கஷ்டங்கள் தீர திங்கள்கிழமை என்ன செய்ய வேண்டும்?.. இன்று மார்ச் 24 நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் எப்போது? -விபரம் இதோ!
தமிழ் காலண்டர்: தமிழ் நாள்காட்டியின் படி, 2025 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதியான இன்று முக்கிய விஷேசங்கள், பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் உள்ளிட்ட முக்கிய விவரங்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

தமிழ் காலண்டர் 24.03.2025: இந்து சாஸ்திரத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அந்த வகையில், திங்கள்கிழமையான இன்று பொதுவாக சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள் என்பது ஆன்மீக நம்பிக்கை. இந்த நாளில் சிவபெருமானை வழிபடுவதால் குடும்பத்தில் அமைதி நிலவும், தீராத கஷ்டங்களும் தீரும் என்பது கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
May 12, 2025 12:18 PMபுத்த பூர்ணிமா நாளான இன்று உருவாகும் யோகம்.. எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும்?
May 12, 2025 05:00 AM"லாபத்தில் மிதக்கும் யோகம் யாருக்கு.. மகிழ்ச்சியில் சாத்தியமா" இன்று மே 12 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க
May 11, 2025 02:57 PMநவ பஞ்சம ராஜ யோகம்.. இந்த 3 ராசிகளும் அதிர்ஷ்டத்தின் முகவரி.. பண ஆதாயம், வாழ்க்கையில் வெற்றி
May 11, 2025 07:00 AMகுரு சுக்கிரன் பலன்கள்: பணமழை கஜலட்சுமி யோகம்.. குரு சுக்கிரன் கொட்டி தீர்க்கும் ராசிகள்..!
May 11, 2025 04:45 AM'மேஷம் முதல் மீனம் வரை.. மே 11ஆம் தேதி எப்படி இருக்கப்போகிறது..’: 12 ராசிகளுக்கான பலன்கள்!
May 10, 2025 11:40 PMஇரு கிரகங்களின் சஞ்சாரம்.. உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்! வளர்ச்சி, நல்ல நேரத்தை அனுபவிக்கும் ராசிகள்
திங்கட்கிழமை அம்பிகை வழிபாட்டுக்கு உகந்த நாள். அம்பிகை வழிபாட்டுக்கு மட்டுமல்லாமல், சந்திரனை வழிபடவும் திங்கட்கிழமை உகந்த நாள். அந்தவகையில், மார்ச் 24 ஆம் தேதியான இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம், எமகண்டம், பூஜைக்கு உரிய சிறந்த நேரம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.
இன்றைய பஞ்சாங்கம்
தமிழ் ஆண்டு : குரோதி வருடம்
தமிழ் மாதம் : பங்குனி 10
தேதி: 24.03.2025
கிழமை - திங்கள்கிழமை
சூரிய உதயம்
இன்றைய சூரிய உதயமானது காலை 6:20 மணிக்கு நடைபெறுகிறது
நல்ல நேரம்
காலை 06:30 மணி முதல் 07:30 மணி வரை நல்ல நேரம்
மாலை 04:30 மணி முதல் மாலை 05:30 வரை நல்ல நேரம்
கௌரி நல்ல நேரம்
பகல் 01:30 மணி முதல் 02:30 மணி வரை கெளரி நல்ல நேரம்
இரவு 07:30 மணி முதல் 08:30 மணி வரை கெளரி நல்ல நேரம்
ராகு காலம்
காலை 07:30 மணி முதல் 09:00 மணி வரை ராகு காலம்
௭மகண்டம்
காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை எமகண்டம்
கரணம்
கரணம்: 09.00- 10.30
பிற்பகல்: 01.35 வரை வணிசை, பின்பு பத்திரை.
குளிகை
பிற்பகல்: 01.30 மணி முதல் 03:00 மணி வரை குளிகை நேரம்.
(குளிகை காலத்தில் ஒரு காரியம் செய்தால் மீண்டும் அதேபோன்று நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்)
சூரிய அஸ்தமனம்
மாலை 6:17 மணிக்கு இன்று சூரிய அஸ்தமனம் நடைபெறும்.
சந்திராஷ்டம நட்சத்திரம்
மிருகசீரிஷம், திருவாதிரை
சந்திராஷ்டம ராசி
காலை: 10.12 வரை ரிஷபம் பின்பு மிதுனம் ராசிக்கு சந்திராஷ்டமம்.
சூலம்
இன்று கிழக்கே சூலம்
பரிகாரம்
இன்றைய பரிகாரமாக தயிர் பயன்படுத்தலாம்.
நாள்
மேல் நோக்கு நாள்
இன்றைய கோயில் விசேஷங்கள்
திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோவிலில் மாலை சோமவார வழிபாடு.
ஸ்ரீகுற்றம் பொறுத்த நாதர் ஆலயத்தில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடைபெறும்.
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு புஷ்ப பாவாடை தரிசனம் நடைபெறும்.
திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பாடு நடைபெறும்.
இன்றைய வழிபாடு
ஸ்ரீ அம்பாளை தீபம் ஏற்றி வழிபட செய்தொழில் சிறக்கும் என்பது நம்பிக்கை.
திங்கட்கிழமை அம்பிகை வழிபாட்டுக்கு உகந்த நாள். அம்பிகை வழிபாட்டுக்கு மட்டுமல்லாமல், சந்திரனை வழிபடவும் திங்கட்கிழமை உகந்த நாள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் மற்றும் தமிழ் நாள்காட்டியின் தகவல்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட செய்தியாகும். இதில் உள்ள கருத்துக்கள் மற்றும் தகவல்களுக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பொறுப்பாகாது.
