வரப்போகுது ஐப்பசி மாத சிறப்பு மூன்றாம் பிறை!தரப்போகுது பண மழை! ஐப்பசி பரிகாரம் செய்வது எப்படி?
ஐப்பசி மாதத்தில் வரும் லட்சுமி குபேர அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். தற்போது வரும் வாரத்தில் இருக்கும் மூன்றாம் பிறை நாளில் பரிகாரம் செய்தால் பணப் பிரச்சனை தீர்ந்து வீட்டில் செல்வம் கொழிக்கும் என நம்பப்படுகிறது.
ஐப்பசி மாதத்தில் வரும் லட்சுமி குபேர அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். தற்போது வரும் வாரத்தில் இருக்கும் மூன்றாம் பிறை நாளில் பரிகாரம் செய்தால் பணப் பிரச்சனை தீர்ந்து வீட்டில் செல்வம் கொழிக்கும் என நம்பப்படுகிறது. இந்த சுப நாளில் சிவனையும், சந்திரனையும் ஒன்றாக சேர்ந்து வழிபட வேண்டும். இவ்வாறு வழிபட்டால் பல விதமான பலன்கள் கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் இந்த மூன்றாம் பிறை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஐப்பசி மாதத்தில் வரும் இந்த மூன்றாம் பிறையில் பணப் பிரச்சனைகளை தீர்க்கும் பலன்களை கொடுக்கிறது.
ஏனென்றால் இந்த ஐப்பசி மாதத்தில் வந்த அமாவாசை லட்சுமி குபேர அமாவாசையாகும். இதன்பின் வருகின்ற மூன்றாம் பிறை மேன்மைகளை கொடுக்கும் மூன்றாம் பிறையாக உள்ளது. இந்த நாளில் செய்ய வேண்டிய பரிகார பூஜையின் செயல்முறைகளைக் காண்போம்.
பரிகார பூஜை
பரிகார பூஜையை மாலை 5 மணிக்கு மேல் 6:30 மணிக்குள் செய்தாக வேண்டும். இந்த நேரத்தில் மூன்றாம் பிறையை தெளிவாக தரிசிக்க முடியும். ஒருவேளை இந்த நேரத்தில் பரிகாரம் செய்ய இயலாதவர்கள் நள்ளிரவு 12 மணி வரை செய்யலாம். பரிகாரம் செய்ய 2 ரூபாய் நாணயமும், ஒரு கிராம்பு துண்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். கிராம்பு மகாலட்சுமிக்கு உரிய மூலிகை பொருளாகும். இதனை வைத்து பூஜித்தால் அந்த மகாலட்சுமியின் அருள் நேரடியாக நமது வீட்டில் இறங்கும் என்பது ஐதீகம்.
இவை இரண்டையும் எடுத்து மேற்கு திசை பார்த்து அமர வேண்டும். வெறும் தரையில் உட்காரமல் ஏதேனும் விரித்து உட்கார வேண்டும். பின்னர் வலது கையில் இரண்டு ரூபாய் நாணயத்தையும், ஒரு கிராம்பையும் வைத்து மூடிக்கொள்ள வேண்டும். இந்த கையை நம்முடைய மடியில் வைத்துக் கொண்டு சந்திர பகவான் மற்றும் சிவபெருமானை மனதார வழிபாடு செய்ய வேண்டும்.
இப்படி செய்த பிறகு“ஓம் நிசாகராய வித்மஹே கலா நாதாய தீமஹி தந்நோ சந்திர ப்ரசோதயாத்” என்னும் சந்திர பகவானின் மூல மந்திரத்தை கூற வேண்டும். இந்த மந்திரத்தை தொடர்ந்து 20 முதல் 30 நிமிடங்கள் கூற வேண்டும். மந்திரத்தை கூறி முடித்த பிறகு பணம் ரீதியான பிரச்சினைகள் அனைத்தும் தீர வேண்டும், கடன் பிரச்சினைகள் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வெள்ளை நிற தாளில் இந்த இரண்டு ரூபாய் நாணயத்தையும் கிராம்பையும் வைத்து மடித்து எந்த இடத்தில் பணம் இருக்கிறதோ அந்த இடத்தில் வைத்து விட வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம் சந்திர பகவான், சிவபெருமான் மற்றும் மகாலட்சுமி இவர்கள் மூவரின் அருளால் பணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீரும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்