அனைத்தையும் நிறைவேற்றும் முருகர் வழிபாடு.. இன்று ஏப்ரல் 22 நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் எப்போது?.. விபரம் இதோ!
இன்றைய பஞ்சாங்கம்: தமிழ் நாள்காட்டியின் படி, 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதியான இன்றைய நாளின் முக்கிய விஷேசங்கள், பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் இதோ உங்களுக்காக..

இன்றைய பஞ்சாங்கம் 22.04.2025: இந்து சாஸ்திரத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அந்தவகையில், செவ்வாய்கிழமையான இன்று பொதுவாக தமிழ் கடவுகளாக போற்றப்படும் முருகப் பெருமானுக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் முருகனை வணங்கி தொடங்கும் செயல்கள் அனைத்தும் வெற்றியடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தகைய சிறப்புகுரிய நாளான இன்று (ஏப்ரல் 22) நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், பூஜைக்கு உரிய சிறந்த நேரம் மற்றும் முக்கிய விஷேசங்கள் குறித்து இங்கு தெரிந்துகொள்ளலாம்.
இது போன்ற போட்டோக்கள்
May 15, 2025 07:02 AMதடைகள் நீங்கி, அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா.. தொட்டது துலங்க வியாழக்கிழமை விஷ்ணு வழிபாட்டோடு இதை செய்ய மறந்துடாதீங்க!
May 15, 2025 06:30 AMபணம் கொட்டும்.. பதவி உயர்வு.. வெற்றி மேல் வெற்றி தரும் கேது பகவான்.. எந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பாருங்க!
May 15, 2025 05:00 AM'வெற்றி தேடி வரும்.. உழைப்பில் கவனம்' மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே இன்று மே. 15 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க
May 14, 2025 08:05 PMகுரு பகவான் - சூரியன் ராசி மாற்றம்.. இந்த 4 ராசிக்காரர்களுக்கு பண மழை, வெற்றி உறுதி.. உங்க ராசி என்ன?
May 14, 2025 05:09 PMநாளைய ராசிபலன்: தடைகள் உடையுமா? செலவுகள் அதிகரிக்குமா? மேஷம் முதல் மீனம் வரை.. நாளை மே 15 உங்களுக்கு எப்படி இருக்கும்?
May 14, 2025 01:38 PMபணம் மூட்டைகளோடு குபேரன் வருகிறார்.. கொட்டி தீர்க்கப் போகும் ராசிகள்.. எது உங்க ராசி சொல்லுங்க?
இன்றைய பஞ்சாங்கம்
தமிழ் ஆண்டு : விசுவாவசு
தமிழ் மாதம் : சித்திரை 09
தேதி: 22.04.2025
கிழமை - செவ்வாய்கிழமை
சூரிய உதயம்
இன்றைய சூரிய உதயமானது காலை 6:01 மணிக்கு நடைபெறுகிறது
நல்ல நேரம்
காலை 07:30 மணி முதல் காலை 08:30 மணி வரை நல்ல நேரம்
மாலை 04:30 மணி முதல் 05:30 வரை நல்ல நேரம்
கௌரி நல்ல நேரம்
காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை கெளரி நல்ல நேரம்
இரவு 07:30 மணி முதல் 08:30 மணி வரை கெளரி நல்ல நேரம்
ராகு காலம்
மாலை 03:00 மணி முதல் 04:30 மணி வரை ராகு காலம்
௭மகண்டம்
காலை 09:00 மணி முதல் காலை 10:30 மணி வரை எமகண்டம்
கரணம்
கரணம்: 07.30- 09.00.
அதிகாலை: 02.05 வரை தைதுலம், பின்பு பிற்பகல்: 01.37 வரை கரசை, பின்பு வணிசை.
குளிகை
பிற்பகல்: 12.00 மணி முதல் 01:30 மணி வரை குளிகை நேரம்.
(குளிகை காலத்தில் ஒரு காரியம் செய்தால் மீண்டும் அதேபோன்று நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்)
சூரிய அஸ்தமனம்
மாலை 6:20 மணிக்கு இன்று சூரிய அஸ்தமனம் நடைபெறும்.
சந்திராஷ்டம நட்சத்திரம்
திருவாதிரை, புனர்பூசம்
சந்திராஷ்டம ராசி
நள்ளிரவு: 12.19 வரை மிதுனம் பின்பு கடகம் ராசிக்கு சந்திராஷ்டமம்.
சூலம்
இன்று வடக்கே சூலம்
பரிகாரம்
இன்றைய பரிகாரமாக பால் பயன்படுத்தலாம்.
நாள்
மேல் நோக்கு நாள்
இன்றைய கோயில் விசேஷங்கள்
ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி சன்னதியில் நான்கு கருட சேவை.
சென்னை ஸ்ரீசென்ன கேசவப்பெருமாள் ஆலயத்தில் சுவாமி புஷ்ப பல்லக்கில் பவனி வரும் காட்சி.
திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் ஆலயத்தில் சுவாமி மயில் வாகனத்தில் புறப்பாடு.
சென்னை ஸ்ரீகேசவ பெருமாள் திருக்கோயிலில் சுவாமி கருட வாகனத்தில் திருவீதி உலா.
ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமான் ஆலயத்தில் சுவாமி கருட வாகனத்தில் புறப்பாடு.
சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் ஆலயத்தில் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல்.
திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் திருக்கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு.
இன்றைய வழிபாடு
ஸ்ரீ முருகப்பெருமானை வழிபாடு செய்ய இழுபறியான பிரச்னைகள் தீரும் என்பது நம்பிக்கை.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் மற்றும் தமிழ் நாள்காட்டியின் தகவல்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட செய்தியாகும். இதில் உள்ள கருத்துக்கள் மற்றும் தகவல்களுக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பொறுப்பாகாது.
