Tamil Calendar 31.01.2025: வெள்ளிக்கிழமை வழிபாட்டின் நன்மைகள் என்ன?.. இன்று நல்ல நேரம், ராகு காலம் எப்போது?.. விபரம் இதோ
Tamil Calendar 31.01.2025: தமிழ் நாள்காட்டியின் படி, 2025 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) முக்கிய விஷேசங்கள், பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் உள்ளிட்ட முக்கிய விவரங்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

Tamil Calendar 31.01.2025: இந்து சாஸ்திரத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அந்தவகையில், ஜனவரி 31 ஆம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று பொதுவாக மகாலட்சுமிக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியைத் தொடர்ந்து 24 வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு செய்து வந்தால் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும். வெள்ளிக்கிழமையில் அரசமடித்தடி விநாயகருக்கு அகலில் 11 தீபம் ஏற்றி, 11 முறை வலம் வந்து வழிபட்டால் பணவரவு நிரந்தரமாகும் என்பது பலரது நம்பிக்கையாக உள்ளது. அதிலும் இந்த சுக்கிர ஓரையில் மகாலட்சுமிக்கு பூஜை செய்து வந்தால் அள்ள அள்ள குறையாத செல்வங்களும், பணமும் பெருகுவதாக ஐதீகம் உண்டு. இந்த நாளில் பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகுகாலம், எமகண்டம் குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம்.
இன்றைய பஞ்சாங்கம்
- தமிழ் ஆண்டு : குரோதி வருடம்
- தமிழ் மாதம் : தை 18
- தேதி: 31.01.2025
- கிழமை - வெள்ளிக்கிழமை
சூரிய உதயம்
- இன்றைய சூரிய உதயமானது காலை 6:36 மணிக்கு நடைபெறுகிறது
நல்ல நேரம்
- காலை 09:30 மணி முதல் 10:30 மணி வரை நல்ல நேரம்
- மாலை 04:30 மணி முதல் 05:30 மணி நல்ல நேரம்
கௌரி நல்ல நேரம்
- மதியம் 12:30 மணி முதல் 01:30 மணி வரை கெளரி நல்ல நேரம்
- மாலை 06:30 மணி முதல் 07:30 மணி வரை கெளரி நல்ல நேரம்
ராகு காலம்
- காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை ராகு காலம்
௭மகண்டம்
- பிற்பகல் 03:00 மணி முதல் 04:30 மணி வரை எமகண்டம்
கரணம்
- கரணம்: 01.30 - 03.00.
அதிகாலை: 05.18 வரை பாலவம், பின்பு மாலை: 04.30 வரை கௌலவம், பின்பு தைத்துகம்.
குளிகை
- காலை 07:30 மணி முதல் 09:00 மணி வரை குளிகை
(குளிகை காலத்தில் ஒரு காரியம் செய்தால் மீண்டும் அதேபோன்று நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்)
சூரிய அஸ்தமனம்
மாலை 6:06 மணிக்கு சூரிய அஸ்தமனம் நடைபெறும்
சந்திராஷ்டம நட்சத்திரம்
புனர்பூசம் , பூசம்
சந்திராஷ்டம ராசி
- இன்றைய நாள் முழுவதும் கடகம்ராசிக்கு சந்திராஷ்டமம்.
சூலம்
- இன்று மேற்கே சூலம்
பரிகாரம்
- இன்றைய பரிகாரமாக வெல்லம் பயன்படுத்தலாம்
நாள்
- மேல் நோக்கு நாள்
இன்றைய கோயில் விசேஷங்கள்
- மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் திருக்கோயிலில் தை மாத தெப்ப உற்சவம் ஆரம்பம். கற்பக விருட்ச சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
- திருவள்ளூர் ஸ்ரீவீரராகவர் ஆலயத்தில் சுவாமிக்கு தொட்டி திருமஞ்சனம் நடைபெறும்.
- நெல்லை காந்திமதியம்மனுக்கு தாமிரபரணி ஆற்றில் திருமஞ்சன சேவை நடைபெறும்.
இன்றைய வழிபாடு
- ஸ்ரீ மகாலட்சுமியை வழிபாடு செய்து வர மங்களங்கள் மேம்படும் என்பது நம்பிக்கை.
பொறுப்பு துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் மற்றும் தமிழ் நாள்காட்டியின் தகவல்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட செய்தியாகும். இதில் உள்ள கருத்துக்கள் மற்றும் தகவல்களுக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பொறுப்பாகாது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்