தமிழ் செய்திகள்  /  Astrology  /  Successful Day For Aries, Libra And Cancer! Today's Horoscope Result

Today Rasi Palan (28.05.2023) : மேஷம், துலாம், கடக ராசிக்காரர்களுக்கு வெற்றிகரமான நாள்! இன்றைய ராசி பலன்

Priyadarshini R HT Tamil
May 28, 2023 06:50 AM IST

இன்று சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில் நாள் முழுவதும் சந்திரனின் சஞ்சாரம் நடக்கிறது. இதனால் மேஷம், துலாம், கடக ராசிக்காரர்களுக்கு இன்று மிகவும் வெற்றிகரமானதாகவும், மகிழ்ச்சிகரமான நாளாகவும் அமையும். இந்த ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மேம்படும் மகரத்திற்கு நாள் முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

ரிஷபம் - வெளிநாடு மற்றும் வெளியூர் செல்வதற்காக உத்தரவுகள் மற்றும் விசா போன்றவற்றிற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிட்டும். தகவல் தொழில்நுட்பத் துறை, பத்திரிக்கை துறை, பத்திரப்பதிவு கணக்குத் துறை மற்றும் அரசு துறை நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு இன்று சிறப்பான நாள். புதிய வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை தொடர்பான தகவல்கள் தாமதமாகும். நாளை நல்ல தகவல்கள் வந்து சேரும்.

மிதுனம் – நல்ல நாள். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும். அவர்களின் கல்வி முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் தாமதமாக வாய்ப்புண்டு. வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி கிடைக்கும். இறையருளால் இன்றைய நாள் சிறப்பாக முன்னேற்றிச் செல்லும்.

கடகம் – மிகச் சிறந்த நாள். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வரும். தொழிலை வெற்றிகரமாக முன்னேற்றி செல்வீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். முருகப் பெருமான் வழிபாடு மேலும் வெற்றியை குவிக்கும். வாகன சொத்து சம்பந்தப்பட்ட வகையில் ஆதாயம் உண்டு. உணவு தொழில், சுற்றுலா துறை, சேவைத் தொழில் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு இன்றைய நாள் வெற்றிகரமாக இருக்கும்.

சிம்மம் - சுபமான நாள். மாணவர்களுக்கு சிறப்பாக இருக்கும். கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் நன்றாக விருப்பத்துடன் படிப்பர். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்குச் நல்ல செய்திகள் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் ஏற்றம் மிகுந்த நாளாக இன்றைய நாள் அமையும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் ஒற்றுமை ஏற்படும். தனவரவு உண்டு. அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சற்று கால தாமதம் ஆகலாம்.

கன்னி - வாகன வகையில் ஆதாயம் உண்டு. பங்குவர்த்தகத்தில் வங்கித் துறை சேவைத் துறை தங்கம் மற்றும் இரும்பு காப்பர் போன்றவற்றின் விலை உயர்வதற்கு வாய்ப்பு உண்டு. கட்டுமான தொழில் துறையில் உள்ளவர்களுக்கு ஏற்றம் மிகுந்த காலம். வாகன தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும்.

கன்னி - நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். தொழில்ரீதியாக நல்ல செய்திகள் வந்து சேரும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மன மகிழ்ச்சி இருக்கும். பிரயாணங்கள், வீண் அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே தவிர்க்க முயற்சிக்கலாம். மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் தேவை. 

விருச்சிகம் – கணவன் - மனைவி உறவு சிறப்பாக இருக்கும். காதல் வயப்பட்டு இருப்பவர்களுக்கு இனிமையான நிகழ்வுகள் நடைபெறும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வரும். புது தொழில் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள். வழக்கு போன்றவற்றில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. சொந்த தொழில் செய்துகொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை காண்பார்கள்.

தனுசு - குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். புதிய வேலைவாய்ப்புகளைத் தேடுபவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். தொழிலில் உள்ள ரகசியங்கள் கைவரப் பெறுவீர்கள். வயதானவர்களுக்கு உடல்நலம் சீராக இருக்கும்.

மகரம் - நீண்ட நாளாக தடைப்பட்டிருந்த வேலைகள் நிறைவேறும். பேச்சுவார்த்தை மூலம் எந்த ஒரு விஷயத்திலும் நல்ல தீர்வு காண்பீர்கள். தேவைப்படும் ஒருவருக்கு உதவுவது உங்களுக்கு ஆன்மீக மகிழ்ச்சியைத் தரும். ஒரு சிறிய விஷயத்திற்காக ஒருவருடன் தகராறு ஏற்படலாம். பிற்பகலில் சில விரும்பத்தகாத செய்திகளைப் பெறலாம், இதன் காரணமாக உங்கள் வேலை தடைப்படலாம். மேலும் வியாபாரத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும்.

கும்பம் – கணவன் - மனைவி உறவு அன்னியோன்னியமாக இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் சுமூகமான முடிவுகளை எட்டுவதில் தாமதம் ஏற்படும். வாகனம், தகவல் தொழில்நுட்பம், மீடியா துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள மூத்த ஒருவருடன் ஒற்றுமை நன்றாக செல்லும். சுபகாரியங்களை பற்றிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். வேலைவாய்ப்பை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் தாமதமாகும். ஆஞ்சநேயர் வழிபாடு வெற்றியை கொடுக்கும்.

மீனம் - இன்று குடும்ப வேலையில் அதிக நேரத்தை செலவிடுவார்கள். சில ஆக்கப்பூர்வமான வேலைகளிலும் ஆர்வம் காட்டுவீர்கள். பரஸ்பர புரிதலுடன் பண விநியோகம் தொடர்பான விஷயங்களுக்கு எளிதில் தீர்வு காண்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் ஆன்மிக வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வது மன அமைதியைத் தரும். சில சிறிய விஷயங்களில் உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் கோபத்தையும் பிடிவாதத்தையும் கட்டுப்படுத்துங்கள்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்