Surutapalli: திருமண வரம் உடனே கிடைக்கும் - வரம் தரும் போகத் தட்சணாமூர்த்தி..!
சுருட்டப்பள்ளி போக தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் உடனே திருமண பாக்கியம் கிட்டும் எனக் கூறப்படுகிறது.
தட்சிணாமூர்த்திக்குச் சிறப்பு மிக்க பல கோயில்கள் உள்ளன. ஆனால் மிகவும் சிறப்பு மிக்க கோயிலாக ஆந்திரப் பிரதேசம் மாநிலம் சுருட்டப்பள்ளி என்ற இடத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோயில் விளங்கி வருகிறது. இந்த கோயில் பள்ளிகொண்டேஸ்வரர் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது.
அமிர்தம் கடையும்போது ஆலகால விஷத்தைச் சிவபெருமான் குடித்தார். அப்போது அந்த விஷயத்தின் வீரியத்தால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அம்பாளின் மடியில் தலை வைத்தவாறு காட்சியளித்துள்ளார். இந்தக் கோயிலில் குருபகவானின் அம்சமாக வீற்றிருக்கும் தட்சணாமூர்த்தி அம்பிகையை அணைத்தவாறு காட்சி கொடுக்கிறார்.
இவரை போகதட்சணாமூர்த்தி மற்றும் தாம்பத்திய தட்சிணாமூர்த்தி என அனைவரும் அழைக்கின்றனர். வலது காலை தொங்க விட்டு, இடது காலை குத்திட்ட நிலையில் இவர் காட்சியளிக்கிறார். கரங்களில் மான் மற்றும் மழுதாங்கிய நிலையில் எழில் மிக்க கோலமாகக் காட்சியளிக்கிறார்.
சக்தி தட்சணாமூர்த்தி என அழைக்கப்படும் இவரிடம் திருமணம் குறித்து வேண்டி வழிபாடு செய்தால் உடனே நடக்கும் எனக் கூறப்படுகிறது. திருமண பாக்கியம் வேண்டி கோயில்களுக்கு வழிபாடு செய்ய விரும்புவோர் இந்த சுருட்டப்பள்ளி போக தட்சிணாமூர்த்தி கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தால் உடனே நடக்கும் எனப் பக்தர்கள் கூறுகின்றனர்.