மகிழ்ச்சியை கொடுக்கும் விநாயகர் வழிபாடு.. இன்று ஏப்.16 சங்கடஹர சதுர்த்தி, நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் எப்போது?
தமிழ் நாள்காட்டியின் படி, 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதியான இன்று முக்கிய விஷேசங்கள், பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் உள்ளிட்ட முக்கிய விவரங்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

தமிழ் காலண்டர் 16.04.2025: இந்து சாஸ்திரத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அந்தவகையில், புதன்கிழமையான இன்று புதன் பகவானுக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. புதன் கிரகம் அறிவு, விவேகம், பேச்சு திறன், வியாபாரம், லாபம் போன்றவற்றிற்கு காரணமான கிரகமாகும். எனவே இந்தநாளின் வழிபாடு மிகவும் சிறப்பான பலன்களை தரும் என்பது நம்பிக்கை.
இது போன்ற போட்டோக்கள்
Apr 28, 2025 02:30 PMஇந்த ராசிக்காரர்களுக்கு விரைவில் அதிர்ஷ்ட யோகம்.. நிதி ஆதாயங்கள், மன அமைதி கிடைக்கும்!
Apr 28, 2025 05:00 AMவெற்றி சாத்தியம்.. பணத்தை பத்திரம்.. கவனமா இருக்க வேண்டியது யார்.. இன்று ஏப்.28 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 27, 2025 02:57 PMகௌரி யோகம் 5 ராசிகளின் செல்வத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும்.. வாராந்திர டாரட் பலன் என்ன?
Apr 27, 2025 02:11 PMமே மாதத்தில் அரிய புதாதித்ய ராஜயோகம்.. அதிர்ஷடம் காத்திருக்கும் இந்த 3 ராசிக்காரர்கள்
Apr 27, 2025 07:30 AMராகு குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி பொங்கப் போகும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?
Apr 27, 2025 05:00 AMலாபமும் மகிழ்ச்சியும் தேடி வரும் யோகம் யாருக்கு.. கவனமாக இருக்க வேண்டியது யார்.. இன்று உங்க நாள் எப்படி இருக்கு பாருங்க!
அதேபோன்று புதன்கிழமை விநாயகரை வழிபடும் வழக்கமும் உள்ளது. மத நம்பிக்கைகளின் படி, விநாயகர் வழிபாடு என்பது மகிழ்ச்சியையும் செழிப்பையும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. இத்தகைய சிறப்புக்குரிய நாளான இன்று (ஏப்ரல் 16) பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் குறித்த முக்கிய தகவல்களை தமிழ் நாள்காட்டியின் மூலம் இங்கு அறிவோம்.
இன்றைய பஞ்சாங்கம்
தமிழ் ஆண்டு : விசுவாவசு வருடம்
தமிழ் மாதம் : சித்திரை 03
தேதி: 16.04.2025
கிழமை - புதன்கிழமை
சூரிய உதயம்
இன்றைய சூரிய உதயமானது காலை 6:03 மணிக்கு நடைபெறுகிறது.
நல்ல நேரம்
காலை 09:30 மணி முதல் 10:30 மணி வரை நல்ல நேரம்
மாலை 04:30 மணி முதல் 05:30 மணி வரை நல்ல நேரம்
கௌரி நல்ல நேரம்
பகல் 10:30 மணி முதல் 11:30 மணி வரை கெளரி நல்ல நேரம்
மாலை 06:30 மணி முதல் 07:30 மணி வரை கெளரி நல்ல நேரம்
ராகு காலம்
பிற்பகல் 12:00 மணி முதல் 01:30 மணி வரை ராகு காலம்
௭மகண்டம்
காலை 07:30 மணி முதல் 09:00 மணி வரை எமகண்டம்
குளிகை
காலை 10:30 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை குளிகை
(குளிகை காலத்தில் ஒரு காரியம் செய்தால் மீண்டும் அதேபோன்று நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்)
கரணம்
கரணம்: 06 - 07.30.
பிற்பகல்: 11.57 வரை பத்திரை, பின்பு நள்ளிரவு 12.41 வரை பவம், பின்பு பாலவம்.
சூரிய அஸ்தமனம்
மாலை 6:19 மணிக்கு சூரிய அஸ்தமனம் நடைபெறும்.
சந்திராஷ்டம நட்சத்திரம்
அஸ்வினி
சந்திராஷ்டம ராசி
இன்றைய நாள் முழுவதும் அஸ்வினி ராசிக்கு சந்திராஷ்டமம்.
சூலம்
இன்று வடக்கே சூலம்
பரிகாரம்
இன்றைய பரிகாரமாக பால் பயன்படுத்தலாம்
நாள்
சம நோக்கு நாள்
சங்கடஹர சதுர்த்தி
இன்றைய கோயில் விசேஷங்கள்
சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் திருத்தலத்தில் தாய் வெள்ளி காமதேனு வாகனத்தில் பவனி வரும் காட்சி.
சென்னை ஸ்ரீசென்ன கேசவப்பெருமாள் காலை சூரிய பிரபை வாகனத்திலும், இரவு சேஷ வாகனத்திலும் திருவீதி உலா.
வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் திருக்கோயிலில் அம்மன் பவனி வரும் காட்சி.
ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகள்ளபிரான் ஆலயத்தில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை வழிபாடு.
சென்னை ஸ்ரீசென்ன கேசவப்பெருமாள் காலை சூரிய பிரபை வாகனத்திலும், இரவு சேஷ வாகனத்திலும் திருவீதி உலா.
இன்றைய வழிபாடு
விநாயகரை வழிபட்டால் செழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை.
ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபட துன்பங்கள் விலகி நன்மைகள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் மற்றும் தமிழ் நாள்காட்டியின் தகவல்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட செய்தியாகும். இதில் உள்ள கருத்துக்கள் மற்றும் தகவல்களுக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பொறுப்பாகாது.
