தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sukran Luck: 4,11 -ம் இடத்தில் உச்சம் அல்லது ஆட்சி..கோடிகளை கொட்டும் சுக்ரன் - புதன் இணைவு.. கால்மேல் கால் போடும் கடகம்!

Sukran Luck: 4,11 -ம் இடத்தில் உச்சம் அல்லது ஆட்சி..கோடிகளை கொட்டும் சுக்ரன் - புதன் இணைவு.. கால்மேல் கால் போடும் கடகம்!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 18, 2024 07:17 PM IST

Sukran Luck: கடகராசிக்காரர்களின் சுயஜாதகத்தில், சுக்ரதிசை இப்போது நடக்கிறது என்றால் அது தனித்த புதனுடைய பார்வையையோ, சேர்க்கையையோ ராசியில் இருந்து 4ம் இடத்திலோ, 11 ம் இடத்திலோ பெற்று ஆட்சி பெற்றால், நீங்கள் ஜாக்பாட் காலத்திற்குள் நுழைய போகிறீர்கள் என்று அர்த்தம். -

Sukran Luck: 4,11 -ம் இடத்தில் உச்சம் அல்லது ஆட்சி..கோடிகளை கொட்டும் சுக்ரன் - புதன் இணைவு.. கால்மேல் கால் போடும் கடகம்!
Sukran Luck: 4,11 -ம் இடத்தில் உச்சம் அல்லது ஆட்சி..கோடிகளை கொட்டும் சுக்ரன் - புதன் இணைவு.. கால்மேல் கால் போடும் கடகம்!

Sukran Luck: கடகராசிக்காரர்கள் சுக்ரனின் உதவியால் எப்படி ஜாக்பாட் யோகத்தை பெறுவார்கள் என்பது குறித்து ஜோதிடர் சுபாஷ் பாலகிருஷ்ணன் பேசி இருக்கிறார். 

ஆட்டிப்படைக்கும் அஷ்டம சனி 

இது குறித்து அவர் பேசும் போது, “ இப்போது கடக ராசிக்காரர்கள் எதிர்கொண்டு கொண்டிருக்கும் பிரச்சினைகள், வேதனைகள் ஆகியவற்றை ஈடுகட்ட முடியுமா என்ற கேள்வி, அந்த ராசிக்காரர்களுக்கு எழுந்திருக்கும். காரணம், அஷ்டம சனியால் அவர்கள் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் இத்தகைய காலம் அந்த மாதிரியானது. 

கடகராசிக்காரர்கள் குரு திசையில் பிறந்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். குரு திசை 4 வருடமும், 19 வருடங்கள் சனி திசையும், புதன் திசை 16 வருடம் என இவை கழிய 39 வருடங்கள் ஆகிவிடும். 39 லிருந்து 40 வயதிற்குள் கேது திசை ஆரம்பம் ஆகி விடும். இது 7 வருடம் நடக்கும். வேறு திசைகளில் பிறந்தால் அதற்கேற்ப வயது வித்தியாசம் மாறும். ஆனால் சராசரியாக 20 வயதில் இருந்து 45 வயதிற்குள் கடகராசிக்காரர்களுக்கு சுக்ரதிசை ஆரம்பித்து விடும். இந்தக்காலகட்டத்தில் மிக முக்கியமான விஷயங்கள் நடக்கும். 

சுற்றி சுழலும் சுக்ரபகவான் 

சுக்ரன் என்பவன் கடகராசிக்கு 4ம் இடமான துலாம் ராசிக்கும்,  11ம் வீடு என்று சொல்லக்கூடிய ரிஷபராசிக்கும் அதிபதியாவார். அதாவது, சுபஸ்தானம் மற்றும் லாபஸ்தானத்திற்கு அதிபதியாவார். அஷ்டம சனியில் வாழ்ந்து கொண்டிருக்கும் கடகராசிக்காரர்களின் சுயஜாதகத்தில், சுக்ரதிசை இப்போது நடக்கிறது என்றால் அது தனித்த புதனுடைய பார்வையையோ, சேர்க்கையையோ ராசியில் இருந்து 4ம் இடத்திலோ, 11 ம் இடத்திலோ பெற்று ஆட்சி பெற்றால், நீங்கள் ஜாக்பாட் காலத்திற்குள் நுழைய போகிறீர்கள் என்று அர்த்தம். 

குறிப்பாக சினிமா, நாடகம், கலை, பத்திரிகை உள்ளிட்டவற்றில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். சுக்கிரன் எதை கொடுப்பார் என்றால், ஆடம்பர வாழ்க்கையை கொடுப்பார்.

இன்னொரு பக்கமாக, சுக்கிரன், கடகராசியில் இருந்து 9 ம் இடம் என்று சொல்லக்கூடிய மீனத்தில் உச்சம் அடைந்து விட்டால், (உத்திராட்டாதி நட்சத்தில்தான் உச்சம் அடைய வேண்டும்) மிகப்பெரிய திருப்பு முனை ஏற்படும். புகழ் வெளிச்சம் கிட்டும். 

மற்றொரு பக்கம், சுபகிரகத்தோடு தொடர்பில் இருந்து, கூடவே  நட்சத்திர சாரம் கொடுத்த சனிபகவான் நீச்சமோ, வக்கிரமோ ஆகி விட்டால், சுக்ர திசையானது மிகப்பெரிய ஜாக்பாட்டிற்குள் கொண்டு செல்லும். சுக்கிரன் உங்களுடைய 7ம் இடமான மகரராசியில் இருந்து, சந்திரனுடைய சாரத்தை வாங்கி விட்டால் பெரிய அளவு லக் அடிக்கும்.” என்று பேசினார். 

பொறுப்பு துறப்பு: 

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன: