Tamil Calendar 26.01.2025: இன்று நாள் எப்படி?.. யாரை வழிபடுவது சிறப்பு?.. நல்ல நேரம், ராகு காலம் எப்போது?.. முழுதகவல்கள்
Tamil Calendar 26.01.2025: தமிழ் நாள்காட்டியின் படி, 2025 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) முக்கிய விஷேசங்கள், பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் உள்ளிட்ட முக்கிய விவரங்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

Tamil Calendar 26.01.2025: இந்து சாஸ்திரத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அந்தவகையில், ஜனவரி 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று பொதுவாக சூரிய பகவானுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் சூரிய வழிபாடு செய்வது மிகவும் விசேஷம். முறையாக அதிகாலையில் எழுந்து சூரிய உதயத்தின் போது சூரிய நமஸ்காரம் செய்து வந்தால் நம் உடலும், மனமும் தெளிவு பெறும் என்பது ஐதீகம். அதேபோல், சிவபெருமானை மனதில் நினைத்து வழிபாடுவதால் துன்பங்கள் நீங்கி, தைரியம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது. முருகப்பெருமான வழிபாடு செய்து வந்தால் செல்வ சேர்க்கை உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த நாளில் பூஜைக்கு உரிய நல்ல நேரம் , எமகண்டம் குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம்.
இது போன்ற போட்டோக்கள்
Feb 14, 2025 01:45 PMKumbha Rasi: கோடிகள் கொட்டும் சூரிய பெயர்ச்சி.. 2025-ல் கும்பத்தில் நுழைவு.. பணமழை யாருக்கு கிடைக்கும்?
Feb 14, 2025 01:03 PMSun Transit : சனியின் வீட்டில் சூரியன்.. 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் வரப்போகிறது!
Feb 14, 2025 12:28 PMLove : சில ராசிக்காரர்கள் எளிதாக காதலில் விழுவார்களாம்.. அதுவும் இந்த நான்கு ராசிகள் எளிதில் காதல் வயப்படுவார்களாம்!
Feb 14, 2025 11:11 AMMoney Luck: கொட்டிக் கொடுக்க வரும் குரு.. 2025-ல் ஜாக்பாட் அடிக்கும் 3 ராசிகள்.. பணமழை கொட்டுவது உறுதியா?
Feb 14, 2025 10:18 AMLucky Zodiac : நான்கு கிரகங்களின் அற்புதமான சேர்க்கை.. இந்த 5 ராசிக்காரர்களுக்கு யோகம்.. வாழ்க்கையில் மாற்றம் நிகழும்!
Feb 14, 2025 10:03 AMValentine Day Remedy : காதல் வாழ்க்கையை மேம்படுத்த காதலர் தினத்தில் இதை செய்யுங்கள்.. உறவு வலுவாக இருக்குமாம்!
இன்றைய பஞ்சாங்கம்
தமிழ் ஆண்டு : குரோதி வருடம்
தமிழ் மாதம் : தை 13
தேதி: 26.01.2025
கிழமை - ஞாயிற்றுக்கிழமை
சூரிய உதயம்
இன்றைய சூரிய உதயமானது காலை 6:35 மணிக்கு நடைபெறுகிறது
நல்ல நேரம்
காலை 07:30 மணி முதல் 08:30 மணி வரை நல்ல நேரம்
மாலை 03:00 மணி முதல் 04:00 மணி வரை நல்ல நேரம்
கௌரி நல்ல நேரம்
காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை கெளரி நல்ல நேரம்
மாலை 03:00 மணி முதல் 04:00 மணி வரை கெளரி நல்ல நேரம்
ராகுகாலம்
மாலை 04:30 மணி முதல் 06:00 மணி வரை எமகண்டம்
௭மகண்டம்
பகல் 12:00 மணி முதல் 01:30 மணி வரை எமகண்டம்
கரணம்
10:30 மணி முதல் 12:00 மணி வரை
காலை: 07.56 வரை கௌலவம், பின்பு இரவு: 08.17 வரை தைதுலம், பின்பு கரசை.
குளிகை
காலை 03:00 மணி முதல் 04:30 மணி வரை குளிகை
(குளிகை காலத்தில் ஒரு காரியம் செய்தால் மீண்டும் அதேபோன்று நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்)
சூரிய அஸ்தமனம்
மாலை 6:04 மணிக்கு சூரிய அஸ்தமனம் நடைபெறும்
சந்திராஷ்டம நட்சத்திரம்
கிருத்திகை, பரணி
சந்திராஷ்டம ராசி
இன்றைய காலை 08.12 வரை மேஷம், பின்பு ரிஷபம் ராசிக்கு சந்திராஷ்டமம்.
சூலம்
இன்று மேற்கே சூலம்
பரிகாரம்
இன்றைய பரிகாரமாக வெல்லம் பயன்படுத்தலாம்
இன்றைய கோயில் விசேஷங்கள்
- திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் காலை கெருட வாகனத்திலும் இரவு ஹனுமார் வாகனத்திலும் பவனி வரும் காட்சி நடைபெறும்.
- கல்லிடைக்குறிச்சி, திருவாவடுதுறை, திருமொச்சியூர் சூரியனார் கோவில் இத்தலங்களில் ஸ்ரீசிவபெருமான் உற்சவம் ஆரம்பம் நடைபெறும்.
- திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோயிலில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு நடைபெறும்.
- ஸ்ரீபெரும்புதூர் மணவாளமுனிகள் புறப்பாடு நடைபெறும்.
- திருவாவடுதுறை சிவபெருமான் உற்சவ ஆரம்பம்.
இன்றைய வழிபாடு
ஸ்ரீ சிவபெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும் என்பது நன்மை.
பொறுப்பு துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் மற்றும் தமிழ் நாள்காட்டியின் தகவல்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட செய்தியாகும். இதில் உள்ள கருத்துக்கள் மற்றும் தகவல்களுக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பொறுப்பாகாது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்