்றுலா திட்டங்களில் அதிக அளவில் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சுற்றுப்பயணம், திருப்பதி ஒரு நாள் சுற்றுலாவாகும்.

திருப்பதிக்கு ஒரு நாள் சுற்றுலா

திருப்பதி சுற்றுலா செல்லும் பேருந்து, சென்னை வாலாஜா சாலை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகமான சுற்றுலா வளாகத்திலிருந்து தினசரி காலை 4.30 மணிக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்கின்றது. ஒவ்வொரு பேருந்திலும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி பணியில் ஈடுபடுவார். வழிகாட்டிகள் திருப்பதி சுற்றுலா பயணிகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சுற்றுலா பயணத்திற்கான விளக்கங்களை அளிப்பார்.

சிறப்பு தரிசன வசதி

சுற்றுலா பயணிகளுக்கு காலை உணவு திருத்தணி ஹோட்டல் தமிழ்நாடு உணவகத்தில் வழங்கப்படுகின்றது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு, திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு அனுமதியாக வழங்கிய விரைவு தரிசன அனுமதி சீட்டின் மூலம் சுற்றுலா பயணிகள் தரிசனம் செய்த பின்னர் சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் நபர் ஒருவருக்கு திருப்பதி லட்டு ஒன்று வழங்கப்படுகின்றது.

பத்மாவதி அம்மன் தரிசனம்

மேலும், மதிய உணவுக்கு பின்னர் திருச்சானுார் சென்று பத்மாவதி அம்மனை தரிசனம் செய்த பிறகு இரவு உணவு வழங்கப்பட்டு மீண்டும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் சுற்றுலா பயணிகளை கொண்டு சேர்த்து திருப்பதி சுற்றுலா பயணம் முடிவு பெறுகின்றது.

எப்படி புக் செய்வது?

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணத் திட்டங்களுக்கு முன்பதிவு செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் www.ttdconline.com என்ற இணையதள பக்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம். சென்னை வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேரடியாகவும் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பதி சுற்றுலா குறித்த கூடுதல் விவரங்களை (180042531111 (Toll free), 044-25333333 044-25333444) என்ற எண்களை தொடர்பு கொண்டு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.