தீராத கஷ்டங்களை தீர்க்கும் சிவன்.. இன்று தமிழ் புத்தாண்டு, நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் எப்போது?.. விபரம் இதோ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  தீராத கஷ்டங்களை தீர்க்கும் சிவன்.. இன்று தமிழ் புத்தாண்டு, நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் எப்போது?.. விபரம் இதோ!

தீராத கஷ்டங்களை தீர்க்கும் சிவன்.. இன்று தமிழ் புத்தாண்டு, நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் எப்போது?.. விபரம் இதோ!

Karthikeyan S HT Tamil
Published Apr 14, 2025 06:21 AM IST

தமிழ் காலண்டர்: தமிழ் நாள்காட்டியின் படி, 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாளான இன்று முக்கிய விஷேசங்கள், பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் உள்ளிட்ட முக்கிய விவரங்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

தீராத கஷ்டங்களை தீர்க்கும் சிவன்.. இன்று தமிழ் புத்தாண்டு, நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் எப்போது?.. விபரம் இதோ!
தீராத கஷ்டங்களை தீர்க்கும் சிவன்.. இன்று தமிழ் புத்தாண்டு, நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் எப்போது?.. விபரம் இதோ!

இது போன்ற போட்டோக்கள்

திங்கட்கிழமை அம்பிகை வழிபாட்டுக்கு உகந்த நாள். அம்பிகை வழிபாட்டுக்கு மட்டுமல்லாமல், சந்திரனை வழிபடவும் திங்கட்கிழமை உகந்த நாள். அந்தவகையில், தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14 ஆம் தேதியான இன்றைய நாளில் நல்ல நேரம், ராகுகாலம், எமகண்டம், பூஜைக்கு உரிய சிறந்த நேரம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

தமிழ் ஆண்டு : ஸ்ரீவிசுவாவசு

தமிழ் மாதம் : சித்திரை 01

தேதி: 14.04.2025

கிழமை - திங்கள்கிழமை

சூரிய உதயம்

இன்றைய சூரிய உதயமானது காலை 6:04 மணிக்கு நடைபெறுகிறது

நல்ல நேரம்

காலை 06:30 மணி முதல் 07:30 மணி வரை நல்ல நேரம்

மாலை 04:30 மணி முதல் மாலை 05:30 வரை நல்ல நேரம்

கௌரி நல்ல நேரம்

காலை 09:30 மணி முதல் 10:30 மணி வரை கெளரி நல்ல நேரம்

இரவு 07:30 மணி முதல் 08:30 மணி வரை கெளரி நல்ல நேரம்

ராகு காலம்

காலை 07:30 மணி முதல் 09:00 மணி வரை ராகு காலம்

௭மகண்டம்

காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை எமகண்டம்

கரணம்

கரணம்: 09.00- 10.30

காலை: 08.10;வரை கௌலவம், பின்பு இரவு 09.09 வரை தைதுலம், பின்பு கரசை.

குளிகை

பிற்பகல்: 01.30 மணி முதல் 03:00 மணி வரை குளிகை நேரம்.

(குளிகை காலத்தில் ஒரு காரியம் செய்தால் மீண்டும் அதேபோன்று நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்)

சூரிய அஸ்தமனம்

மாலை 6:19 மணிக்கு இன்று சூரிய அஸ்தமனம் நடைபெறும்.

சந்திராஷ்டம நட்சத்திரம்

உத்திரட்டாதி , ரேவதி

சந்திராஷ்டம ராசி

இன்றைய நாள் முழுவதும் மீனம் ராசிக்கு சந்திராஷ்டமம்.

சூலம்

இன்று கிழக்கே சூலம்

பரிகாரம்

இன்றைய பரிகாரமாக தயிர் பயன்படுத்தலாம்.

நாள்

சம நோக்கு நாள்

தமிழ் புத்தாண்டு

இன்றைய கோயில் விசேஷங்கள்

திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோவிலில் காலை தமிழ் புத்தாண்டு தின சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும்.

திருச்சி உச்சிபிள்ளையார் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும்.

மாவூற்று ஸ்ரீவேலப்பர் திருக்கோயிலில் சித்திரை பெருந்திருவிழா நடைபெறும்.

மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி ஆலயத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும்.

திருவெற்றியூர் ஸ்ரீகுற்றம்பொறுத்தநாதர் ஆலயத்தில் மாலை சோமவார வழிபாடு அபிஷேக ஆராதனை நடைபெறும்.

இன்றைய வழிபாடு

ஸ்ரீ துர்காதேவியை வழிபட தடைகள் எல்லாம் விலகும் என்பது நம்பிக்கை.

திங்கட்கிழமை அம்பிகை வழிபாட்டுக்கு உகந்த நாள். அம்பிகை வழிபாட்டுக்கு மட்டுமல்லாமல், சந்திரனை வழிபடவும் திங்கட்கிழமை உகந்த நாள்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் மற்றும் தமிழ் நாள்காட்டியின் தகவல்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட செய்தியாகும். இதில் உள்ள கருத்துக்கள் மற்றும் தகவல்களுக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பொறுப்பாகாது.

Karthikeyan S

TwittereMail
சு.கார்த்திகேயன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். வானொலி, டிஜிட்டல் ஊடகங்களில் 13+ ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், பொழுதுபோக்கு, ஆன்மிகம், லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் இளங்கலை தகவல் தொழில்நுட்பம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மின்னணு ஊடகம் மற்றும் தொடர்பியல் துறையில் பட்டம் பெற்றுள்ள இவர், கல்வி வானொலி ஞானவாணி, ஈ நாடு டிஜிட்டல், ஒன் இந்தியா தமிழ், டாப் தமிழ் நியூஸ், டைம்ஸ் நவ் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2022 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner