Tamil Calendar 25.01.2025: இன்று நாள் எப்படி?.. யாரை வழிபடுவதுசிறப்பு?.. நல்ல நேரம், ராகு காலம் எப்போது?.. முழு விபரம்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Tamil Calendar 25.01.2025: இன்று நாள் எப்படி?.. யாரை வழிபடுவதுசிறப்பு?.. நல்ல நேரம், ராகு காலம் எப்போது?.. முழு விபரம்!

Tamil Calendar 25.01.2025: இன்று நாள் எப்படி?.. யாரை வழிபடுவதுசிறப்பு?.. நல்ல நேரம், ராகு காலம் எப்போது?.. முழு விபரம்!

Karthikeyan S HT Tamil
Jan 25, 2025 05:30 AM IST

Tamil Calendar 25.01.2025: தமிழ் நாள்காட்டியின் படி, 2025 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் நாளான இன்று (சனிக்கிழமை) முக்கிய விஷேசங்கள், பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் உள்ளிட்ட முக்கிய விவரங்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

Tamil Calendar 25.01.2025: இன்று நாள் எப்படி?.. யாரை வழிபடுவதுசிறப்பு?.. நல்ல நேரம், ராகு காலம் எப்போது?.. முழு விபரம்!
Tamil Calendar 25.01.2025: இன்று நாள் எப்படி?.. யாரை வழிபடுவதுசிறப்பு?.. நல்ல நேரம், ராகு காலம் எப்போது?.. முழு விபரம்!

மேலும், சனிக்கிழமை பெருமாளுக்கு உரிய அருமையான நாளாகவும் கருதப்படுகிறது. திருப்பதி ஏழுமலையானுக்கும் உகந்த நாள். பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வழிபடுங்கள். சகல ஐஸ்வரியங்களும் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பெருமாளைச் சனிக்கிழமை அன்று ஆராதனை செய்து வழிபாடு செய்தால், சனி பகவான் கொடுக்கும் சங்கடத்தில் இருந்து காக்கும் கடவுளான பெருமாள் நம்மைக் காத்தருள்வார் என்பது ஐதீகம். இந்த சிறப்பு வாய்ந்த நாளில் பூஜைக்கு உரிய நல்ல நேரம், இன்றைய விஷேசங்கள், நல்லநேரம், எமகண்டம் குறித்த முக்கிய தகவல்களை தமிழ் நாள்காட்டியின் மூலம் இங்கு அறிவோம்.

இன்றைய பஞ்சாங்கம்

தமிழ் ஆண்டு : குரோதி வருடம்

தமிழ் மாதம் : தை 12

தேதி: 25.01.2025

கிழமை - சனிக்கிழமை

சூரிய உதயம்

இன்றைய சூரிய உதயமானது காலை 6:35 மணிக்கு நடைபெறுகிறது

நல்ல நேரம்

காலை 07:30 மணி முதல் 08:30 மணி வரை நல்ல நேரம்

மாலை 04:30 மணி முதல் 05:30 மணி வரை நல்ல நேரம்

கௌரி நல்ல நேரம்

காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை கெளரி நல்ல நேரம்

இரவு 09:30 மணி முதல் 10:30 மணி வரை கெளரி நல்ல நேரம்

ராகுகாலம்

காலை 09:30 மணி முதல் 10:30 மணி வரை ராகுகாலம்

௭மகண்டம்

பிற்பகல் 01:30 மணி முதல் 03:00 மணி வரை எமகண்டம்

கரணம்

01:30 மணி முதல் 03:00 மணி வரை

காலை: 06.58 வரை பவம், பின்பு இரவு: 07.34 வரை பாலவம், பின்பு கௌலவம்.

குளிகை

காலை 06:00 மணி முதல் 07:30 மணி வரை குளிகை

(குளிகை காலத்தில் ஒரு காரியம் செய்தால் மீண்டும் அதேபோன்று நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்)

சூரிய அஸ்தமனம்

மாலை 6:04 மணிக்கு சூரிய அஸ்தமனம் நடைபெறும்.

சந்திராஷ்டம நட்சத்திரம்

அஸ்வினி, பரணி

சந்திராஷ்டம ராசி

இன்றைய நாள் முழுவதும் மேஷம்ராசிக்கு சந்திராஷ்டமம்.

சூலம்

இன்று கிழக்கே சூலம்

பரிகாரம்

இன்றைய பரிகாரமாக தயிர் பயன்படுத்தலாம்.

 

இன்றைய கோயில் விசேஷங்கள்

  • திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோயிலில் காலை சனீஸ்வரர் பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும்.
  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும்.
  • ஸ்ரீரங்கம் நம்பெருமான் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்காரத் திருமஞ்சன சேவை நடைபெறும்.
  • மதுரை ஸ்ரீசெல்லத்தம்மன் ஆலயத்தில் அம்மன் சப்பரத்தில் பவனி வரும் காட்சி நடைபெறும்.
  • திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு நடைபெறும்.

 

இன்றைய வழிபாடு

  • ஸ்ரீ பெருமாளை வழிபட இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் மற்றும் தமிழ் நாள்காட்டியின் தகவல்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட செய்தியாகும். இதில் உள்ள கருத்துக்கள் மற்றும் தகவல்களுக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பொறுப்பாகாது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்