’சுக்கிரன் சுத்து போட்டுவிட்டார்! இந்த 3 ராசிகளுக்கு மஜாதான்!’ பணமழையில் நனைய போகும் ராசிகள்!
மீன ராசியில் சுக்கிர பகவானின் சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தின் பலன் காரணமாக இந்த ராசிக்காரர்களுக்கு பொருளாதாரம் மற்றும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
நவகிரகங்களில் அசுர குரு எனப்படும் சுக்கிர பகவானுக்கு தனி இடம் உண்டு. பொருள் சேர்க்கை, திருமணம், மகிழ்ச்சி, கலை, திறமை, அழகு, காதல், காமம், ஆடைகள், அலங்காரம், ஆபரணங்கள் ஆகியவற்றின் காரகத்துவம் கொண்ட கிரகமாக சுக்கிரன் உள்ளார். ஜோதிடத்தில், கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கிரகங்களின் இயக்கம் மாறுவது அனைத்து ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது.
2025 ஆம் ஆண்டு புத்தாண்டின் முதல் மாதமான ஜனவரியில் சுக்கிர பகவான் மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
மீன ராசியில் சுக்கிர பகவானின் சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தின் பலன் காரணமாக இந்த ராசிக்காரர்களுக்கு பொருளாதாரம் மற்றும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். த்ரிக் பஞ்சாங்கத்தின் படி, சுக்கிர பகவான் வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் தேதி செவ்வாய்க் கிழமை காலை 07:12 மணிக்கு மீன ராசியில் சஞ்சரிக்கிறார்.
1. மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சி மங்களகரமானதாக அமையும். இந்த காலகட்டத்தில், புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். மேலும் பழைய முதலீடுகளில் இருந்து பணவரவு கிடைக்கும். சமூகத்திலும், குடும்பத்திலும் மரியாதை கூடும். நல்ல முதலீட்டு வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும். செல்வாக்கு மிக்கவர்கள் உடன் தொடர்பு உண்டாகும்.
2. ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சி நன்மைகளை தரும். வியாபாரத்தில் உயர்வு இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடும். உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். நீண்டகால கனவுகள் நனவாகும். உத்தியோகத்தில் வருமானம் மற்றும் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உள்ளன.
3. கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தின் தாக்கத்தால் திடீர் பண ஆதாயங்கள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த இருந்த பணம் திரும்ப கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். பணியிடங்களில் இடமாற்றம் உண்டாகும்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.