மதுரை முக்தீஸ்வரர் கோயிலில் சூரிய கதிர் விழும் நிகழ்வு - ஏராளமானோர் தரிசனம்
மதுரை தெப்பக்குளத்தில் அமைந்துள்ள முக்தீஸ்வரர் கோயிலில் சூரியக்கதிர் நேரடியாக கருவறைக்கு விழுந்து இறைவனை பூஜிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு இன்று அதிகாலையிலேயே வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்திரனின் வாகனமான வெள்ளை யானை (ஐராவதம்) சாபவிமோசனம் பெற்ற ஸ்தலமாக மதுரை அருள்மிகு முக்தீஸ்வரர் கோயில். மதுரையிலுள்ள பஞ்சபத ஸ்தலங்களில் வாயு தத்துவ ஸ்தலமாகவும் இந்த கோயில் விளங்குகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த கோயிலில் சூரியனுடைய கதிர்கள் இறைவனை பூஜிக்கும் சிறப்பு ஆண்டுக்கு இரண்டு முறை நிகழ்கிறது. இந்திரனுக்கு சுவாமி சாபவிமோஷனம் கொடுத்ததால் தஷ்யாயனம் சொல்லக்கூடிய சூரிய ஒளி, வடபுறமாக இருந்து பாதங்களில் பட்டு மேல் எழுந்து, தெற்கு நோக்கி நகரும் உத்தராயணம் நிகழ்வு இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 12 நாள்களும், செப்டம்பர் மாதம் 12 நாள்களும் என மொத்தம் 24 நாள்கள்
சூரிய ஒளி இறைவன் மீது பிரகாசிக்கிறது. இந்த நிகவு நிகழும் நாள்களில் இருபது நிமிடம் வரை சூரிய ஒளியானது இறைவன் மீது பட்டு பிராகாசமடைகிறது.
சூரிய பகவானே நேரடியாக சிவனின் மீது தன் ஒளிக்கதிர்களை வீசி பூஜிப்பதால், இங்கு நவக்கிரகங்களுக்கு என தனி சன்னதி கிடையாது. இது தனிசிறப்பாகவும் இந்த கோயில் இருந்து வருகிறது.
கோயில் மூலவரான முக்தீஸ்வரரை வழிபட்டாலே நவகிரக தோஷங்கள் நீங்கிவிடும் என்பதும் ஐதீகமாக உள்ளது. அந்த வகையில் சிறப்பு பெற்ற முக்தீஸ்வரர் திருக்கோயிலில் சூரிய ஒளி விழும் நாள்கள் சூரிய பூஜை நாட்கள் என்று விசேஷமாகச் சிறப்பிக்கப்பட்டு, அந்த நேரத்தில் சிறப்பு பூஜைகள் நிகழ்த்தப்படுகின்றன.
சூரியக்கதிர் நேரடியாக கருவறைக்கு விழுந்து இறைவனை பூஜிக்கும் நிகழ்வு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. அத்துடன் சூரிய பூஜை நிகழும் அதிசய கோயில்களில் அந்த நாள்களில் வணங்கி வழிபட்டால் மேன்மை அடையலாம் என கருதப்படுவதால், இந்நிகழ்வை காண்பதற்கு அதிகாலை முதலே ஏராளமான கோயிலுக்கு வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரையின் பூர்வகுடிகளாகவும், நீண்ட காலமாக மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலரும் இந்த கோயில் நடைபெறும் சூரிய பூஜை பற்றி நன்கு அறிந்தவர்களாக உள்ளார்கள். எனவே ஆண்டுதோறும் சூரிய ஒளி பூஜிக்கும் இரண்டு மாதங்களிலும் கோயிலுக்கு வருகை புரிந்து சூரிய பூஜையில் பங்கேற்கிறார்கள்.