ஐஸ்வரியத்தை அள்ளித்தரும் வெள்ளிக்கிழமை.. இன்று மார்ச் 14 நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் எப்போது? - விபரம் இதோ!
தமிழ் காலண்டர் தகவல்கள்: தமிழ் தினசரி காலண்டர் தகவல்கள் படி, 2025 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் நாளான இன்று முக்கிய விஷேசங்கள், பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் உள்ளிட்ட முக்கிய விவரங்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

தமிழ் காலண்டர் தகவல்கள் 14.03.2025: இந்து சாஸ்திரத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அந்தவகையில், வெள்ளிக்கிழமையான இன்று பொதுவாக மகாலட்சுமிக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியைத் தொடர்ந்து 24 வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு செய்து வந்தால் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. தாமரை இதழ் கொண்டு மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்து மந்திரம் கூறினால் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தகைய சிறப்பு வாய்ந்த நாளான இன்று (மார்ச் 14) பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகுகாலம், எமகண்டம் குறித்த முக்கிய தகவல்களை தமிழ் நாள்காட்டியின் மூலம் இங்கு அறிவோம்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 16, 2025 01:08 PMசூரியன் - புதன் - சுக்கிரன் சேர்க்கை.. படிப்படியாக லாபம் பெறும் மூன்று அதிர்ஷ்டக்கார ராசிகள்
Mar 16, 2025 10:43 AMமீன ராசியில் புதன் வக்ர நிலை.. தொழில் நெருக்கடியை அடித்து ஓட விடப்போகும் 3 ராசிகள்
Mar 16, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : பண மழையில் நனையும் அதிர்ஷ்டம் உங்கள் பக்கமா.. எச்சரிக்கையா இருக்க வேண்டியது யார் பாருங்க!
Mar 15, 2025 05:49 PMராகு புதன் சேர்க்கை: 18 ஆண்டுகளுக்குப் பிறகு 2025-ல் சேரும் ராகு புதன்.. குபேர கடலில் நீந்த போகும் 3 ராசிகள்..!
Mar 15, 2025 02:33 PMஉத்தர பாத்ரபத நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் சனி.. மூன்று ராசிக்கு அடிக்க போகுது ஜாக்பாட்.. உங்க ராசி இருக்கா பாருங்க!
Mar 15, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : நம்பிக்கை நலம் தரும்.. எச்சரிக்கையாக இருக்க வேண்டியது யார்.. இன்று உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!
இன்றைய பஞ்சாங்கம்
- தமிழ் ஆண்டு : குரோதி வருடம்
- தமிழ் மாதம் : மாசி 30
- தேதி: 14.03.2025
- கிழமை - வெள்ளிக்கிழமை
சூரிய உதயம்
- இன்றைய சூரிய உதயமானது காலை 6:23 மணிக்கு நடைபெறுகிறது.
மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று மார்ச் 14 யாருக்கு தடுமாற்றம் ஏற்படும்?
நல்ல நேரம்
- காலை 09:30 மணி முதல் 10:30 மணி வரை நல்ல நேரம்
- மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை நல்ல நேரம்
கௌரி நல்ல நேரம்
- மதியம் 12:30 மணி முதல் 01:30 மணி வரை கெளரி நல்ல நேரம்
- மாலை 06:30 மணி முதல் 07:30 மணி வரை கெளரி நல்ல நேரம்
ராகு காலம்
- காலை 10:30 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை ராகு காலம்
௭மகண்டம்
- பிற்பகல் 03:00 மணி முதல் 04:30 மணி வரை எமகண்டம்
கரணம்
- கரணம்: 01.30 - 03.00.
- அதிகாலை: 12.58 வரை பத்திரை, பின்பு பிற்பகல்: 12.57 வரை பவம், பின்பு பாவவம்.
குளிகை
- காலை 07:30 மணி முதல் காலை 09:00 மணி வரை குளிகை
(குளிகை காலத்தில் ஒரு காரியம் செய்தால் மீண்டும் அதேபோன்று நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்)
சூரிய அஸ்தமனம்
- மாலை 6:13 மணிக்கு சூரிய அஸ்தமனம் நடைபெறும்.
சந்திராஷ்டம நட்சத்திரம்
- அவிட்டம்
சந்திராஷ்டம ராசி
- பிற்பகல்: 12.42 வரை மகரம் பின்பு கும்பம் ராசிக்கு சந்திராஷ்டமம்.
சூலம்
- இன்று மேற்கே சூலம்
பரிகாரம்
- இன்றைய பரிகாரமாக வெல்லம் பயன்படுத்தலாம்.
நாள்
- மேல் நோக்கு நாள்
மேலும் படிக்க | சந்திர பெயர்ச்சி: மகாலட்சுமி ராஜயோகம் உருவானது.. இந்த 3 ராசிகள் வீட்டில் பணமழை கொட்டுமாம்!
இன்றைய கோயில் விசேஷங்கள்
- திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோயிலில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும்.
- திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் ஆலயத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும்.
- திருக்கோஷ்டியூர் ஸ்ரீசௌமிய நாராயண பெருமாள் திருக்கோயிலில் தெப்ப உற்சவம் நடைபெறும்.
இன்றைய வழிபாடு
- ஸ்ரீ காமாட்சி அம்மனை வழிபட தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும்.
- ஸ்ரீ மகாலட்சுமி தாயார் வழிபாடு மனதிற்கு மகிழ்ச்சியை தரும் என்பது நம்பிக்கை.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் மற்றும் தமிழ் நாள்காட்டியின் தகவல்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட செய்தியாகும். இதில் உள்ள கருத்துக்கள் மற்றும் தகவல்களுக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பொறுப்பாகாது.
