தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Peyarchi 2024 Uthradam: உறவுகளால் நன்மை, தீவிர முயற்சியால் வெற்றி காண்பீர்கள்! உத்திராடம் குரு பெயர்ச்சி பலன்கள்

Guru Peyarchi 2024 Uthradam: உறவுகளால் நன்மை, தீவிர முயற்சியால் வெற்றி காண்பீர்கள்! உத்திராடம் குரு பெயர்ச்சி பலன்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 07, 2024 11:00 PM IST

உத்திராடம் நட்சத்திரம் தனுசு ராசியில் ஒரு பாதத்திலும், மகரம் ராசியில் மூன்று பாதங்களிலும் இடம்பிடித்துள்ளது. குரு பெயர்ச்சி 2024இல் உத்திராடம் நட்சத்தினர் பெறும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

உத்திராடம் நட்சத்திரம் குரு பெயர்ச்சி பலன்கள்
உத்திராடம் நட்சத்திரம் குரு பெயர்ச்சி பலன்கள்

குரு பெயர்ச்சியால் உத்திராடம் நட்சத்தினர் பெறும் பலன்கள் பொதுபலன்கள்

உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதம் தனுசு ராசியிலும், இரண்டு, மூன்று, நான்கு பாதங்கள் மகரம் ராசியில் பிறந்தவர்களாக இருப்பார்கள். உத்திராடம் நட்சத்தினர் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள்.

இந்த குரு பெயர்ச்சியில் தெய்வ அனுகூலத்தை பெறுவீர்கள். அடிக்கடி சுப காரியங்களில் பங்கேற்பதற்கான சூழல் உள்ளது. எதிர்பாராத பயணங்கள் அமையும். அதிகமாக சமூக செயல்களில் ஈடுபடுவீர்கள்.

கடன் பிரச்னையில் சிக்கி தவிர்ப்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து விடுபடுவீர்கள். நாள்பட்ட நோய் பாதிப்பில் இருப்பவர்கள் உடல்நலத்தை பெறுவார்கள். நெருக்கமானவர்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு.

அரசியலில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். விளையாட்டு துறையில் இருப்பவர்களுக்கு சில தடைகள் ஏற்படலாம். வேலையில் முழு ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும். சிறு சிறு பிரச்னைகள் வரலாம். புதிய வேலைகள் கிடைப்பதில் சின்ன தடைகள் இருக்கும்.

பணம் விஷயத்தில் கவனமாக ருக்க வேண்டும். மற்றவரை நம்பி கொடுத்த பணம் மீண்டும் கிடைக்க தாமதமாகும். சொந்த தொழிலை பொறுத்தவரை பெரிய லாபம் இருக்காது. ஆனால் போதிய வருமானம் உண்டு. தீவிர முயற்சிகள் மேற்கொண்டால் வெற்றியை பெறுவீர்கள். தேடுதல் மூலம் எடுத்து கொண்ட காரியத்தில் ஜெயிப்பீர்கள்.

சகோதரர்கள், நெருக்கமான உறவுகளால் நற்பலன்கள் ஏற்படும். சொத்து விஷயத்தில் நன்மையை பெறுவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு வரவேண்டிய தொகைக்கு வந்து சேறும்.

உத்திராடம் தசாபுத்தி பலன்கள் தனுசு ராசியனருக்கு

செவ்வாய் திசையில் இருப்பவர்களுக்கு (22 வயது வரை) படிப்பு சார்ந்து இருந்து வந்த தொல்லைகள் விலகும். கவனத்தை சிதறவிடாமல் இருந்தால் வெற்றி பெறுவீர்கள்

ராகு திசையில் இருப்பவர்கள் (23 முதல் 40 வயது வரை) வேலை தேடுவோருக்கு வாய்ப்புகள் அமையும். வெளிநாடு வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். தொழில் செய்வதற்கு உகந்த காலகட்டமாக உள்ளது. கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். முடிந்த அளவில் பெரிய கடன்களை வாங்காமல் தவிர்ப்பது நல்லது. ராகு திசை நன்றாக இருந்தால் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்பம் மேன்மை அடையும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு வரன்கள் அமையும். சிலருக்கு தடை, தாமதங்களும் ஏற்படும்.

வேலை வாய்ப்புகளில் பிரச்னை இருக்காது. சம்பள உயர்வு, பதவி உயர்வு சில தடைகள், தாமதத்துக்கு பிறகு கிடைக்கும்.

குரு திசையில் இருப்பவர்களுக்கு (56 வயது வரை) நல்ல மாற்றங்கள் ஏற்படும். நன்மைகள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வாகன சேர்க்கை உண்டு. வீட்டில் புதுப்பிப்புகளை செய்வீர்கள். சொத்துகளில் ஏதேனும் வில்லங்கள் ஏற்படலாம் என்பதால் தவிர்ப்பது நல்லது.

சனி திசையில் இருப்பவர்கள் (76 வயது வரை) தொழில் சார்ந்த முன்னேற்றத்தை பெறுவீர்கள். மன உளைச்சல் ஏற்படும். உடல் சார்ந்த பாதிப்புகள் வரும். உணவு பழக்க வழக்கத்தில் கவனம் தேவை. பொருளாதார தட்டுப்பாடு ஏற்படாது.

புதன் திசையில் இருப்பவர்களுக்கு (92 வயது வரை) பூர்விக சொத்தில் இருந்து வந்த பிரச்னை தீரும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். கடன் பிரச்னைகள் தீரும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்