Sthra Mahalakshmi Yogm: மேஷம் முதல் மீனம் வரை! பணம் கொட்டும் ஸ்திர மகாலட்சுமி யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம்!
Sthra Mahalakshmi Yogam: ’ஸ்திர லட்சுமி யோகம்’ என்பதற்கு நீண்ட கால நிலைத்த லட்சுமி யோகம் என்று பொருள் ஆகும். நிலைத்த புகழ், நிலைத்த செல்வம், நீடித்த தொழில் வலு, நீடித்த ஆயுள் ஆகிய சுபிட்சங்களை தரக்கூடிய யோகமாக இந்த யோகம் உள்ளது.
ஜோதிடத்தில் யோகம் என்ற சொல்லு சேர்க்கை என்று பொருள்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்களின் நகர்வு, பார்வை, ஆட்சி, உச்சம், நீசம் உள்ளிட்டவைகளை வைத்து பல்வேறு யோகங்கள் ஏற்படுகின்றன. ராஜயோகம், விபரீத ராஜயோகம், கஜகேசரி யோகம், பாக்கிய யோகம், ஜோதி யோகம் உள்ளிட்ட பல்வேறு யோகங்கள் உள்ளன.
ஸ்திர லட்சுமி யோகம் என்றால் என்ன?
’ஸ்திர லட்சுமி யோகம்’ என்பதற்கு நீண்ட கால நிலைத்த லட்சுமி யோகம் என்று பொருள் ஆகும். நிலைத்த புகழ், நிலைத்த செல்வம், நிலைத்த நல்ல குடும்பம், நிலைத்த செல்வாக்கு, நிலைத்த நன்மதிப்பு, நிலைத்த கல்வி, நீடித்த உழைப்பு, நீடித்த தொழில் வலு, நீடித்த ஆயுள் ஆகிய சுபிட்சங்களை தரக்கூடிய யோகமாக இந்த யோகம் உள்ளது.
ஸ்திர லட்சுமி யோகம் எப்படி உண்டாகின்றது
ஜோதிடத்தில் லட்சுமி ஸ்தானங்களில் 9ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கு முக்கியத்துவம் உள்ளது. எந்த ஒரு லக்னத்திற்கும் 9ஆம் அதிபதியும், லக்னாதிபதியும் ஆட்சி, உச்சம் பெற்ற நிலையில் இருந்தால் நிலைத்த லட்சுமி யோகம் உண்டாகும். இது முதல் நிலை ஸ்திர லட்சுமி யோகம் என அழைக்கப்படுகின்றது.
9ஆம் அதிபதியோ அல்லது லக்னாதிபதியோ யாராவது ஒருவர் ஆட்சி அல்லது, உச்சம் அடைந்துவிட்ட நிலையில், மற்றொருவர் அவருக்கு கேந்திரத்திலோ, லக்னாதிபதி உடன் இணைந்த நிலையிலோ, அல்லது லக்னத்தில் ஸ்திர வீடுகளில் வர்கோத்தமத்தில் இருந்தாலும் இந்த ஸ்திர லட்சுமி யோகம் உண்டாகிறது என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
உதாரணமாக, சிம்ம லக்னத்தில் லக்னாதிபதியாக சூரியன் உள்ளார். இவர் ஆட்சி, உச்சம் பெற்று உள்ளார் எனில், 9ஆம் அதிபதியான செவ்வாய் ஆட்சியும், உச்சமும் பெற்று இருந்தால் ஸ்திர லட்சுமி யோகம் உண்டாகின்றது.
சிம்மம் ராசியில் சூரியன் ஆட்சி மற்றும் மூலத் திரிகோணத்தில் அமர்ந்து இருக்க, செவ்வாய் பகவான் விருச்சிகம், மகரம், மேஷம் ராசியில் ஆட்சி பெற்று இருந்தால் ஸ்திர லட்சுமி யோகம் உண்டாகின்றது.
லக்னாதிபதி சூரியன் மட்டும் ஆட்சியாக உள்ளார். ஆனால் 9ஆம் அதிபதி செவ்வாய் ஆட்சியாக இல்லை. அதே நேரத்தில் ரிஷபம் ராசியில் திக்பலம் பெற்று வர்கோத்தமம் பெற்றால் இயல்பாகவே இந்த ஸ்திர லட்சுமி யோகம் உண்டாகும்.
செவ்வாய் பகவான் மேஷம் ராசியில் உச்சம் பெற்று இருந்தாலும், சூரியன் லக்னத்திற்கு 10ஆம் வீட்டில் திக்பலம் பெற்று வர்கோத்தமம் ஆனாலும் ஸ்திர லட்சுமி யோகம் உண்டாகின்றது.
உங்கள் பாக்கியாதிபதி வலுப்பெற்ற நிலையில் சுக்கிரன் உடன் இணைந்த நிலையில் இருந்தாலும் ஸ்திர லட்சுமி யோகம் உண்டாகும்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:-
Google News: https://bit.ly/3onGqm9