மகா சிவராத்திரி வழிபாட்டின் சிறப்புகள் என்ன?.. இன்று பிப்.26 நல்ல நேரம், ராகு காலம் எப்போது?.. விபரம் இதோ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மகா சிவராத்திரி வழிபாட்டின் சிறப்புகள் என்ன?.. இன்று பிப்.26 நல்ல நேரம், ராகு காலம் எப்போது?.. விபரம் இதோ!

மகா சிவராத்திரி வழிபாட்டின் சிறப்புகள் என்ன?.. இன்று பிப்.26 நல்ல நேரம், ராகு காலம் எப்போது?.. விபரம் இதோ!

Karthikeyan S HT Tamil
Published Feb 26, 2025 05:30 AM IST

தமிழ் நாள்காட்டியின் படி, 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் நாளான இன்று முக்கிய விஷேசங்கள், பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் உள்ளிட்ட முக்கிய விவரங்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

மகா சிவராத்திரி வழிபாட்டின் சிறப்புகள் என்ன?.. இன்று பிப்.26 நல்ல நேரம், ராகு காலம் எப்போது?.. விபரம் இதோ!
மகா சிவராத்திரி வழிபாட்டின் சிறப்புகள் என்ன?.. இன்று பிப்.26 நல்ல நேரம், ராகு காலம் எப்போது?.. விபரம் இதோ!

இது போன்ற போட்டோக்கள்

மேலும், இன்றைய தினம் இந்துக்களின் முக்கிய பண்டிகையான மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. சிவராத்திரிக்கு விரதம் இருப்பவர்கள் அதிகாலை நீராடி வீட்டில் உள்ள சிவன் படத்தையோ அல்லது சிவலிங்கத்தையோ அலங்காரம் செய்து பூஜை செய்யதால் சக நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த நாளில் இன்று பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகுகாலம், எமகண்டம் குறித்த முக்கிய தகவல்களை தமிழ் நாள்காட்டியின் மூலம் இங்கு அறிவோம்.

இன்றைய பஞ்சாங்கம்

  • தமிழ் ஆண்டு : குரோதி வருடம்
  • தமிழ் மாதம் : மாசி 14
  • தேதி: 26.02.2025
  • கிழமை - புதன்கிழமை

சூரிய உதயம்

  • இன்றைய சூரிய உதயமானது காலை 6:29 மணிக்கு நடைபெறுகிறது.

நல்ல நேரம்

  • காலை 09:30 மணி முதல் 10:30 மணி வரை நல்ல நேரம்
  • மாலை 04:30 மணி முதல் 05:30 மணி வரை நல்ல நேரம்

கௌரி நல்ல நேரம்

  • பகல் 10:30 மணி முதல் 11:30 மணி வரை கெளரி நல்ல நேரம்
  • மாலை 06:30 மணி முதல் 07:30 மணி வரை கெளரி நல்ல நேரம்

ராகு காலம்

  • பிற்பகல் 12:00 மணி முதல் 01:30 மணி வரை ராகு காலம்

௭மகண்டம்

  • காலை 07:30 மணி முதல் 09:00 மணி வரை எமகண்டம்

குளிகை

  • காலை 10:30 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை குளிகை

(குளிகை காலத்தில் ஒரு காரியம் செய்தால் மீண்டும் அதேபோன்று நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்)

கரணம்

  • கரணம்: 06 - 07.30.
  • காலை: 10.18 வரை வணிசை, பின்பு இரவு 09.40 வரை பத்திரை, பின்பு சகுனி.

சூரிய அஸ்தமனம்

  • மாலை 6:12 மணிக்கு சூரிய அஸ்தமனம் நடைபெறும்.

சந்திராஷ்டம நட்சத்திரம்

  • திருவாதிரை, புனர்பூசம்

சந்திராஷ்டம ராசி

  • இன்றைய நாள் முழுவதும் மிதுனம் ராசிக்கு சந்திராஷ்டமம்.

சூலம்

  • இன்று வடக்கே சூலம்

பரிகாரம்

  • இன்றைய பரிகாரமாக பால் பயன்படுத்தலாம்

நாள்

  • மேல் நோக்கு நாள்

மேலும் படிக்க: சூரியன் அதிர்ஷ்டங்களை அள்ளிக்கொடுக்க வருகிறாரா?.. இந்த ராசிகள் வாழ்க்கை மாறப்போகிறதா?

இன்றைய கோயில் விசேஷங்கள்

  • திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் திருக்கோயிலில் மஹா சிவராத்திரி இரவு நான்கு ஜாம பூஜை நடைபெறும்.
  • குற்றம் பொறுத்த நாதர் ஆலயத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு நடைபெறும்.
  • மூங்கிலணை ஸ்ரீகாமாட்சியம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு பெருந்திருவிழா நடைபெறும்.
  • திருவண்ணாமலை திருக்கோயிலில் அரிபிரம்மாதியர் அடிமுடி தேடிய லீலை நடைபெறும்.
  • சாத்தூர் வேங்கடேசப்பெருமாள் கோயிலில் தோளுக்கினியானில் புறப்பாடு நடைபெறும்.

மேலும் படிக்க: சனி அஸ்தமனத்தில் சகல நன்மைகளை கொடுக்கும் ராசிகள்.. எது உங்க ராசி?

இன்றைய வழிபாடு

  • ஸ்ரீ சிவபெருமானை வழிபட எண்ணத் தெளிவு உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
  • புதன்கிழமையான இன்று புதன் பகவானுக்கு உரிய நாளாக கருதப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் மற்றும் தமிழ் நாள்காட்டியின் தகவல்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட செய்தியாகும். இதில் உள்ள கருத்துக்கள் மற்றும் தகவல்களுக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பொறுப்பாகாது.