தமிழ் செய்திகள்  /  Astrology  /  Sri Bala Ramar Winking And Smiling Photo Going Viral Read More Details

Ayodhya Ramar statue: ‘கண்களை சிமிட்டி புன்னகைக்கும் ஸ்ரீ பால ராமர்’-சிலிர்ப்பை ஏற்படுத்தும் போட்டோ!

Manigandan K T HT Tamil
Jan 23, 2024 01:01 PM IST

Sri Ram: தற்போது ராம்லல்லாவின் பிரமாண்ட சிலையின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

அயோத்தி பால ராமர்
அயோத்தி பால ராமர் (ht)

ட்ரெண்டிங் செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட 6 முக்கியத் தலைவர்கள் முழு சடங்கில் கலந்து கொண்டனர். முன்னதாக, ஹெலிகாப்டரில் இருந்து விழாவில் பங்கேற்ற விருந்தினர்கள் மீது மலர் தூவினர். கையில் வெள்ளிக் குடை, சிவப்பு வஸ்திரத்துடன் பிரதமர் மோடி மதியம் 12.05 மணிக்கு கோயிலை அடைந்தார். பின்னர் தாமரை மலர் வைத்து வழிபட்டனர். இறுதியாக பிரதமர் ராம் லல்லாவை (பால ராமர்) சாஷ்டாங்கமாக வணங்கினார்.

இந்த நிலையில் தற்போது ராம்லல்லாவின் பிரமாண்ட சிலையின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இவற்றில் ஒன்று ஸ்ரீ ராம் லல்லா கண்களை சமிட்டு புன்னகை சிந்துவது போன்ற ஒரு போட்டோ உலா வருகிறது. இது AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கிய படம் என தெரியவந்துள்ளது.

இருப்பினும், சமூக வலைதளத்தில் தங்களை இந்த வீடியோ மெய்சிலிர்க்க வைத்ததாக கருத்து தெரிவித்து இதை வைராக்கி வருகின்றனர்.

இதனிடையே, அயோத்தியில் உள்ள ராமர் கோயில் இன்று பொதுமக்களுக்காக திறக்கப்பட்டதையடுத்து, அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து, அயோத்தி காவல்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் சமீபத்திய முடிவு காரணமாக, அயோத்தி ராமர் கோயில் நுழைவு தற்காலிகமாக மூடப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் முன்னணி அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் முன்னிலையில் ஜனவரி 22-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாண்ட ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டா விழாவிற்குப் பிறகு, அயோத்தி ராமர் கோயில் பொதுமக்களின் தரிசனத்திற்காக இன்று திறக்கப்பட்டது.

அயோத்தி ராமர் கோயில் நுழைவு மூடப்பட்டது ஏன்?

ஏற்கனவே கூறியது போல், அயோத்தி ராமர் கோயில் நுழைவு தற்காலிகமாக மூடப்பட்டது, ஏனெனில் பக்தர்கள் கூட்டம் அதிக எண்ணிக்கையில் வரிசையில் காத்திருந்தது. மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, நிர்வாகமும், போலீசாரும் தற்காலிகமாக நுழைவாயிலை மூடிவிட்டு, கோயிலுக்குச் செல்லும் சாலைகளில் தடுப்புகளை போடப்பட்டுள்ளனர். நெடுஞ்சாலைகளில் தடுப்புகள் போடப்பட்டு, அவ்வழியாக வரும் வாகனங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

பால ராமரின் கையில் தங்க வில்லும் அம்பும் உள்ளன. நெற்றியில் தங்கத் திலகத்தால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ராம் லல்லா மஞ்சள் நிற வேட்டி அணிந்திருந்தார், அதன் நிறம் பூக்களின் மஞ்சள் மற்றும் பளபளப்பான நகைகளின் மஞ்சள் கலந்தது. சிலை அலங்கரிக்கப்பட்ட கம்பீரமான நகைகளுக்கு மத்தியில் கூட மலர் அலங்காரம் தனித்து நின்றது.

ராமர் கோயில் என்று அழைக்கப்படும் ராம் ஜென்மபூமி மந்திர் பாரம்பரிய நாகரா பாணியில் கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் (கிழக்கு-மேற்கு) 380 அடி; அகலம் 250 அடி, உயரம் 161 அடி. இது மொத்தம் 392 தூண்களால் ஆதரிக்கப்படுகிறது மற்றும் 44 கதவுகளைக் கொண்டுள்ளது.

கோயிலின் தூண்கள் மற்றும் சுவர்கள் இந்து தெய்வங்கள், கடவுள்கள் மற்றும் தேவியர்களின் அழகான சிற்பங்களை வெளிப்படுத்துகின்றன. ராமர் கோயிலின் தரை தளத்தில் உள்ள பிரதான கருவறையில், ராம் லல்லாவின் சிலை வைக்கப்பட்டுள்ளது.

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்