தடைகளை நீக்கும் வியாழக்கிழமை வழிபாடு.. இன்று மார்ச் 27 பிரதோஷம், மாத சிவராத்திரி, நல்ல நேரம், ராகு காலம் எப்போது?
தமிழ் காலண்டர் தகவல்கள்: தமிழ் நாள்காட்டியின் படி, 2025 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் நாளான இன்று முக்கிய விஷேசங்கள், பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் உள்ளிட்ட முக்கிய விவரங்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

தமிழ் காலண்டர் 27.03.2025: இந்து சாஸ்திரத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அந்தவகையில், வியாழக்கிழமையான இன்று பொதுவாக குரு பகவானுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. வியாழக்கிழமைகளில் குரு பகவானை மனதார நினைத்து மேற்கொள்ளும் விரதம் குரு வார விரதம் ஆகும். குரு பகவானின் அருளை பெறுவதற்கு இந்நாளில் விரதம் இருந்தால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 27, 2025 02:57 PMகௌரி யோகம் 5 ராசிகளின் செல்வத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும்.. வாராந்திர டாரட் பலன் என்ன?
Apr 27, 2025 02:11 PMமே மாதத்தில் அரிய புதாதித்ய ராஜயோகம்.. அதிர்ஷடம் காத்திருக்கும் இந்த 3 ராசிக்காரர்கள்
Apr 27, 2025 07:30 AMராகு குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி பொங்கப் போகும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?
Apr 27, 2025 05:00 AMலாபமும் மகிழ்ச்சியும் தேடி வரும் யோகம் யாருக்கு.. கவனமாக இருக்க வேண்டியது யார்.. இன்று உங்க நாள் எப்படி இருக்கு பாருங்க!
Apr 26, 2025 11:26 AMபண கட்டிலில் படுத்து உருளும் ராசிகள்.. சூரியன் அஸ்வினியில் நுழைகிறார்.. தமிழ் புத்தாண்டு ராசிகள்!
Apr 26, 2025 06:30 AMகொட்டிக் கொடுக்க வருகிறார் சுக்கிரன் புதன் சேர்க்கை.. விடாமல் பணமழை கொட்டப் போகும் ராசிகள்
அதேநேரம், இன்று பிரதோஷமும், மாத சிவராத்திரியும் இணைந்து வருவதால் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நாளான இன்று (மார்ச் 27) பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகுகாலம், எமகண்டம் குறித்த தகவல்களை தமிழ் நாள்காட்டியின் மூலம் இங்கு தெரிந்துகொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம்
தமிழ் ஆண்டு : குரோதி வருடம்
தமிழ் மாதம் : பங்குனி 13
தேதி: 27.03.2025
கிழமை - வியாழக்கிழமை
சூரிய உதயம்
இன்றைய சூரிய உதயமானது காலை 6:17 மணிக்கு நடைபெறுகிறது.
நல்ல நேரம்
காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை நல்ல நேரம்
மாலை ..............
கௌரி நல்ல நேரம்
மதியம் 12:30 மணி முதல் 01:30 மணி வரை கெளரி நல்ல நேரம்
மாலை 06:30 மணி முதல் 07:30 மணி வரை கெளரி நல்ல நேரம்
ராகு காலம்
பிற்பகல் 01:30 மணி முதல் 03:00 மணி வரை ராகு காலம்
௭மகண்டம்
காலை 06:00 மணி முதல் 07:30 மணி வரை எமகண்டம்
கரணம்
கரணம்: 03.00 - 04.30
காலை: 10.14 வரை கரசை, பின்பு இரவு: 09.23 வரை வணிசை, பின்பு பத்திரை.
குளிகை
காலை: 09.00 மணி முதல் 10.30 மணி வரை குளிகை
(குளிகை காலத்தில் ஒரு காரியம் செய்தால் மீண்டும் அதேபோன்று நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்)
சூரிய அஸ்தமனம்
மாலை 6:17 மணிக்கு இன்று சூரிய அஸ்தமனம் நடைபெறும்.
சந்திராஷ்டம நட்சத்திரம்
பூசம், ஆயில்யம்
சந்திராஷ்டம ராசி
இன்றைய நாள் முழுவதும் கடகம் ராசிக்கு சந்திராஷ்டமம்.
சூலம்
இன்று தெற்கே சூலம்
பரிகாரம்
இன்றைய பரிகாரமாக தைலம் பயன்படுத்தலாம்.
நாள்
மேல் நோக்கு நாள், மாத சிவராத்திரி, பிரதோஷம்
இன்றைய கோயில் விசேஷங்கள்
திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோயிலில் காலை தெட்சிணாமூர்த்தி பகவானுக்கு மாலை நந்தீஸ்வர் பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு நடைபெறும்.
சுவாமி மலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம் நடைபெறும்.
திருவெற்றியூர் ஸ்ரீகுற்றம்பொறுத்தநாதர் ஆலயத்தில் உள்ள நந்தீஸ்வரர் பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு நடைபெறும்.
திருத்தணி முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் நடைபெறும்.
இன்றைய வழிபாடு
ஸ்ரீ சிவபெருமானை வழிபாடு செய்திட வாழ்வில் இருக்கும் தடைகள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் மற்றும் தமிழ் நாள்காட்டியின் தகவல்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட செய்தியாகும். இதில் உள்ள கருத்துக்கள் மற்றும் தகவல்களுக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பொறுப்பாகாது.
