Sukran Yogam Insights: மேஷம் முதல் மீனம் வரை! காதல் காமத்தில் திளைக்க சுக்கிரன் தரும் யோகங்கள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sukran Yogam Insights: மேஷம் முதல் மீனம் வரை! காதல் காமத்தில் திளைக்க சுக்கிரன் தரும் யோகங்கள்!

Sukran Yogam Insights: மேஷம் முதல் மீனம் வரை! காதல் காமத்தில் திளைக்க சுக்கிரன் தரும் யோகங்கள்!

Kathiravan V HT Tamil
Jan 17, 2025 04:47 PM IST

ஒருவருக்கு திருமணம், தாம்பத்யம், வாழ்கை துணை, பெண்களால் கிடைக்கும் ஆதாயம், வீடு, வசதி வாய்ப்புகள், வாகனங்கள், வாகனம் மற்றும் உணவு சார்ந்த தொழில்கள், கலை, அழகு, ஆடம்பரம் ஆகியவை சுக்கிரனை கொண்டே கணிக்கப்படுகிறது

Sukran Yogam Insights: மேஷம் முதல் மீனம் வரை! காதல் காமத்தில் திளைக்க சுக்கிரன் தரும் யோகங்கள்!
Sukran Yogam Insights: மேஷம் முதல் மீனம் வரை! காதல் காமத்தில் திளைக்க சுக்கிரன் தரும் யோகங்கள்!

இது போன்ற போட்டோக்கள்

மாளவிகா யோகம்

சுக்கிர பகவான் தனித்த நிலையில் மாளவிகா யோகத்தை தருகிறார். லக்ன கேந்திரத்தில் சுக்கிரன் ஆட்சி உச்சம் அடைந்தால் மளவிகா யோகம் உண்டாகிறது. வீடு, தாம்பத்யம், பெண்களால் ஆதாயம், ஆடம்பர வாழ்கை, கேளிக்கைகளில் ஆர்வம் உள்ளிட்டவை இதனால் உண்டாகும். 

மதன கோபால யோகம்!

புதனும், சுக்கிரனும் இணைந்து இருவரில் ஒருவர் ஆட்சியோ அல்லது உச்சமோ அடைந்து, அது லக்ன கேந்திரமாகவோ அல்லது லக்னத்திற்கு சுபர் வீட்டிலோ இருந்தால் மதன கோபால யோகம் உண்டாகும். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தாலே அந்த ஜாதகர் சுகபோகங்களை அனுபவிக்க தகுதி உடையவர்களாக இருப்பார்கள். 

பிருகு மங்கல யோகம்

செவ்வாய் - சுக்கிரன் இணைவு மூலம் பிருகு மங்கல யோகம் உண்டாகும். செவ்வாயோடு சுக்கிரன் சேரும் பட்சத்தில் சுக்கிர பகவானை, செவ்வாய் பகவான் கட்டுப்படுத்துவார். இதனால் நினைத்த காரியத்தை எப்படியாவது நிறைவேற்றிய தீர வேண்டும் என்ற எண்ணம் ஜாதகருக்கு இருக்கும். அதிகாரம், பதவி, அந்தஸ்து, வாழ்கை துணைக்கு பிறகு வசதிகளை அடைந்தல் உள்ளிட்ட பலன்களை இது கொடுக்கும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்