ஓம் நமோ சிவாயா! இன்றைய பிரதோஷ தின வழிபாடு! பிரதோஷ பூஜையின் பயன்கள்!
மனிதர்களைப் படைப்பவன் பிரம்மன், காப்பவன் விஷ்ணு மற்றும் அழிப்பவன் சிவன் என்ற ஒரு வழக்கு இந்து மதத்தில் உள்ளது. மற்ற இரு கடவுள்களை விட அழிக்கும் கடவவுளான சிவனுக்கு அனைத்து இடங்களிலும் புனித தலங்கள் உள்ளன.

மனிதர்களைப் படைப்பவன் பிரம்மன், காப்பவன் விஷ்ணு மற்றும் அழிப்பவன் சிவன் என்ற ஒரு வழக்கு இந்து மதத்தில் உள்ளது. மற்ற இரு கடவுள்களை விட அழிக்கும் கடவவுளான சிவனுக்கு அனைத்து இடங்களிலும் புனித தலங்கள் உள்ளன. ஏனெனில் சிவனை வழிபட்டால் வாழ்வும் சிறக்கும் என ஒரு மொழி உண்டு. இந்த நிலையில் சிவனை மற்ற நாள்களில் வழிபடுவதை விட பிரதோஷ காலங்களில் வழிபடுவது சிறந்த பயனை அளிக்கும். ஒரு மாதத்தில் இரண்டு முறைகள் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயதோசி நாட்களில் பிரதோஷ தினம் வருகிறது.இந்த நாட்களில் மாலை நேரம் நான்கு மணி முதல் ஆறு மணி வரையிலான நேரமே பிரதோஷ காலமாக கருதப்படுகிறது. இந்த காலத்தில் சிவனை வணங்கி பூஜித்தால் நமது வாழ்வில் ஏற்படும் அனைத்து துன்பங்களும் நீங்கி இன்பம் நிறையும் என்பது நம்பிக்கை.
பிரதோஷ வரலாறு
பிரதோஷ காலம் என்பது சிவபெருமான் அமிர்தத்தை கடையும்போது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை அருந்திய நேரமே இந்த பிரதோஷ காலமாகும். தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து பாற்கடலை கடைந்த போது திருமகள், காமதேனு, ஐராவதம், சிந்தாமணி, கற்பகத்தரு, கௌஸ்துபமணி ஆகியவை ஒவ்வொன்றாக தோன்றின. விஷ்ணு லட்சுமியை ஏற்றுக் கொண்டார். மற்ற பொருட்களை தேவர்கள் ஏற்றுக் கொண்டனர். இருப்பினும் அதன் உடன் வந்த கொடிய ஆலகால விஷம் யாராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால் பிரபஞ்சமே கண்டு நடுங்கியது.
பிரபஞ்சத்தை காக்க இந்த ஆலகால விஷத்தை பரமசிவன் உண்டார். பின்னர் பார்வதி அவரது கைகளால் தொண்டையில் தொண்டை குழியிலேயே அந்த விஷயத்தை நிறுத்திவிட்டார். இந்த காலம் தான் பிரதோஷ காலம் என்று அழைக்கப்படுகிறது. அனைத்து மாதங்களிலும் ஏற்படும் அமாவாசைக்கு பின்னும் பௌர்ணமிக்கு பின்னும் என இரண்டு தினங்களில் பிரதோஷ நாட்கள் வருகின்றன. இந்த தினங்களில் அனைத்து சிவ ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இந்த சமயத்தில் சிவனுக்கு பால், தேன், சந்தனம், பன்னீர், திருநீர், தயிர் மற்றும் பஞ்சாமிர்தம் போன்றவைகளால் அபிஷேகம் செய்கின்றனர். மேலும் வில்வம், அரளி, மல்லிகை போன்ற மலர்களாலும் பூஜித்து வழிபடுகின்றனர்.
ஐப்பசி மாத பிரதோஷம்
ஒவ்வொரு பிரதோஷமும் மகத்துவம் நிறைந்தது. பௌர்ணமி மற்றும் அமாவாசைக்கு முன்னதாக மூன்று நாட்களுக்கு முன்பு திரயோதசி திதியில் பிரதோஷம் வரும். பிரதோஷ நாளில் சிவாலயம் செல்வது இதுவரை இழந்தவற்றை தந்தருளும் என்கிறார்கள். பிரதோஷ அபிஷேக ஆராதனையை கண்ணாரத் தரிசித்தாலே இதுவரை இருந்த காரியத் தடைகள் அனைத்தும் விலகும். தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம்.
அப்படிப்பட்ட பிரதோஷமானது செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து இன்று (அக்டோபர் 229) வருகிறது. செவ்வாய் பகவானுக்குரிய செவ்வாய்க்கிழமையில் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு வழிப்பாடாக இருந்தாலும் அது நம்முடைய கடன் பிரச்சினைகளை தீர்க்க வல்லதாக திகழ்கிறது.
அதனால் செவ்வாய்க்கிழமை வரக்கூடிய பிரதோஷ நாளன்று சிவபெருமானை வழிபாடு செய்யும்பொழுது அருகம்புல் மாலை மற்றும் வில்வமாலை வாங்கித் தந்து வழிபாடு செய்தால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் நீங்கும், கடன் பிரச்சினைகள் தீரும் என்று கூறப்படுகிறது. இதில் ஒன்று சிவபெருமானுக்கும், பிரதோஷ நேரத்தில் சிவபெருமானுக்கு இணையாக அனைத்து விதமான அபிஷேகங்களையும் ஏற்றுக்கொள்ளும் நந்தீஸ்வரருக்கும் வாங்கி தர வேண்டும்.

டாபிக்ஸ்