சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு ஏப்ரல் 26 முதல் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு ஏப்ரல் 26 முதல் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா..!

சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு ஏப்ரல் 26 முதல் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா..!

Karthikeyan S HT Tamil
Published Apr 22, 2025 11:11 AM IST

சுக்கிர பெயர்ச்சி: சுக்கிரனின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் பல ராசிகளுக்கு பொருளாதார லாபத்தைத் தரும் என்று கூறப்படுகிறது. அந்தவகையில், சுக்கிரன் 4 நாளில் அதாவது (ஏப். 26) அன்று சனியின் உத்திர பாதிராபத நட்சத்திரத்தில் பிரவேசிக்கிறார். இதனால் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் பற்றி பார்ப்போம்.

2025 சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு 4 நாளில் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா..!
2025 சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு 4 நாளில் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா..!

இது போன்ற போட்டோக்கள்

ஜோதிட சாஸ்திரத்தின்படி நவக்கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றக்கூடியவர்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். நவகிரகங்கள் தங்களது இடத்தை மாற்றும்பொழுது அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். நவகிரகங்கள் இருக்கும் இடத்தை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

ஜோதிடத்தில் சுக்கிரன் செல்வத்தையும், செழிப்பையும் அளிப்பவராக கருதப்படுகிறார். இவரது இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் பல ராசிகளுக்கு பொருளாதார லாபத்தைத் தரும் என்று கூறப்படுகிறது. இந்த சுக்கிரன் அவ்வப்போது தனது ராசியை மாற்றக்கூடியவர். இவரது ராசி மாற்றம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த முறை சுக்கிரன் சனியின் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைகிறார். அதாவது இன்னும் 4 நாட்களில் வரும் ஏப்ரல் 26 அன்று சுக்கிரன் சனியின் உத்திர பாதிராபத நட்சத்திரத்தில் பிரவேசிக்கிறார். ஏப்ரல் 26 அதிகாலை 12 மணி முதல் அந்த நட்சத்திரத்தில் நிலை கொள்கிறார். சுக்கிரனின் இந்த பெயர்ச்சி பல ராசிகளுக்கு லாபகரமான யோகங்களை உருவாக்கும். சுக்கிரனின் இந்த பெயர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு பொருளாதார லாபத்தைத் தரும். அது எந்தெந்த ராசிகள் என்று பார்ப்போம்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு நல்ல காலம். இந்த நேரத்தில் வேலை மற்றும் திருமண வாழ்க்கை இரண்டும் நன்றாக இருக்கும். நீண்ட நாட்களாக நீங்கள் ஆடம்பர பொருட்களை வாங்க விரும்பினால், இந்த நேரத்தில் வாங்கலாம். சுக்கிரன் சனியின் நட்சத்திரத்தில் செல்வது இந்த ராசிக்கு அதிக வலிமையை அளிக்கும்.

துலாம்

துலாம் ராசியின் 7வது வீட்டிற்கு சுக்கிரன் செல்ல உள்ளார். இதனால் துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் தொழில் ரீதியாக நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். உங்கள் தொழிலில் ஏதேனும் தடை இருந்தால், இந்த நேரத்தில் நீங்கள் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். நீங்கள் முழு நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். உடல்நலம் குறித்தும் நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஆரோக்கியம் மேம்படும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் மிகவும் சாதகமான யோகங்களை கொண்டு வரும். இந்த நேரத்தில் மகர ராசிக்காரர்களுக்கு வேலை மற்றும் வியாபாரம் இரண்டிலும் லாபம் கிடைக்கும். ஒரு வகையில், உங்களுக்கு ஏற்பட்ட இழப்பு ஈடுசெய்யப்படும். இந்த நேரத்தில் பொருளாதார செழிப்பு உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக பணத்தால் கஷ்டப்பட்டால், இது உங்களுக்கு நல்ல நேரம். குடும்பத்தில் ஏதேனும் சுபகாரியம் அல்லது திருமணம் இருந்தால், இந்த நேரத்தில் அது உறுதியாகும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Karthikeyan S

TwittereMail
சு.கார்த்திகேயன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். வானொலி, டிஜிட்டல் ஊடகங்களில் 13+ ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், பொழுதுபோக்கு, ஆன்மிகம், லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் இளங்கலை தகவல் தொழில்நுட்பம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மின்னணு ஊடகம் மற்றும் தொடர்பியல் துறையில் பட்டம் பெற்றுள்ள இவர், கல்வி வானொலி ஞானவாணி, ஈ நாடு டிஜிட்டல், ஒன் இந்தியா தமிழ், டாப் தமிழ் நியூஸ், டைம்ஸ் நவ் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2022 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner