துலாம் ராசியில் ஏறி அடித்த சூரிய பகவான்.. நீச பங்க ராஜயோகத்தால் பணப்பெட்டியைத் தூக்கி ஆடும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  துலாம் ராசியில் ஏறி அடித்த சூரிய பகவான்.. நீச பங்க ராஜயோகத்தால் பணப்பெட்டியைத் தூக்கி ஆடும் ராசிகள்

துலாம் ராசியில் ஏறி அடித்த சூரிய பகவான்.. நீச பங்க ராஜயோகத்தால் பணப்பெட்டியைத் தூக்கி ஆடும் ராசிகள்

Marimuthu M HT Tamil Published Oct 18, 2024 10:29 PM IST
Marimuthu M HT Tamil
Published Oct 18, 2024 10:29 PM IST

துலாம் ராசியில் ஏறி அடித்த சூரிய பகவான்.. நீச பங்க ராஜயோகத்தால் பணப்பெட்டியைத் தூக்கி ஆடும் ராசிகள் குறித்துக் காண்போம்.

துலாம் ராசியில் ஏறி அடித்த சூரிய பகவான்.. நீச பங்க ராஜயோகத்தால் பணப்பெட்டியைத் தூக்கி ஆடும் ராசிகள்
துலாம் ராசியில் ஏறி அடித்த சூரிய பகவான்.. நீச பங்க ராஜயோகத்தால் பணப்பெட்டியைத் தூக்கி ஆடும் ராசிகள்

இது போன்ற போட்டோக்கள்

ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகத்தின் சுழற்சியின்போது கிரகங்கள் உச்ச மற்றும் நீச்ச ராசிக்குள் செல்கின்றன. அதன்படி, ஒரு கிரகம் உச்ச ராசியில் முழு சக்தியுடன் இருப்பதாகவும், தோஷ ராசியில் சக்தி குறைந்தும் காணப்படுகின்றது.

கிரகங்களின் அரசனான சூரிய பகவான் அக்டோபர் 17ல் துலாம் ராசியில் சஞ்சரித்தார். துலாம் ராசி என்பது சூரிய பகவான் சஞ்சரிப்பதற்கு நேர் எதிரான பண்புகளைக் கொண்டிருக்கும் ராசியாகும். இதனால் துலாம் ராசியில் நீசபங்க ராஜயோகம் உண்டாகியிருக்கிறது. துலாம் ராசியில் உண்டாகியிருக்கும் நீச பங்க ராஜயோகத்தால் சில ராசியினர் நல்வாய்ப்புகளையும் பல நன்மைகளையும் பெறுகின்றனர்.

சூரிய பகவான் துலாம் ராசியில் உருவாக்கிய நீச பங்க ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.

நீசபங்க ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

துலாம்:

துலாம் ராசியினருக்கு சூரிய பகவான் செல்வதால் உண்டாகும் நீச பங்க ராஜயோகத்தால் நன்மைகள் பல கிடைக்கிறது. இந்த காலத்தில் துலாம் ராசியினரின் செயல்திறன் கூடும். தொழில் முனைவோர்களாக இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உண்டாகும். செல்வம் கூடுவதால், சேமிப்பும் கூடும்.

கல்யாணமானவர்களுக்கு மன அமைதியைத் தரும் வகையிலான வாழ்வு அமையும். வெகுநாட்களாக தொழில் செய்பவர்களுக்கு கூடுதலான பண வரவு உண்டு. பொது இடங்களில் உங்கள் பேச்சுக்கு மரியாதை அதிகரிக்கும்.

மேஷம்: துலாம் ராசியினருக்கு சூரிய பகவான் செல்வதால் உண்டாகும் நீச பங்க ராஜயோகத்தால் நல்வாய்ப்புகள் மேஷ ராசியினருக்குக் கிடைக்கிறது. நீச பங்க ராஜயோகத்தால் எதிரிகளால் கெட்ட பெயரைச் சம்பாதித்த மேஷ ராசியினருக்கு, நல்ல பெயர் கிடைக்கப்போகிறது. தொழில் முனைவோருக்கு வெகுநாட்களாக கிடைக்காமல் இருந்த ஆர்டர்கள் மலைபோல் குவியும். சொத்துகள் இல்லாமல் இருக்கும் மேஷ ராசியினருக்கு வாகனம் மற்றும் நிலம் வாங்கும் வாய்ப்பு அமையும்.

கன்னி:

துலாம் ராசியினருக்கு சூரிய பகவான் செல்வதால் உண்டாகும் நீச பங்க ராஜயோகத்தால் கன்னி ராசியினருக்கு அதிர்ஷ்டம் கிடைப்பது உறுதி. இந்தக் காலத்தில் நல்ல கர்ம வினைகளால், நல்ல பலன்களை கன்னி ராசியினர் பெறுவது உறுதி. வெகுநாட்களாக உங்களிடம் பணத்தை வாங்கி ஏமாற்ற நினைத்தவர்கள், இந்தக் காலத்தில் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். பணியிடத்தில் இருக்கும் அரசியல் குறையும். அங்கீகாரம் ஊக்கத்தொகையாக கிடைக்கும். குடும்பத்தில் இருந்தவர்களுக்கு நகை வாங்கி பொருள் சேர்ப்பீர்கள்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்