Sun and Ketu: சேரக்கூடாத சூரியனும் கேதுவும் இணைவு.. வருகிறது பிரச்னைக்குமேல் பிரச்னை.. உஷாராக இருக்கவேண்டிய ராசிகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sun And Ketu: சேரக்கூடாத சூரியனும் கேதுவும் இணைவு.. வருகிறது பிரச்னைக்குமேல் பிரச்னை.. உஷாராக இருக்கவேண்டிய ராசிகள்

Sun and Ketu: சேரக்கூடாத சூரியனும் கேதுவும் இணைவு.. வருகிறது பிரச்னைக்குமேல் பிரச்னை.. உஷாராக இருக்கவேண்டிய ராசிகள்

Marimuthu M HT Tamil Published Oct 03, 2024 03:10 PM IST
Marimuthu M HT Tamil
Published Oct 03, 2024 03:10 PM IST

Sun and Ketu: சேரக்கூடாத சூரியனும் கேதுவும் இணைவு.. வருகிறது பிரச்னைக்குமேல் பிரச்னை.. உஷாராக இருக்கவேண்டிய ராசிகள் குறித்துக் காண்போம்.

Sun and Ketu: சேரக்கூடாத சூரியனும் கேதுவும் இணைவு.. வருகிறது  பிரச்னைக்குமேல் பிரச்னை.. உஷாராக இருக்கவேண்டிய ராசிகள்
Sun and Ketu: சேரக்கூடாத சூரியனும் கேதுவும் இணைவு.. வருகிறது பிரச்னைக்குமேல் பிரச்னை.. உஷாராக இருக்கவேண்டிய ராசிகள்

இது போன்ற போட்டோக்கள்

அப்படி கடந்த செப்டம்பர் மாதம் 16ஆம் தேதியன்று சூரிய பகவான் கன்னி ராசிக்கு இரவு 7:29 மணிக்கு சஞ்சரிக்கத் தொடங்கினார். இதற்கிடையே இதே கன்னி ராசியில் முன்பே கேது பகவான் இருக்கைப்போட்டு அமர்ந்து இருக்கிறார். இதனால் கன்னி ராசியில் ஒரே நேரத்தில் சுமார் 18 ஆண்டுகளுக்குப் பின், சூரியனும் கேது பகவானும் சஞ்சரிக்கின்றனர். இந்த நிகழ்வு, வரக்கூடிய அக்டோபர் 17ஆம் தேதி வரை நடக்கிறது. அப்படி சூரிய பகவானும் கன்னி ராசியும் அக்டோபர் 17ஆம் தேதி வரை ஒன்றாக சஞ்சரிப்பதால் சில ராசியினருக்கு சாதகமான பலன்களும் சில ராசியினருக்கு கெடு பலன்களும் உண்டாகின்றன. அப்படி சூரிய பகவானும் கேது பகவானும் ஒன்றுசேர்வதால் துன்பத்தைச் சந்திக்கும் ராசிகள் குறித்துக் காண்போம்.

சூரிய பகவானும் கேது பகவானும் ஒன்றுசேர்வதால் துன்பத்தைச் சந்திக்கும் ராசிகள்:

மீனம்:

சூரிய பகவானும் கேது பகவானும் ஒன்றிணைந்து கன்னி ராசியில் சஞ்சரிப்பது மீன ராசியினருக்குக் கெடு பலன்களைத் தருகின்றன. கணவன் மற்றும் மனைவிக்கிடையே பிரச்னைகள் உருவாகி பிரியும் சூழல் உள்ளது. எனவே, மீன ராசியினர் எவ்வளவுக்கு எவ்வளவு சமயோசிதமாக யோசித்து சற்று விலகியிருக்க முடியுமோ, அவ்வளவு விலகியிருப்பது நல்லது. மிகவும் பொறுமை காப்பது நன்மையைத் தரும். இந்த காலத்தில் கூட்டுத்தொழில் வெற்றியைத் தராது. குடும்பத்தில் இருக்கும் நபர்களிடையேயும் சண்டை சச்சரவுகள் உண்டாகலாம். உறவினர்கள் மூலம் தேவையற்ற குழப்பங்கள் உண்டாகலாம். மீன ராசியினர் தேவையற்ற உடல் உபாதைகளைச் சந்திப்பீர். யாருக்கும் கடன் கொடுக்கக் கூடாது. முன் ஜாமீன் கையெழுத்து இடக்கூடாது.

கன்னி:

கன்னி ராசியில் சூரியன் மற்றும் கேதுவின் சேர்க்கை, கன்னி ராசியினருக்கு நிச்சயம் பிரச்னைகளை உண்டுசெய்யும். கன்னி ராசியினர் வாகனத்தில் செல்லும்போது மிகுந்த கவனமுடன் பயணிக்க வேண்டும். கன்னி ராசியினருக்கு பேச்சினால் உறவில் விரிசல் உண்டாக வாய்ப்புள்ளது. எனவே, எச்சரிக்கையுடன் பேசவேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிருங்கள். குழப்பமான சூழ்நிலைகளில் அமைதியாக இருந்துவிடுங்கள். எந்தவொரு தொழிலையும் இந்த காலத்தில் தொடங்கக் கூடாது. செலவுகளைச் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துப் பார்த்து செலவு செய்வது முக்கியம்.

மேஷம்:

கன்னி ராசியில் சூரியன் மற்றும் கேதுவின் சேர்க்கை மேஷ ராசியில் துரதிர்ஷ்டத்தையே தரும். உங்கள் அலுவலக எதிரிகளால் தேவையற்ற தர்மசங்கடத்தைச் சந்திப்பீர்கள். வம்பு, வழக்குகளில் இருந்து சாதகமான முடிவுகள் எதுவும் கிடைக்காது. வயிற்று உபாதைகள், இதயப்பிரச்னைகள் உண்டாகலாம். இந்தக் காலத்தில் யாருக்கும் கடன் கொடுப்பது தவறு.

பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும். ஆன்மிகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!

Whats_app_banner

டாபிக்ஸ்