Tamil Calendar 02.02.2025: ஞாயிறு வழிபாட்டின் நன்மைகள் என்ன?.. இன்று நல்ல நேரம், ராகு காலம் எப்போது?.. விபரம் இதோ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Tamil Calendar 02.02.2025: ஞாயிறு வழிபாட்டின் நன்மைகள் என்ன?.. இன்று நல்ல நேரம், ராகு காலம் எப்போது?.. விபரம் இதோ!

Tamil Calendar 02.02.2025: ஞாயிறு வழிபாட்டின் நன்மைகள் என்ன?.. இன்று நல்ல நேரம், ராகு காலம் எப்போது?.. விபரம் இதோ!

Karthikeyan S HT Tamil
Feb 02, 2025 06:13 AM IST

Tamil Calendar 02.02.2025: தமிழ் நாள்காட்டியின் படி, 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 02 ஆம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை) முக்கிய விஷேசங்கள், பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் உள்ளிட்ட முக்கிய விவரங்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

Tamil Calendar 02 February 2025, check out the details of best pooja time and Tamil Panchangam as per daily calendar
Tamil Calendar 02 February 2025, check out the details of best pooja time and Tamil Panchangam as per daily calendar

அதேபோல், சிவபெருமானை மனதில் நினைத்து வழிபாடுவதால் துன்பங்கள் நீங்கி, தைரியம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது. முருகப்பெருமான வழிபாடு செய்து வந்தால் செல்வ சேர்க்கை உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.  இந்த சிறப்பு வாய்ந்த நாளில் பூஜைக்கு உரிய நல்ல நேரம், இன்றைய விஷேசங்கள், நல்லநேரம், எமகண்டம் குறித்த முக்கிய தகவல்களை தமிழ் நாள்காட்டியின் மூலம் இங்கு அறிவோம்.

இன்றைய பஞ்சாங்கம்

  • தமிழ் ஆண்டு : குரோதி வருடம்
  • தமிழ் மாதம் : தை 20
  • தேதி: 02.02.2025
  • கிழமை - ஞாயிற்றுக்கிழமை

சூரிய உதயம்

  • இன்றைய சூரிய உதயமானது காலை 6:36 மணிக்கு நடைபெறுகிறது

நல்ல நேரம்

  • காலை 07:30 மணி முதல் 08:30 மணி வரை நல்ல நேரம்
  • மதியம் 01:30 மணி முதல் 02:30 மணி நல்ல நேரம்

கௌரி நல்ல நேரம்

  • காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை கெளரி நல்ல நேரம்
  • மதியம் 01:30 மணி முதல் 02:30 மணி வரை கெளரி நல்ல நேரம்

ராகு காலம்

  • காலை 04:30 மணி முதல் 06:0 மணி வரை ராகு காலம்

௭மகண்டம்

பிற்பகல் 12:00 மணி முதல் 01:00 மணி வரை எமகண்டம்

கரணம்

  • கரணம்: 10.30 - 12.00.
  • பிற்பகல்: 12.29 வரை பத்திரை, பின்பு இரவு: 11.21 வரை பவம், பின்பு பாலவம்.

குளிகை

மாலை: 03.00 - 04.30 AM.

(குளிகை காலத்தில் ஒரு காரியம் செய்தால் மீண்டும் அதேபோன்று நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்)

சூரிய அஸ்தமனம்

  • மாலை 6:07 மணிக்கு சூரிய அஸ்தமனம் நடைபெறும்

சந்திராஷ்டம நட்சத்திரம்

சந்திராஷ்டம ராசி

  • இன்றைய நாள் முழுவதும் சிம்மம் ராசிக்கு சந்திராஷ்டமம்.

சூலம்

  • இன்று மேற்கே சூலம்

பரிகாரம்

  • இன்றைய பரிகாரமாக வெல்லம் பயன்படுத்தலாம்

நாள்

மேல் நோக்கு நாள்

இன்றைய கோயில் விசேஷங்கள்

  • தீயத்தூர் ஸ்ரீசகஸ்ர லெட்சுமிஸ்வரர் சமேத பெரிய நாயகி அம்பாள் ஆலயத்தில் காலை ருத்ர ஹோமம் சுவாமி அம்பாளுக்கு அபிஷேக ஆராதனை நடைபெறும்.
  • மிலட்டூர் ஸ்ரீவிநாயகப்பெருமான் ஆலயத்தில் சுவாமி திருவீதியுலா பவனி நடைபெறும்.
  • திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோயிலில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு நடைபெறும்.
  • காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் விழா தொடக்கம்.

இன்றைய வழிபாடு

  • ஸ்ரீ விநாயகப்பெருமானை வழிபட கவலைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

பொறுப்பு துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் மற்றும் தமிழ் நாள்காட்டியின் தகவல்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட செய்தியாகும். இதில் உள்ள கருத்துக்கள் மற்றும் தகவல்களுக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பொறுப்பாகாது.

Whats_app_banner