தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Peyarchi 2024 Moolam: புகழ், செல்வாக்கு, வெற்றியை பெறுவீர்கள்! மூலம் நட்சத்தினருக்கான குரு பெயர்ச்சி பலன்கள்

Guru Peyarchi 2024 Moolam: புகழ், செல்வாக்கு, வெற்றியை பெறுவீர்கள்! மூலம் நட்சத்தினருக்கான குரு பெயர்ச்சி பலன்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 02, 2024 09:00 PM IST

மூலம் நட்சத்திரம் நான்கு பாதங்களும் தனுசு ராசியில் அமைந்துள்ளது. கேது பகவான் ஆதிக்கம் கொண்டவராக மூலம் நட்சத்தினர் இருப்பார்கள். எதிர்வரும் குரு பெயர்ச்சியால் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெறப்போகும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

குரு பெயர்ச்சி 2024 மூலம் நட்சத்திரம்
குரு பெயர்ச்சி 2024 மூலம் நட்சத்திரம்

மூலம் நட்சத்தினர் கேது பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாக இருப்பீர்கள். கேது பகவான் கோச்சாரத்தில் கன்னி ராசியில் ஆதிக்கம் செய்கிறார்.

நீண்ட காலமாக நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த வெற்றி இந்த குரு பெயர்ச்சியில் கிடைக்கும். வருமானம் போதிய அளவில் இருக்கும். எனவே பொருளாதார நிலையும் சீராக இருக்கும்.

நகை, பொருள் சேர்க்கைக்கான வாய்ப்பு உள்ளது.வேலை தேடுவோருக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். பணியிடத்தில் உரிய அங்கீகாரத்தை பெறுவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு.

கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புகழ், செல்வாக்கை குரு பகவான் வழங்குவார். தொழில் தொடங்க விரும்புவோருக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். எண்ணங்களும், செயல்களும் தெளிவாக இருக்க வேண்டும்.

எதிர்பாராத பயணங்கள் அமையலாம். பூர்வீக சொத்துகள் மூலம் லாபம் அடைவீர்கள். உடன் பிறந்தவர்களால் நன்மை உண்டு. படிப்பில் கவனம் செலுத்த தவறினால் பாதிப்பை சந்திக்க நேரிடலாம்.

அரசியல், கலைத்துறையில் இருப்பவர்களுக்கு ஏற்றம் முன்னேற்றம் உண்டு. பெரிய அளவில் முதலீடுகளை திட்டமிட்டு செய்யுங்கள்.

தசாபுத்தி பலன்கள்

சுக்கிர திசையில் இருப்பவர்கள் (25 வயது வரை) படிப்பில் நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். பணியிடங்களில் நெருக்கடிகள் வந்து போகும். பெண்களுக்கு மன அழுத்தங்கள் ஏற்படலாம்.

சூரிய திசையில் இருப்பவர்களுக்கு (35 வயது வரை) வெற்றி வாய்ப்புகள் அமையும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு வரன் அமையும். அதிகபடியான நன்மைகளை பெறுவீர்கள். திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் அடையும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் தேவை.

சந்திர திசையில் இருப்பவர்கள் (41 வயது வரை) கடன் பிரச்னைகள் ஏற்படலாம். சொத்து தொடர்பான சில தடை, பிரச்னைகள் ஏற்படலாம். பணவரவு எதிர்பார்த்த அளவில் இருக்காது. பெண்களுக்கு அதிகப்படியான வேலைப்பளு ஏற்படும்.

செவ்வாய் திசையில் இருப்பவர்கள் (48 வயது வரை) குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. செலவுகள் இருக்கும். தொழில் சார்ந்த முன்னேற்றமும் உண்டு

ராகு திசையில் இருப்பவர்கள் (66 வயது வரை) சுப செலவுகள் ஏற்படும். கல்வி, குடும்பம் சார்ந்து செலவழிப்பீர்கள். கணவன் மனைவி இடையே அந்நோன்யம் அதிகரிக்கும். தொழிலில் வளர்ச்சியை பெறுவீர்கள்.

குரு திசையில் இருப்பவர்கள் (82 வயது வரை) நன்மையை பெறுவீர்கள். எதிரிகள் விலகுவார்கள். உடல் உபாதைகள் சீராகும். மருத்துவ செலவுகள் குறையும். வேலையில் இருந்து வந்த நெருக்கடிகள் விலகும். பிள்ளைகளுக்கு வேண்டிய உதவிகளை செய்வீர்கள். நல்ல மாற்றங்களையும், பொருளாதார வளர்ச்சியையும் பெறுவீர்கள்.

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்