செல்வம் பெருகும் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு.. இன்று மே 11 நரசிம்மர் ஜெயந்தி, நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் எப்போது?
தமிழ் நாள்காட்டியின் படி, 2025 ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதியான இன்றைய நாளின் முக்கிய விஷேசங்கள், பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் உள்ளிட்ட முக்கிய விவரங்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

இந்து சாஸ்திரத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அந்தவகையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று பொதுவாக சூரிய பகவானுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் சூரிய வழிபாடு செய்வது மிகவும் விசேஷம். முறையாக அதிகாலையில் எழுந்து சூரிய உதயத்தின் போது சூரிய நமஸ்காரம் செய்து வந்தால் நம் உடலும், மனமும் தெளிவு பெறும் என்பது ஐதீகம். அதேபோல், சிவபெருமானை மனதில் நினைத்து வழிபாடுவதால் துன்பங்கள் நீங்கி, தைரியம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
May 12, 2025 12:18 PMபுத்த பூர்ணிமா நாளான இன்று உருவாகும் யோகம்.. எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும்?
May 12, 2025 05:00 AM"லாபத்தில் மிதக்கும் யோகம் யாருக்கு.. மகிழ்ச்சியில் சாத்தியமா" இன்று மே 12 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க
May 11, 2025 02:57 PMநவ பஞ்சம ராஜ யோகம்.. இந்த 3 ராசிகளும் அதிர்ஷ்டத்தின் முகவரி.. பண ஆதாயம், வாழ்க்கையில் வெற்றி
May 11, 2025 07:00 AMகுரு சுக்கிரன் பலன்கள்: பணமழை கஜலட்சுமி யோகம்.. குரு சுக்கிரன் கொட்டி தீர்க்கும் ராசிகள்..!
May 11, 2025 04:45 AM'மேஷம் முதல் மீனம் வரை.. மே 11ஆம் தேதி எப்படி இருக்கப்போகிறது..’: 12 ராசிகளுக்கான பலன்கள்!
May 10, 2025 11:40 PMஇரு கிரகங்களின் சஞ்சாரம்.. உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்! வளர்ச்சி, நல்ல நேரத்தை அனுபவிக்கும் ராசிகள்
இத்தகைய சிறப்பு வாய்ந்த நாளான இன்று (மே 11) பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகுகாலம், எமகண்டம், இன்றைய பஞ்சாங்க குறிப்புகள் குறித்த முக்கிய தகவல்களை தமிழ் நாள்காட்டியின் மூலம் இங்கு அறிவோம்.
இன்றைய பஞ்சாங்கம்
தமிழ் ஆண்டு : விசுவாவசு வருடம்
தமிழ் மாதம் : சித்திரை 28
தேதி: 11.05.2025
கிழமை - ஞாயிற்றுக்கிழமை
சூரிய உதயம்
இன்றைய சூரிய உதயமானது காலை 5:54 மணிக்கு நடைபெறுகிறது
நல்ல நேரம்
காலை 07:30 மணி முதல் 08:30 மணி வரை நல்ல நேரம்
மாலை 03:30 மணி முதல் மாலை 04:30 வரை நல்ல நேரம்
கௌரி நல்ல நேரம்
மதியம் 01:30 மணி முதல் 02:30 மணி வரை கெளரி நல்ல நேரம்
ராகு காலம்
மாலை 04:30 மணி முதல் 06:00 மணி வரை ராகு காலம்
௭மகண்டம்
பிற்பகல் 12:00 மணி முதல் 01:30 மணி வரை எமகண்டம்
கரணம்
கரணம்: 10.30 - 12.00
காலை: 07.47 வரை கரசை, பின்பு இரவு 08.47 வரை வணிசை, பின்பு பத்திரை.
குளிகை
மாலை: 03.00 மணி முதல் 04:30 மணி வரை குளிகை நேரம்.
(குளிகை காலத்தில் ஒரு காரியம் செய்தால் மீண்டும் அதேபோன்று நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்)
சூரிய அஸ்தமனம்
மாலை 6:22 மணிக்கு இன்று சூரிய அஸ்தமனம் நடைபெறும்.
சந்திராஷ்டம நட்சத்திரம்
உத்திரட்டாதி
சந்திராஷ்டம ராசி
இன்றைய நாள் முழுவதும் மீனம் ராசிக்கு சந்திராஷ்டமம்.
சூலம்
இன்று மேற்கே சூலம்
பரிகாரம்
இன்றைய பரிகாரமாக வெல்லம் பயன்படுத்தலாம்
நாள்
சம நோக்கு நாள்
ஸ்ரீ கள்ளழகர் எதிர் சேவை.
சுபமுகூர்த்த நாள்
நரசிம்மர் ஜெயந்தி
மேலும் படிக்க | பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்தால் பணகஷ்டம் நீங்குமா?.. வாஸ்து சாஸ்திரம் சொல்வது என்ன? - விபரம் இதோ!
இன்றைய கோயில் விசேஷங்கள்
திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கள்ளர் திருக்கோலமாய் தல்லாகுளத்தில் எதிர் சேவை.
திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோயிலில் சனீஸ்வரர் பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு.
திருக்குறிப்பு தொண்ட நாயனார் குருபூஜை
இன்றைய வழிபாடு
ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபாடு செய்து வர ஆயுள் விருத்தி உண்டாகும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் மற்றும் தமிழ் நாள்காட்டியின் தகவல்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட செய்தியாகும். இதில் உள்ள கருத்துக்கள் மற்றும் தகவல்களுக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பொறுப்பாகாது.
