Tamil News  /  Astrology  /  Special Story About The History Of Irukkankdi Mariamman Temple

HT Temple Special: கண் நோய் தீர்ப்பாள்.. வேண்டும் வரம் அருளும் அன்னை மாரியம்மன்!

Karthikeyan S HT Tamil
Jan 19, 2024 08:30 AM IST

Irukkankdi Mariamman Temple: அன்னை மாரியம்மன் வலது காலை மடக்கி இடது கால் தொங்கவிட்ட நிலையில் அமர்ந்திருக்கும் கோலம் மற்ற அம்மன் திருக்கோயில்களில் காண முடியாத சிறப்பான ஒன்றாகும்.

இருக்கன்குடி மாரியம்மன் கோயில்.
இருக்கன்குடி மாரியம்மன் கோயில்.

ட்ரெண்டிங் செய்திகள்

கருவறை அழகிய விமானத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. அர்த்த மண்டபம் மற்றும் மகாமண்டபம் கருவறைக்கு அருகில் அமைந்துள்ளன. நந்தீஸ்வரர் மற்றும் கொடிமரம் மகா மண்டபத்தின் முன்புறம் அமைந்துள்ளன. அன்னை மாரியம்மன் வலது காலை மடக்கி இடது கால் தொங்கவிட்ட நிலையில் அமர்ந்திருக்கும் கோலம் மற்ற அம்மன் திருக்கோயில்களில் காண முடியாத சிறப்பான ஒன்றாகும். 

தற்போது மாரியம்மன் சன்னதி அமைந்திருக்கும் பகுதிக்கு சற்றுத் தொலைவில் அம்பாள் சிறுமிக்குக் காட்சி கொடுத்த இடத்தில் ஆதி அம்பாள் சந்நிதி உள்ளது.இங்கே அம்மனின் திருவுருவத்துக்கு பதில், அம்பிகையின் திருவடிவம் பொறித்த சூலம் மட்டும் வைக்கப்பட்டுள்ளது. உற்சவ அம்மன் ஊருக்குள் இருக்கிறது. ஆடி வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே உற்சவ அம்மன் பிரதான கோயிலுக்கு எழுந்தருளுகிறாள்.

கருவறையின் தென்புறம் அரச மரத்தடியில் சித்திவிநாயகர் சன்னதியும் மற்றும் ஸ்ரீ வடக்குவாய்ச்செல்லியம்மன், ஸ்ரீ வெயிலுகந்தம்மன் சன்னதிகள் அமைந்துள்ளன. கருவறையின் வடக்குப் பகுதியில் ஸ்ரீ பைரவர், ஸ்ரீ வீரபத்திரர், ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ காத்தவராயர் சன்னதிகள் அமைந்துள்ளன. வெளிப்பிரகாரத்தின் தென்கிழக்குப் பகுதியில் ஸ்ரீ கருப்பசாமி சன்னதி அமைந்துள்ளது.

வெளிப்பிரகாரத்தின் தென்கிழக்குப் பகுதியில் கருப்பசாமி சன்னதி அமைந்துள்ளது. முடிகாணிக்கை இத்திருக்கோயிலின் பிரதான பிரார்த்தனை ஆகும். இருக்கன்குடி மாரியம்மனை தரிசிக்க வருபவர்கள் விளக்கு போடுதல், அம்மனுக்கு புடவை சாத்துதல், பூஜை செய்தல் போன்ற வழக்கமான வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் அக்கினிச் சட்டி எடுத்தல், ஆயிரங்கன் பானை எடுத்து வலம் வருதல் போன்றவைகள் மூலம் அம்மனை வழிபடுகின்றனர்.

குழந்தை இல்லாதவர்கள் இந்த அம்மனின் சந்நிதிக்கு வந்து கரும்புத் தொட்டில் கட்டுவதாக வேண்டிக் கொள்கின்றனர். குழந்தை பிறந்ததும் கரும்பில் தொட்டில் செய்து, அதில் குழந்தையைப் படுக்க வைத்து அம்மனின் சந்நிதியை வலம் வருகின்றனர். கண்கள் தொடர்பான நோய் உள்ளவர்கள் இங்கு வந்து அம்மனின் அபிஷேக தீர்த்தத்தை கண்ணில் விட்டுக்கொள்ள, நோயில் இருந்து நிவாரணம் கிடைப்பதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்