HT Temple SPL: வியட்நாமில் மாாியம்மன் கோயில்..வியக்க வைக்கும் அதிசயங்கள்!
Vietnam Mariamman Temple: தென்னிந்தியாவில் காணப்படும் மாாியம்மன் கோயில்களை போன்ற வடிவமைப்பில் இந்த கோயிலும் கட்டப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பாகும்.

இந்தியாவின் தென் கடற்கரையோரத்தில் உள்ள புதுச்சோி மற்றும் காரைக்கால் போன்ற பிரெஞ்சு ஆதிக்க பகுதியில் இருந்து புலம்பெயர்ந்த மக்கள் வியட்நாமில் குடியேறி இருக்கின்றனா். அவ்வாறு குடியேறியவர்கள் காலப்போக்கில் அங்கேயே தங்கிவிட்டனா்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 28, 2025 07:00 AMBad Luck Rasis: கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்.. அஸ்தமனத்தில் சிக்கிய ராசி.. சனி உச்சம்!
Mar 28, 2025 06:35 AMஇரட்டை ராஜ யோகம்.. மீன ராசியில் சூரியன்.. அதிர்ஷ்ட மழையில் நனைய போகும் மூன்று ராசிகள்.. நல்ல லாபம் கிட்டும்!
Mar 28, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : சவால்களை தைரியமா எதிர் கொள்ளுங்கள்.. வெற்றி தேடி வரும்.. இன்று உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Mar 27, 2025 05:16 PMGuru: 2025-ல் பணத்தை அள்ளிக் கொடுக்க வருகிறார் குரு.. இந்த ராசிகள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்க போகுதா?
Mar 27, 2025 05:09 PMகிரகண யோகம்: 2027 வரை சனி விடமாட்டார்.. இந்த ஆண்டு முதல் யோகம் பெறுகின்ற ராசிகள்.. யார் அந்த ராசி?
Mar 27, 2025 12:03 PMLove Horoscope : உங்கள் துணை இன்று அதிக பதட்டமாக உணரலாம்.. 12 ராசிக்கும் இன்று காதல் வாழ்க்கை எப்படி இருக்கு? இதோ
வியட்நாமில் பெரும்பாலான மக்கள் பௌத்தம் மற்றும் பழங்குடி மதங்களைப் பின்பற்றுகிறார்கள். இந்த நாட்டில் இந்துக்களின் ஆதிக்கம் இருந்ததில்லை என்றாலும், இந்து மதத்தின் தாக்கம் அங்கு இருந்தது. இப்போதும் சுமார் 70 ஆயிரம் சாம் இந்துக்கள் அங்கு வாழ்கின்றனர். இருப்பினும், 7 ஆம் நூற்றாண்டில் இருந்து அல்லது அதற்கு முந்தைய காலத்தில் இந்துக் கோயில்கள் வியட்நாமில் இருந்துள்ளன.
அந்த வகையில், 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்திய வர்த்தக சமூகம் ஒரு மாரியம்மன் கோயிலை கட்டியிருக்கிறது. தென்னிந்தியாவில் காணப்படும் மாாியம்மன் கோயில்களை போன்ற வடிவமைப்பில் இந்த கோயிலும் கட்டப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பாகும்.
மாரியம்மன் கோயில் என்பது மாரியம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும். இக்கோயில் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை மயக்கும் இடமாக உள்ளது. வியட்நாமில் உள்ள முக்கிய இந்துக் கோவில்களில் இதுவும் ஒன்றாகவும். நகரத்தில் வசிக்கும் இந்து சமூகத்தினருக்கு ஆன்மீக புகலிடமாக விளங்குவதுடன், பார்வையாளர்களுக்கு கண்கவர் கலாச்சார அனுபவத்தையும் வழங்குகிறது.
கோயிலின் வெளிப்புறங்களில் இந்துக் கடவுள்களின் சிலைகள் மற்றும் வண்ணமயமான மற்றும் விரிவான கோபுர அமைப்புகள் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களை வியக்க வைக்கின்றன. கோயிலின் தெளிவான வண்ணங்கள் மற்றும் நேர்த்தியான விவரங்கள் இந்தக் கோயிலின் வடிவமைப்பை மிகச்சரியாகப் படம்பிடிக்கும் காட்சி இன்பமாகும்.
கோயிலுக்குள் அடியெடுத்து வைக்கும் போது, வசீகரிக்கும் தூப வாசனையும், பக்திப் பாடல்களின் மெல்லிசை ஒலியும் நம்மை ஆன்மிக தலத்திற்குள் வரவேற்கும் விதமாக அமைந்திருக்கிறது. நோய்களைக் குணப்படுத்தும் சக்தி வாய்ந்த தெய்வமாகப் போற்றப்படும் மாரியம்மனின் அருளைப் பெற, செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதேபோல் வியட்நாமில் 8-க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற இந்து கோயில்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / சொற்பொழிவுகள் / ஆன்மிக நூல்களில் தகவல்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்