Tamil Calendar 08.02.2025: சனிக்கிழமை யாரை வழிபட வேண்டும்?.. இன்று நல்ல நேரம், ராகு காலம் எப்போது?.. விபரம் இதோ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Tamil Calendar 08.02.2025: சனிக்கிழமை யாரை வழிபட வேண்டும்?.. இன்று நல்ல நேரம், ராகு காலம் எப்போது?.. விபரம் இதோ!

Tamil Calendar 08.02.2025: சனிக்கிழமை யாரை வழிபட வேண்டும்?.. இன்று நல்ல நேரம், ராகு காலம் எப்போது?.. விபரம் இதோ!

Karthikeyan S HT Tamil
Published Feb 08, 2025 06:17 AM IST

Tamil Calendar: தமிழ் நாள்காட்டியின் படி, 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 08 ஆம் நாளான இன்று முக்கிய விஷேசங்கள், பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் உள்ளிட்ட முக்கிய விவரங்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

சனிக்கிழமை யாரை வழிபட வேண்டும்?.. இன்று நல்ல நேரம், ராகு காலம் எப்போது?.. விபரம் இதோ!
சனிக்கிழமை யாரை வழிபட வேண்டும்?.. இன்று நல்ல நேரம், ராகு காலம் எப்போது?.. விபரம் இதோ!

இது போன்ற போட்டோக்கள்

மேலும், சனிக்கிழமை பெருமாளுக்கு உரிய அருமையான நாளாகவும் கருதப்படுகிறது. திருப்பதி ஏழுமலையானுக்கும் உகந்த நாள். பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வழிபடுங்கள். சகல ஐஸ்வரியங்களும் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பெருமாளைச் சனிக்கிழமை அன்று ஆராதனை செய்து வழிபாடு செய்தால், சனி பகவான் கொடுக்கும் சங்கடத்தில் இருந்து காக்கும் கடவுளான பெருமாள் நம்மைக் காத்தருள்வார் என்பது ஐதீகம். இந்த சிறப்பு வாய்ந்த நாளில் பூஜைக்கு உரிய நல்ல நேரம், இன்றைய விஷேசங்கள், நல்லநேரம், எமகண்டம் குறித்த முக்கிய தகவல்களை தமிழ் நாள்காட்டியின் மூலம் இங்கு அறிவோம்.

இன்றைய பஞ்சாங்கம்

  • தமிழ் ஆண்டு : குரோதி வருடம்
  • தமிழ் மாதம் : தை 26
  • தேதி: 08.02.2025
  • கிழமை - சனிக்கிழமை

சூரிய உதயம்

  • இன்றைய சூரிய உதயமானது காலை 6:35 மணிக்கு நடைபெறுகிறது

நல்ல நேரம்

  • காலை 07:30 மணி முதல் நண்பகல் 08:30 மணி வரை நல்ல நேரம்
  • மாலை 04:30 மணி முதல் மாலை 05:30 வரை நல்ல நேரம்

கௌரி நல்ல நேரம்

  • காலை 10:30 மணி முதல் 11:00 மணி வரை கெளரி நல்ல நேரம்
  • இரவு 09:30 மணி முதல் 10:30 மணி வரை கெளரி நல்ல நேரம்

ராகு காலம்

  • காலை 09:00 மணி முதல் 10:30 மணி வரை ராகு காலம்

௭மகண்டம்

  • பிற்பகல் 01:30 மணி முதல் 03:00 மணி வரை எமகண்டம்

கரணம்

  • கரணம்: 12.00 -01.30
  • காலை: 10.41 வரை வணிசை, பின்பு இரவு: 09.55 வரை பத்திரை, பின்பு பவம்.

குளிகை

  • காலை: 06.00 - 07.30
  • (குளிகை காலத்தில் ஒரு காரியம் செய்தால் மீண்டும் அதேபோன்று நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்)

சூரிய அஸ்தமனம்

  • மாலை 6:09 மணிக்கு இன்று சூரிய அஸ்தமனம் நடைபெறும்.

சந்திராஷ்டம நட்சத்திரம்

  • விசாகம், அனுஷம்

சந்திராஷ்டம ராசி

  • காலை: 06.09 வரை துலாம் பின்பு கன்னி ராசி சந்திராஷ்டமம்.

சூலம்

  • இன்று கிழக்கே சூலம்

பரிகாரம்

  • இன்றைய பரிகாரமாக தயிர் பயன்படுத்தலாம்

நாள்

  • சம நோக்கு நாள்

இன்றைய கோயில் விசேஷங்கள்

  • திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோயிலில் காலை சனீஸ்வரர் பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும்.
  • திருச்சேறை ஸ்ரீசாரநாதர் ஆலயத்தில்திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.
  • காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் திருக்கோயிலில் சுவாமி ரத உற்சவத்தில் திருவீதியுலா நடைபெறும்.
  • திருச்சேறை சாரநாதர் கோயிலில் திருக்கல்யாணமும், இரவு யானை வாகனத்தில் ராஜாங்க அலங்காரம் நடைபெறும்.
  • வைத்தீஸ்வரன் கோவில் செல்வ முத்துக் குமாராசுவாமி திருவீதிவுலா நடைபெறும்.

இன்றைய வழிபாடு

  • ஸ்ரீ பெருமாளை உபவாசம் இருந்து வழிபட சுபிட்சம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

மேலும் படிக்க: பிப்ரவரி 8 ஆம் தேதியான இன்று மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிபலன் இதோ..!

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் மற்றும் தமிழ் நாள்காட்டியின் தகவல்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட செய்தியாகும். இதில் உள்ள கருத்துக்கள் மற்றும் தகவல்களுக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பொறுப்பாகாது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்