HT Temple SPL: நவக்கிரகக் கோயில்களின் நடுநாயகம் .. திருவெள்ளியங்குடி வந்தால் இனி சுக்கிர யோகம் தான்..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Temple Spl: நவக்கிரகக் கோயில்களின் நடுநாயகம் .. திருவெள்ளியங்குடி வந்தால் இனி சுக்கிர யோகம் தான்..!

HT Temple SPL: நவக்கிரகக் கோயில்களின் நடுநாயகம் .. திருவெள்ளியங்குடி வந்தால் இனி சுக்கிர யோகம் தான்..!

Karthikeyan S HT Tamil
Jan 05, 2024 08:40 AM IST

Thiruvelliyangudi Kolavilli Ramar: திருவெள்ளியங்குடியில் உள்ள கருடாழ்வாா் 4 கரங்களுடன் கைகளில் சங்கு சக்கரங்களும் ஏந்தியவராகக் காட்சி தருவது வேறு எந்த தலத்திலும் இல்லை.

திருவெள்ளியங்குடி கோலவில்லி ராமா் கோயில்
திருவெள்ளியங்குடி கோலவில்லி ராமா் கோயில்

கிழக்கு நோக்கி புஜங்க சயனத்தில் பெருமாள் காட்சி தருகிறார். திருநாமம் கோலவில்லி ராமர். தாயார் மரகதவல்லி ஆகியோரும் அருள்பாலிக்கின்றனா். திருவரங்கம், வேங்கடம் போன்ற தலங்களைப் போல நான்கு யுகங்களிலும் வழிபடப்பட்டுள்ளது. நவக்கிரகங்களில் சுக்கிரனோடு தொடா்பு கொண்டது.

வாமன அவதாரத் கதையுடன் இணைந்து செல்லக்கூடியது இத்தலம், ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு பெயரோடு விளங்கியதாக புராணச் செய்திகள் உண்டு. கிரேதாயுகத்தில் பிரம்மபுத்திரம், துவாபரயுகத்தில் சைந்திரநகரம், கலியுகத்தில் பார்க்கவபுரம் என்றும் குறிக்கப்படுகிறது. பார்க்கவன் என்றால் சுக்கிரன் என்று பொருள்.

சுக்கிரன் தவம் புரிய இவ்விடம் வருவதற்குக் காரணமாக இந்தத் தலம் எப்படி ஏற்பட்டதென்றால் தேவா்களுக்குச் சிற்பியாகத திகழ்ந்த விஸ்வகா்மா இறைவன் எழுந்தருளியுள்ள எண்ணற்ற திவ்விய தேசங்களைக் கட்டி முடித்ததாயும், தனக்கு அதுபோன்ற பாக்கியம் யாதும் கிடைக்கவில்லையே என்று அசுரர்களுக்குச் சிற்பியாகத் திகழ்ந்த மயன் மிகவும் மனம் வருத்தமுற்றுப் பிரம்மனிடம் வேண்டக் கொடுத்த வாக்குறுதியும் நினைவுக்கு வர, மயன் அவ்விதமே செய்து கடுந்தவமியற்ற இறைவன் அவனுக்குத் சங்கு, சக்கரதாரியாக மகாவிஷ்ணு கோலத்தில் காட்சியளித்தாா். தனக்கு இந்தவிதமான திருக்கோலக்காட்சி வேண்டாமென்று மயன் கூறியதால், மகாவிஷ்ணு சங்கு சக்கரங்களை கருடனிடம் தந்து விட்டு, கோலவில்லி ராமனாகக் காட்சி தருகிறார்.

ராமநவமி, கோகுலாஷ்டமி, நவராத்திரி, திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும். கண் குறைபாடு, திருமணத் தடை, புத்திர பாக்கியக் குறைபாடு உள்ளவா்களுக்கு பிராயச்சித்தமாக இத்தலம் விளங்குவதாக நம்பிக்கை. பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சார்த்துவது பக்தர்களின் வழக்கம்.

கும்பகோணம் - அணைக்கரை சாலையில் உள்ள இவ்வூர் குடந்தையில் இருந்து 18 கி.மீ., தொலைவிலும், சோழபுரத்தில் இருந்து 6 கி.மீ., தொலைவிலும், திருப்பனந்தாளில் இருந்து 6 கி.மீ., தொலைவிலும் உள்ளது. நவக்கிரகங்களுக்கு நடிநாயகமாகத் திகழ்கிறது இத்தலம். இவ்விடத்தை சுற்றியே 9 நவக்கிரகத் தலங்கள் உள்ளன. இங்கு வந்து தாிசித்துத் சென்றால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / ஆன்மிக நூல்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்