HT Temple SPL: திருமாலுக்கு தோஷம் நீக்கிய தலம்..வேண்டியது அருளும் தீர்த்தீஸ்வரர்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Temple Spl: திருமாலுக்கு தோஷம் நீக்கிய தலம்..வேண்டியது அருளும் தீர்த்தீஸ்வரர்!

HT Temple SPL: திருமாலுக்கு தோஷம் நீக்கிய தலம்..வேண்டியது அருளும் தீர்த்தீஸ்வரர்!

Karthikeyan S HT Tamil
Jan 30, 2024 07:05 AM IST

அன்னை திரிபுர சுந்தரி சன்னதியும் தீர்த்தீஸ்வரரின் சன்னதியும் கிழக்கு திசையை நோக்கி அமைந்திருப்பது இக்கோயிலின் சிறப்பம்சமாகும்.

தீர்த்தீஸ்வரர், சுந்தரி அம்மன்
தீர்த்தீஸ்வரர், சுந்தரி அம்மன்

மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கிய பழமையான ஆலயம் இது. ராஜகோபுரத்தை கடந்து கோயிலுக்குள் கால் வைத்தவுடன், பறவைகள் எழுப்பும் இனிமையான ஓசை நம்மை வரவேற்கும். பிறகு தீர்த்தீஸ்வரர் தரிசனம். அவரது சன்னதியில் நிற்கும்போது நிம்மதியை உணர முடியும். பின்னர் சன்னதியை வலம்வந்தால் வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் சுப்பிரமணியரை தரிசிக்கும் போது பேறு கிடைக்கும். அதோடு திரிபுர சுந்தரி அம்பாளையும் வழிபடலாம்.

இங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையே சுப்பிரமண்யர் சன்னதி உள்ளது. இந்த அமைப்பை சோமாஸ்கந்தர் என்கிறோம். அன்னை திரிபுர சுந்தரி சன்னதியும் தீர்த்தீஸ்வரரின் சன்னதியும் கிழக்கு திசையை நோக்கி அமைந்திருப்பது இக்கோயிலின் சிறப்பம்சமாகும். கருவறையைச் சுற்றியுள்ள சுவரில் விநாயகர், தட்சிணா மூர்த்தி, விஷ்ணு, பிரம்மா மற்றும் துர்க்கையுன் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சண்டிகேஸ்வரர் வழக்கான நிலையில் இருக்கிறார்.

வரசித்தி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், தர்ம சாஸ்தா, பால தண்டாயுதபாணி, நவக்கிரகம், நடராஜர், கால பைரவர் சன்னதிகளும் உள்ளன. பெளர்ணமி மகம் நட்சத்திர நாளில் கோயிலின் அருகில் உள்ள குளத்தில் நீராடி, தீர்த்தீஸ்வரரை தரிசனம் செய்தால் சகல தோஷம் தீரும். பங்குனி அமாவாசை முதல் மூன்று நாட்களுக்கு தீர்த்தீஸ்வரர் மீது சூரியக்கதிர் படர்கிறது. மகிழ மரம் தல விருட்சமாக உள்ளது. 

இக்கோயிலின் வரலாற்றை பொறுத்தவரை, மூர்த்தி, தீர்த்தம், தலம் என மூன்றிலும் சிறந்து விளங்கும் இத்தலம் புராணத்தில் தீர்த்தபுரி என்று அழைக்கப்பட்டது. மது, கைடபர் என்ற அரக்கர்கள் ரிஷிகளுக்கு இடையூறு செய்து வந்தனர். இவர்களை அழிக்க திருமாலிடம் முறையிட்டனர் ரிஷிகள். அவரும் சக்ராயுதத்தை ஏவி அரக்கர்களை வதம் செய்தார். வேதத்தில் சிறந்த அவர்களை அழித்ததால் திருமாலுக்கு தோஷம் ஏற்பட்டது. எனவே இங்கு வந்து தீர்த்தீஸ்வரரை வேண்டு தோஷம் நீக்கப்பெற்றார் திருமால். இதனால் மூலவர் மால்வினை தீர்த்தர் என்று அழைக்கப்படுகிறார்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்