Sun Transit: கும்ப ராசியில் சனியுடன் இணையும் சூரியன்.. எதிலும் வெற்றி.. அதிர்ஷ்டத்தின் பிடியில் சிக்கி கொள்ளும் ராசிகள்
Sun And Sani in Aquarius: மகர ராசியில் சஞ்சாரித்து வரும் சூரியன் அடுத்து கும்ப ராசியில் இடம்பெயர்கிறார். சூரியன், சனி கும்ப ராசியில் சஞ்சாரிப்பது நல்ல சேர்க்கையாகக் கருதப்படுகிறது. இந்த சஞ்சாரம் காரணமாக நான்கு ராசிக்காரர்களின் வாழ்வில் பல்வேறு மாற்றங்கள் நிகழும் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.

மகர ராசியில் இருந்து வரும் சூரியன் கும்ப ராசியில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். அதேபோல் கும்ப ராசியில் தற்போது சனி சஞ்சாரம் செய்து வருகிறார். இந்த இரண்டு சேர்க்கையும் ஜோதிடத்தில் நன்மை விளைவிக்கும் சேர்க்கையாக கருதப்படுகிறது. பிப்ரவரி 12ஆம் தேதியான பெளர்ணமி நாளில் சூரியனின் ராசி மாற்றம் நிகழ இருக்கிறது. இந்த மாற்றம் காரணமாக 12 ராசிகளிலும் தாக்கம் ஏற்படும். இருப்பினும் சில ராசியினருக்கு எடுத்த காரியங்களில் வெற்றியும், அதிர்ஷ்டமும் கிடைக்கும். சூரியன் மகரத்துக்கு மாறுவதால் எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட மழை கொட்ட இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 17, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : தொட்டதெல்லாம் வெற்றியா உங்களுக்கு.. இன்று மார்ச் 17 கவனமாக காய் நகர்த்த வேண்டியது யார் பாருங்க
Mar 16, 2025 09:00 PMMarch 17 Tomorrow Rasipalan : வாரத்தின் முதல் நாளான மார்ச் 17 க்கான ராசிபலன் என்ன?
Mar 16, 2025 05:05 PMமார்ச் 17ஆம் தேதி துலாம் முதல் மீன ராசி வரை.. ஆறு ராசிகளுக்கான பலன்கள்.. இதைக் கொஞ்சம் படிங்க!
Mar 16, 2025 04:07 PMமார்ச் 17ஆம் தேதி மேஷம் முதல் கன்னி ராசி வரை.. ஆறு ராசிகளுக்கான பலன்கள்.. இதைக் கொஞ்சம் படிங்க!
Mar 16, 2025 02:55 PMமீனத்துக்குச் சென்ற சூரியன்.. பிற்போக்காக திரும்பிய புதன்.. சிக்கிய பணத்தை மீட்டு சிம்மாசனம் போட்டு அமரப்போகும் ராசிகள்
Mar 16, 2025 01:08 PMசூரியன் - புதன் - சுக்கிரன் சேர்க்கை.. படிப்படியாக லாபம் பெறும் மூன்று அதிர்ஷ்டக்கார ராசிகள்
மேஷம்: சூரியன் மகரத்தில் சஞ்சாரிப்பதால் பல இனிமையான மாற்றங்கள் மேஷ ராசியினருக்கு காத்திருக்கின்றன. தொழிலில் லாபம், நிதி ஆதாயம், வணிக வளர்ச்சி மற்றும் அனைத்து முடிவுகளும் உங்களுக்கு சாதகமாக வரும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். சூரியனின் இந்த மாற்றம் உங்களுக்கு பல நல்ல மாற்றங்களைக் கொண்டு வருகிறது.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் நிதிநிலை மற்றும் தொழில் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள். அதே போல் எடுத்த காரியங்களில் அதிர்ஷ்டம் உங்களுடன் துணை இருக்கும். நீண்ட காலத்துக்கு பிறகு எதிர்பார்த்த வெற்றியும், லாபத்தையும் பெறுவீர்கள். கிடைக்கும் வாய்ப்பு நன்கு பயன்படுத்தி ஆதாயம் பெற முயற்சிப்பீர்கள்
மகரம்: மற்றவர்களிடம் தர்க்க ரீதியான மற்றும் விமர்சன ரீதியான அணுகுமுறை மகர ராசிக்காரர்களுக்கு சிக்கல்களை உருவாக்கும். இருப்பினும், உத்திக்கு ஏற்ப சமநிலையை பராமரிக்க வேண்டும். நிர்வாகத்திடமிருந்து பாராட்டு மற்றும் ஆதரவைப் பெறுவீர்கள். இந்த நேரத்தில் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.
கும்பம்: சூரியன் மகர ராசியில் சஞ்சாரிப்பது நன்மை தரும் நேரமாக உள்ளது. இந்த நேரத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு புதியதொரு அடையாளம் கிடைக்கும். வேலை சார்ந்து நல்ல முடிவுகளை எடுக்க முடியும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையும் சமநிலையில் இருக்கும். உங்கள் துணையுடன் எங்காவது வெளியே செல்ல நீங்கள் திட்டமிடலாம். இந்த நேரத்தில் நீங்கள் ஒவ்வொரு கடினமான சூழ்நிலையையும் நன்றாக கையாள்வீர்கள்.
சூரிய பகவான்
நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகிறார். சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகிறார். அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்குகிறார்.
மாதத்துக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவராக இருந்து வரும் சூரியனின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்களில் உச்ச சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்லும்பொழுது தமிழ் மாதம் பிறப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அந்த வகையில் தற்போது மகர ராசியில் பயணம் செய்து வரும் சூரியன் பிப்ரவரியில் சனி பகவானின் சொந்த ராசியான கும்ப ராசிக்கு சொல்கிறார். ஏற்கனவே கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகிறார் அவரோடு சூரிய பகவானும் இணைகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்